Sunday, May 25, 2008

தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

RSS ன் கொழுப்பெடுத்த அயோக்கியத்தனத்தை தனது பத்திரிக்கையில் வாந்தியெடுத்ÐûÇÐ திணமணி எனும் பார்ப்பனமணி பத்திரிகை. இந்து மக்கள் கட்சி எனும் RSS பயங்கரவாதிகளின் அல்லக்கை கட்சி ஒன்றின் அடியாள் படை தாதா நாயான அர்ஜூன் சம்பத என்பவன் பெயரில் வெளி வந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை(ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால், Friday March 7 2008 00:00 IST, தினமணி). சிதம்பரத்தில் சமீபத்தில் தமிழில் பாடுவதற்க்கு தடையாக இருந்த தீட்சிதர்களை பின் வாங்க வைத்து பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் ரொம்ப நல்லவன் போல எழுதுகிறான் இந்த கோயம்புத்துர் கொலைகார பொறுக்கி. ²தோ தீட்சிதர்கள் அங்கு தமிழை எதிர்க்கவில்லை என்பது போலும். இன்னாள் வரை தீட்சிதர்கள் அங்கு வேறு சாதியினரையும் தமிழையும் வளர்த்தே வந்துள்ளன்ர் எனபது போலும் மாறாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட திராவிட கம்யுனிஸ்டு கட்சியினர்தான் பிரச்சினை உண்டு பன்னுவதாகவும் கொழுப்பெடுத்து பேசுகிறான் ஒரு பார்ப்பன பயங்கரவாதி. ஆயினும் தீட்சிதர்கள் வரலாறும் சரி இன்றைய நடப்பும் சரி மக்களை அவமதிப்பதாகவே உள்ளது.ஏதோ இந்துக்கள் எல்லாருக்கும் நான் தான் ஹோல்சேல் பாதுகாப்பு குத்தகை எடுத்துள்ளேன் என்பது போல கதறும் இந்த வெறியர்கள் நேற்று அதாவது 6 மார்ச் 2008 ல் சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடியததற்க்Ì தீட்டு கழித்து தீட்சிதர்கள் நடத்திய பரிகார பூசையை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?தீட்சிதர்களின் வரலாறும் ஆக ஆயோக்கியத்தனமானதுதான். இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களை அவமானப்படுத்தி எழுதியுள்ள இந்த தினமணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவர தமிழ் ஓலைகள் ராஜ ராஜ சோழனால் பூட்டியிருந்த அறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவமே கூட தீட்சிதர்கள் தமிழை எந்தளவுக்கு அவமானப்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு ஒரு சான்றாகும். லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் பாடல்களை ஒரு அறையில் பூட்டி நாசம் செய்ததுடன் இல்லாமல். ராஜ ராஜ சோழன் வந்து அந்த அறையை திறக்க சொன்ன போது திறக்க மாட்டேன் என்று அடாவடித்தனமும் செய்தனர் (இன்று தமிழில் பாடுவதற்க்கு செய்வது போலவே). இதில் பாதிக்கும் மேற்ப்பட்ட தேவரப் பாடல்கள் தீட்சிதர்களின் அயோக்கியத்தனத்தால் அழிந்து போய் மீதியுள்ளவைதான் கிடைத்தன. வரலாறு இப்படியிருக்க அர்ஜூன் சம்பத அல்லது அவன் பெயரில் எழுதிய அல்லக்கை வரலாற்றை திரித்து எழுதுகிறது. அன்றாட சம்பவங்களையே திரித்து எழுதுபவர்களுக்கு வரலாற்றை திரிப்பது பெரிய விசயமில்லைதான்.இது அன்று வரலாறு என்றால் இன்று கடந்த சில வருடங்கÇ¢ல் மட்டும் சிதம்பரம் கோயிலில் வளாகத்திலேயே சில கொலைகளும், பாலியல் வன்புணர்வு குற்றம் ஒன்றும் நடந்துள்ளது. இவற்றில் எல்லாம் தீட்சிதர்கள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்படி சிதம்பரம் கோயிலின் புனிதத்தை தமது சொந்த அரிப்புக்காக கெடுத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆதரிக்கிறது இந்த RSS கும்பல்.சாளுக்கிய மன்னனுக்கும், சோழப்பேரரசின் இளவரசிக்கும் பிறந்த குலோத்துங்க சோழனுக்கு முடியுரிமை வழங்குவதா கூடாதா என்ற சர்ச்சை எழுந்தபோது, தில்லை தீட்சிதர்கள் சாளுக்கிய வாரிசினை ஆதரித்துப் பட்டம் சூட்டத் துணை நின்றதாகவும், அதன்பேரில் தீட்சிதர்கள் குலோத்துங்கனிடமிருந்து பல உரிமைகளையும் தில்லைக் கோவில் சொத்துக்களையும் பெற்றதாகவும் வரலாறு சொல்கிறது. அதில் இருந்து தீட்சிதர்கள் சாளுக்கிய வம்சத்தில் இருந்து சோழனாக மாறிக்கொண்ட குலோத்துங்கன் காலத்தில் செப்பேடுகளில் மட்டும் தேவாரம் இருக்கட்டும். தினமும் பாடத்தான் வேண்டுமா? என்று தந்திரமாக தமிழை நடராசனிடம் இருந்து அகற்றி விட்டனர். இந்த சதியினை நக்கீரன் பத்திரிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் தினமணியோ வரலாற்றையே புரட்டிப்போடுகிறது.பார்ப்பன பயங்கரவாத அமைப்பான RSS என்றைக்கும் பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கைய மதித்ததே கிடையாது. நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் மாமிசம் உண்ணும் கடவுளர்களையும், சிறு தெய்வங்களையும் அவமரியாதையாக கருதி அவற்றை புணீதப்படுத்தி பார்ப்பனமயமாக்குவதுடன் இது போல ஏற்கனவே பார்ப்ப்னியமயமாக்க்கப்பட்ட கோயிலகளில் சதாரண மக்களை அவமரியாதை செய்வதையும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைவதாகட்டும், தேர் இழுப்பதில் உரிமை கேட்பதாகட்டும் இவர்கள் ஆதிக்க சாதியினர் பக்கமிருந்தே குரல் கொடுப்பர். அது போலவேதான் இப்பொழுதும் கூட பார்ப்பனியத்தின் பக்கமிருந்து குரல் கொடுக்¸¢றார்கள்.10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.'அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்¸¢றார்கள்?அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.இத்தனை வக்கனையாக பேசும் RSS மக்கள் விரோத கும்பல் நீதிபதியிடம் ஆறூமுகச்சாமியை விடமுடியாது என்பதற்க்கு மறுப்பாக தீட்சிதருக்கும், சம்ஸ்கிருதத்திற்க்கும் பாரம்பரிய உரிமைகள் இருப்பதாகவும், பிறரை அந்த மண்டபம் வரை அனுமதிப்பது நகைகளுக்கு ஆபத்து என்றும் கூறி வாதாடியதை எதிர்த்து எதேனும் செய்வார்களா?அதாவது தீட்சிதர் தவிர்த்து, சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் கோயிலில் உரிமையில்லை என்பதுதான் அவர்களின் வாதமெனில் இந்துக்களின் நலனுக்கு போராடும் RSS கும்பல் இன்னேரம் தீட்சிதர்களின் மண்டையில் தட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா?அதாவது தீட்சிதர் தவிர்த்தும், சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் உரிமையில்லை என்பது சாதிவெறியில்லையா? மொழி வெறியில்லையா?தீட்சிதர் தவிர்த்து மற்றயவர்களை கோயிலில் விட்டால் திருட்டு போய்விடும் என்று சூத்திரன் அத்தனை பேரும் திருடன் என்று சொல்வது RSS வெறியர்களுக்கு தேனாக இனிக்கிறது போலும்.இவையெல்லாம் சாதி வெறி, மொழி வெறி பிடித்து பெரும்பான்மை மக்களை அவமதிப்பவர்கள் RSS உள்ளிட்ட பார்ப்பன வெறீ கும்பலா அல்லது வேறு யாருமா என்பதை தெளிவாக காட்டுகின்றன.இவற்றையெல்லாம் பிரசூரிப்பதற்க்கு திணமணியின் கழுத்தில் பாயந்து வயிற்றில் ஊடும் பூனூல் அனுமதிக்காது.இப்படியெல்லாம் பேசினால் உடனே இஸ்லாமில் வேற்று மொழியில் இருக்கிறதே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் இவர்கள். மசூதிகளில் அராபியில் ஓதுகிறார்கள்தான். அங்கு தாய்மொழிக்காகக் குரல் எழும்பி, அதற்கு இமாம்கள் தடைபோட்டால் அதற்கும் குரல்கொடுப்போம். ஆனால் கிறித்தவமோ, இசுலாமோ தமிழ் மொழியை நீச பாசை என்றோ, தமிழ்மக்களை-சூத்திரர்களை 'வேசிமக்கள்'என்றோ சொல்வது இல்லை அதுவும் நீதிமன்றம் முதல் இதோ தினமணியில் அறிக்கை வடிவில் வரை தமிழை அவமானப்படுத்திவிட்டு தைரியமாக வலம் வருவதில்லை அவர்கள் என்பதும் உண்மை.பிறமதத்துக் காரர்களிடம் தமிழில் வழிபாடு நடத்து என்று வலியுறுத்துவார்களா என்று வக்கனையாக கேட்க்கும் இவர்கள் இங்கு கிறித்துவ வழிபட்டு இடங்களில் தமிழில்தான் வழிபாடு நடக்கிறது. மேலும் பைபிளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து அதனை வாசிக்கக் கல்வியை அவர்கள் தந்ததால்தான் கல்வியும் கிறித்தவமும் ஒடுக்கப்பட்டமக்களிடையே பரவிற்று. முதலில் இந்துமத வேதங்களையும், உபநிசத்துக்களையும், அப்படியே சங்கரர் எழுதிய சரோஜாதேவி புத்தகத்தையும், சவுந்தர்ய லகரியையும் மொழிபெயர்த்துவிட்டு இதைப் பத்திப் பேசலாம்.இதே முற்போக்கு புரட்சிகர அமைப்பினர்தான் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களுக்கு, பெண்ணடிமைத்தனங்களையும், தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அமைதியாக அயோக்கியத்தனம் செய்யும் போதெல்லாம் ஏதோ பார்ப்ப்னிய மதத்தில் ஆக சிறப்பாக பல்வெறு விசயங்கள் இருக்கிறது என்று பூ சுற்றுவதும். அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் உடனே இஸ்லாமில் இல்லையா, கிருத்துவத்தில் இல்லையா என்றோ அல்லது பாகிஸ்தானில் இல்லாததா, பங்களாதேசில் இல்லாதாதா என்றும் வேறு மாதிரி பேசுவதும் என்பதாக இரட்டை நாக்கு கொண்டவர்கள் இவர்கள். ஏதோ நாம் இஸ்லாம், கிருத்துவம், பாகிஸ்தான், பங்களாதேஸ் எல்லாம் மிக முற்போக்கானவை என்று சொன்னது போல.இன்று நாத்திகனுக்கு அங்கென்ன வேலை என்று கேட்க்கும் கோயம்புத்தூர் கொலைகாரன் அர்ஜூன் சம்பத என்ற மனிதகுல விரோதி, ஆத்திகரான ஆறுமுகசாமி தனது உயிருக்கு நாத்திகர்களான மக இகவினர் துணையின்றி தீட்சிதர்களால் ஆபத்து என்று கோர்ட்டில் ஒப்படைத்து சிறை புகுந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கலாமே? தஸ்லீம நஸ்ரீனுக்கு ஆதரவளிக்க முன் வந்த வாய்களுக்கு ஏன் ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிக்க முடியவில்லை?அதாவது சர்ச்சையின் நோக்கம் ஆன்மிகமாக இல்லாததுதான் இவர்களுக்கு கவலையளிக்கிறதாம். உண்மையில் இவர்களுக்கு கவலையளிப்பது இவர்களின் பார்ப்ப்னிய ஆன்மிக ஆதிகத்திற்க்கு ஆபத்து உருவாகியுள்ளது என்பதே ஆகும். ஆத்திகரான ஆறூமுகச்சாமிக்கெதிராக தமிழுக்கெதிராக வரலாறு நெடுகிலும் தீட்சிதர்கள் சதி செய்த பொழுதெல்லாம் கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பற்ற அடிமை கும்பல் தலைவான அர்ஜூன் சம்பத் இன்று தமிழர்களின் உரிமைக்கு போராடும் போது ரொம்ப நல்லவன் போல சதி செய்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பதின் பின்னால் உள்ள சதியை நாம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.என்றைக்கு பெரும்பான்மை மக்களின் பண்பாட்டை அவமதிப்பது என்றும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவமதித்து மறுப்பதும் என்றும், பிற்போக்குத்தனத்தால் மக்களை முட்டாள் ஆக்குவது என்றும் ஆகிவிட்டதோ அன்றே அங்கு ஆத்திகம் நாத்திகம் என்பதெல்லாம் இல்லை மாறாக மக்களின் உரிமை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. அதனால் அதற்க்கான போராட்டத்தின் நியாயத்தைத்தான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் பேச வேண்டுமேயொழிய அதை விடுத்து அப்பொழுது வந்து ஆத்திகம் நாத்திகம் என்று பேசினால் உண்மையில் அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்றுதான் அர்த்தம். அர்ஜூன் சம்பத்தும் சரி அவருக்கு இந்த கட்டுரையை எழுதி கொடுத்த கும்பலும் சரி சூழ்ச்சிகள் செய்வதில் விற்பன்னர்கள் என்பது சமீபத்தில் தென்காசி இந்து முன்னணியினர் குண்டு வைத்து கைதான சம்பவத்திலும், கோவையில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி அப்பாவிகளை மாட்டி விட்ட வழக்கிலும் சரி தெளிவாகவே அம்பலமாகியுள்ளது.ஆறுமுகசாமி சிவபக்தர்தான். அவரின் பக்தியை இந்துமக்கள் கட்சியும் தீட்சிதர்களும் மதிக்கிறார்கள். அவர்களே அவரின் பக்தியை மெச்சி, நாத்திகம் பேசுறவாளிடம் இருந்து தனியாகித் தன்னந்தனியனாகி ஆறுமுகசாமி வந்தால் அவரை அரவணைப்போம் என்கிறார்கள். இதை நாம் நம்புவதற்கு நாம் ஒன்றும் நந்தனார் மாதிரி அப்பாவிகள் இல்லை. ஏனெனில் நேற்று போலிஸ் பாதுகாப்புடனும், மனித உரிமை கழகம், மக இக உள்ளிட்ட தோழமை அமைப்பினரின் பாதுகாப்புடன் சென்ற பொழுதே தீட்சிதர்கள் போலிசையும் தாக்கி போராடியவர்களையும் தாக்கினர் எனும் போது தனியாக வந்தால் இவர்களின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அரவணைப்பையும், பின்னர் சோதியில் கலக்கவைக்கும் பித்தலாட்டத்தையும். தில்லைக்கோவிலின் தென்வாயிலே சொல்கிறது. அன்று நந்தன்காலத்தில் ம.க.இ.க. தோழர்கள் இல்லை. நீதிமன்றம் (அநீதியே சொன்னாலும் அதன் பெயரிலாவது) இல்லை. இருந்திருந்தால். நந்தன் கதையை இன்று இருப்பது போல படித்திருக்க நியாயமில்லை.பார்ப்ப்னியம் அதுவும் குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் வேற்று சாதியினரையும், மாற்று கருத்துள்ளவர்களையும் அரவணைக்கும் வரலாறு நந்தன், வள்ளலார் முதல் இன்று ஆறுமுகச்சாமி வரை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நாத்திகர்களான மக இக, மனித உரிமை கழகம் போன்ற அமைப்புகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருந்தால் ஆத்திகர்களான நந்தனையும், வள்ளலாரையும் இன்னும் சில பல பார்ப்ப்னிய எதிர்ப்பு தியாகிகளின் உயிரையும் பாதுகாத்திருக்கலாம்.இந்தியாவெங்கும் பொய்யையும் புணை சுருட்டையும் ஆயுதமாக கொண்டு வரலாற்று அவமரியாதை துடைக்க கட்டிடங்களை இடித்து தள்ள புறப்பட்ட வாணர கும்பலின் தலைமை கொலைகார தறுதலையான அர்ஜூன் சம்பத். சிதம்பரத்தின் தெற்கு வாயில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் அவமரியாதைச் சின்னமாக நிற்கிறதே. இந்து மக்கள் முன்னணி அந்த சுவரை இடிக்க கரசேவை ஆரம்பித்துவிட்டு நியாயவான் போல பேசட்டும்.இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது. நக்சல்பாரிகள்தான் தமிழைக் காப்பாற்றினர். பார்ப்பனியத்தின் கொலைவெறிச் சதியை முறியடித்தனர். ஏனென்றால், எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,எங்கெல்லாம் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வசந்தத்தின் இடி முழக்கமாய் மக்களுக்கு வெற்றியை கொடுக்க களமிறங்கும் நக்சல்பாரி. அதுதான் சிதம்பரம் தமிழ் வழிபாடு விசயத்திலும் நடந்துள்ளது.இன்று தமிழ், ஆத்திகம் என்று பேசும் இன்று பார்ப்பன அடியாளும், அவனது கட்டுரையை பிரசூரித்த பார்ப்பன பத்திரிகையும் இது வரை தமிழர் என்ற சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பிரச்சினைக்கும் சரி, இந்துக்கள் எனப்படுபவர்கள் இந்து என்ற பெயரிலேயே அவமாரியதை செய்யப்படும் பிரச்சினையிலு சரி குரல் கொடுத்ததேயில்லை. அங்கெல்லாம் நாம்தான் கொடுத்துள்ளோம். அதே போலத்தான் ஆறுமுகச்சாமி விசயத்திலும்.சுயமரியாதையுள்ள ஓவ்வொருத்தனும் அர்ஜூன் சம்பத் போன்ற ரவுடிகளின் திமிர்பிடித்த பேச்சுக்களை பிரசூரிக்கும் பார்ப்பன கொழுப்பெடுத்த தினமணியை கடுமையாக கண்டிக்க வேண்டியுள்ளது.இதனை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
நன்றி -அசுரன்

யார் தேச துரோகி???நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் பிரதமருக்கோ, தேர்ந்து எடுக்கும் உங்களுக்கோ இந்த நாட்டின் மானத்திற்கோ எந்த சம்மந்தமும் இல்லை என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? "Who represents India?" என்று ஒரு உண்மைக் குடிமகனிடம் கேளுங்கள் "Men in Blue" என்று அழகாக சொல்லுவார்கள். அப்ப ஜனாதிபதியெல்லாம் சுத்த வேஸ்ட்டா என்ற அபத்தமான கேள்வியை கேட்டால் "யாரோ ஒரு அம்மாதான் ஜனாதிபதி ஆனா அந்தம்மா பேருதான் நியாபகத்தில் இல்லை" என்று பதில் கிடைக்கும்!ஒரு ஒரு ஒலிம்பிக் போட்டிகளிளும் ஒரு வெங்கலம் அல்லது ஒரு வெள்ளி வாங்குவது இந்தியாவுக்கு பெருமையாம், இந்த நீலச்சட்டை நாயகர்கள் ஒரு நாள் உலகக் கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் அவமானமாம்?? உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் வெறும் 10 நாடுகள் பங்கு பெரும் கிரிக்கெட் போட்டி எப்படி உலகக் கோப்பையானது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. அனைத்து நாடுகளும் பங்கு பெரும் ஒலிம்பிக் ஒரு பொருட்டே அல்ல!!முதலில் இந்த நீலச்சட்டை நாயகர்களின் யோக்யத்தை பார்கலாம். இந்த நீலச்சட்டை விரர்கள் BCCI என்ற பணம் காய்க்கும் நிறுவனத்தின் செல்லப்பிள்ளைகளே அன்றி இந்தியாவின் நேரடி செல்லப்பிள்ளைகள் அல்ல (உண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தாங்கிப்பிடிக்க ஒலிம்பிக் வீரர்கள் தான் வேண்டுமேயன்றி இந்த நீலச்சட்டைகரர்கள் அல்ல). போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயிற்சியில் ஈடுபடுவது போல் பத்திகைக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு தண்ணியைப்போட்டு மட்டையாகிக் கிடந்த மேட்டர் இவர்கள் தோத்தால் மட்டும் பத்திரிகையில் இடம்பெரும். இவர்களில் எத்தனை பேர் வருமான கணக்கு சரியாக காண்பித்து வரி செழுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? உண்மையைக்கூற வேண்டும் என்றால் சரியாக வரி செழுத்தாமல், சரியாக விளையாடாமல் கிடைத்த பெயரை பணமாக்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் அல்லவா தேச துரோகிகள்?இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள் திருந்த வேண்டியது நாம்தான், கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!நன்றி - கருப்பன்

Monday, May 12, 2008

இது ‘கார்ப்பரேட்’களின் காலம்

அ. மார்க்ஸ்
சென்ற வாரத்தில் இந்தியப் பத்திரிகைகள் அனைத்திலும் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது ரத்தன் டாடாவின் ‘நேநோ’ கார். முதல் பக்கத்திலேயே வண்ணப்படம்; உள்ளே விரிவான கட்டுரை. இனி இந்திய மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு லட்ச ரூபாய் காரில் எல்லோரும் உலா வரப்போகிறார்கள். டாட்டாவுக்கு இணை டாட்டாதான், சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிட்டார்களே என்கிற ரீதியில் புகழ் பாடாத பத்திரிகைகளே இல்லை. அதி நவீனமான வடிவமைப்பு, இந்தியச் சாலைகளுக்கு ஏற்றது, நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களுக்கும் ஏற்றது.... இப்படியான விவரணங்கள்.‘பிரமிடின் அடித்தட்டுக்கு அதிர்ஷ்டத்தை’ அள்ளித் தரும் அற்புதம் என்றும் ஓர் இதழ் எழுதியது. ஆக இவர்களின் கணக்குப்படி இந்தியப் படிநிலை வரிசையில் ஆகக் கீழாக உள்ள மக்கள் யாரென்றால் சுமார் ஒன்றரை லட்சம் செலவு செய்து டாடாவின் புதிய காரை வாங்கக் கூடியவர்கள்தான். அதற்கும் கீழே உள்ள நாற்பது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இவர்களைப் பொறுத்தமட்டில் கணக்கில் வராதவர்கள்.100 சிசி மோட்டார் சைக்கிள்களைத் தற்போது பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இனி ‘கவலைப்பட வேண்டியதில்லை’ இரு சக்கரத்திலிருந்து நான்கு சக்கரத்திற்கு மாறிவிடலாம். இதற்கும் கீழே உள்ளவர்கள் இன்றைய கார்ப்பரேட் உலகின் கரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.டாட்டாவின் நேநோ கார் செப்டம்பர் வாக்கில் இந்தியச் சாலைகளில் தவழுமாம். ஒரு லட்சரூபாய் எனச் சொல்லப்படுகிறதேயழிய குறைந்தபட்ச விலை 1,30,000 வரை இருக்குமாம். அதோடு “ஏ.சி. ’’ முதலான வசதிகளுடன் கூடிய “டீலக்ஸ்’’ மாடல்கள் இரண்டு லட்சம் வரை ஆகக்கூடும். மத்திய தர வர்க்கத்திற்குக் கடன் கொடுக்கத் தயாராக உள்ள கார்ப்பரேட் வங்கிகளின் உதவியோடு இனி அவர்கள் நேநோக்களில் ஜமாய்க்கலாம்.மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடாவின் ‘சிங்கூர்’ தொழிற்சாலையிலிருந்து வெளிவர உள்ளன இந்த மலிவு விலை சொகுசுகள். சென்ற ஆண்டு தொடக்கத்தில் இந்தத் தொழிற் சாலைக்கான நிலப்பறிப்பை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் நடத்திய போராட்டங்களை நாம் மறந்துவிடக் கூடாது. நந்திகிராம் மக்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களின் விளைவாக அந்த ‘புராஜெக்டை’ நிறுத்திக் கொண்டதாக அறிவித்த மேற்கு வங்க அரசு எக்காரணம் கொண்டும் டாட்டாவின் ‘சிங்கூர்’ கார் தொழிற்சாலைத் திட்டத்தை நிறுத்த முடியாது என உறுதியாக அறிவித்தது. அரசைப் பொருத்தமட்டில் அது ஒரு கவுரவப் பிரச்சினை.சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இன்று டாட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தடையற்ற மின்வசதி, நீர் வசதி ஆகியவற்றுக்காக மேலும் 135 கோடி ரூபாய் மானியமும் வழங்கப் பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் இன்று ஒரு லட்ச ரூபாய் காரை டாடா நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பஞ்சுக்கும், கோதுமைக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகுமாறு அறிவிக்க வேண்டும், கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை ஏற்கத் தயங்கும் அரசுகள் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் பெரு நிறுவனங்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும், மானியங்களையும் அளிக்கத் தயாராக உள்ளன.புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவும் விவசாயத்திலும் கார்ப்பரேட்களின் ஊடுருவல்களாலும் தினந்தோறும் தற்கொலை செய்துகொண்டு செத்துமடியும் விவசாயிகள் குறித்துக் கவலைப் படத்தான் இங்கு யாருமில்லை.‘டூ வீலர்கள்’ இடத்தை இந்த நான்கு சக்கர சொகுசுகள் நிரப்பும்போது அதற்குரிய வகையில் இங்கே அகக் கட்டுமானங்கள் விரிவாக்கப்படுதல் குறித்து அரசிடம் என்ன மாதிரி திட்டங்கள் உள்ளன என்பதும் விளங்கவில்லை.ஏற்கனவே நெரிசல் நிறைந்துள்ள நகரச் சாலைகள் குறித்தும், புதிய மாற்றங்களின் மூலம் உருவாகவுள்ள சுற்றுச் சூழல் பிரச்சினைகள் குறித்தும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.விவசாயம், சிறு தொழில்கள் மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைச் சேவைகள் ஆகியவற்றிற்கு மானியங்கள் அளிப்பதைக் கடுமையாகக் சாடும் நம் புதிய பொருளாதாரவாதிகள், கார்ப்பரேட்கள், ஊடகங்கள்.... ஆகியோர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் டாட்டா போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அபரிமிதமான வரிச்சலுகைகள், அதிகாரங்கள் ஆகியன பற்றிப் பேசுவதே இல்லை. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகளால் மட்டும் அடுத்த சில ஆண்டுகளில் அரசுக்குச் சுமார் 1,37,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும் என மத்திய அரசே ஒத்துக் கொண்டுள்ளது.இன்னொரு பக்கம் ஒரு மக்கள் நல அரசு அளிக்க வேண்டிய குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்புகளையும்கூட இந்த ஊடகங்கள் கண்டிக்கத் தவறுவதில்லை. இன்றைய சூழலுக்குப் பொருத்தமற்றவை எனவும், பணவீக்கத்தை ஏற்படுத்துபவை எனவும் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறத் தயங்குவதில்லை. ஓர் உதாரணம் மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன். மத்தியில் ஆள்கிற ஐக்கிய முன்னணி அரசு தனது குறைந்தபட்சத் திட்டத்தில் அறிவித்திருந்த ஒரு நல்ல விசயம் ‘தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம்’.ஏற்கனவே இருந்து வந்த ‘உணவுக்கு வேலை’ முதலான திட்டங்களைக் கொஞ்சம் ‘உல்டா’ பண்ணி உருவாக்கப்பட்டதுதான் இது என்ற விமர்சனங்கள் இருந்த போதிலும் கிராமப்புறத்தில் உள்ள வேலை வாய்ப்பற்றோருக்கு ஆண்டாண்டுக்குக் குறைந்த பட்சம் 100 நாள்கள் வேலையை உத்தரவாதம் செய்கிற இந்தத் திட்டம் உண்மையிலேயே வரவேற்கப்படக்கூடிய ஒன்று. தற்போது 330 மாவட்டங்களில் மட்டுமே செயல்பாட்டில் உள்ள இத்திட்டத்தை நாடு முழுமையும் விரிவுசெய்யப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.சுமார் 10,000 கோடி ரூபாய் வரை இன்று இதற்குச் செலவிடப்படுகிறது. அமார்த்தியாசென், ஜீன் டிரெஸ் போன்ற பொருளியல் நிபுணர்கள், இடதுசாரிகள் முதலியோர் இதனை வரவேற்றுள்ளனர். கிராமப் பொருளாதாரம் வளம் பெறும்; சமூக சமத்துவத்திற்கும் கிராமப்புறத் தொழிலாளிகள் ஏராளமானோர் பயன் பெறுவதற்கும் வழிவகுக்கும் எனவும் இவர்கள் கருதுகின்றனர்.ஆனால், நம் கார்ப்பரேட் ஊடகங்கள் ஆரம்பம் முதல் இந்தத் திட்டத்தைச் காய்ந்து, கண்டித்து வருவது கவனிக்கத் தக்கது. ‘கோணல் புத்தி’ ‘அரசு நிதியை அழிக்கும் முயற்சி’ ‘விலை உயர்ந்த நகைச்சுவை’ என்பன இத்திட்டத்தைக் கேலி செய்வதற்கு நம் ஊடகங்கள் பயன்படுத்திய சொற்களில் சில. இவர்களின் கருத்துப்படி அரசுத் தலையீடு, அரசுச் சலுகைகள் என்பன கார்ப்பரேட்களுக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும். சந்தையை அதற்குத் தக அரசு கையாள வேண்டும். மாறாக மக்கள் நலப் பிரச்சினைகளில் அரசு தலையீடு செய்வதும், அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதும், சலுகைகள் வழங்குவதும் ‘மரணத்தை நோக்கிச் செல்லும் செலவு மிக்க பயணம்.’இதைத்தான் இவர்கள் ‘சந்தை சார்ந்த சீர்திருத்தம்’ என்கின்றனர். விசாயிகளின் நிலத்தைப் பறிப்பது முதலான நடவடிக்கைகளில் அரசு தலையிடுவது இவர்களைப் பொருத்தமட்டில் ‘சந்தைக்குப் பொருந்தாத அரசுத் தலையீடு’ என்கிற அம்சத்திற்குள் வராது.‘இந்திய வளர்ச்சி நிறுவனம்’ என்கிற அமைப்பு வெளியிட்ட ‘ஆய்வு’ என்பதைப் பற்றிச் சில மாதங்களுக்கு முன்னர் நம் கார்ப்பரேட் ஊடகங்கள் ஏராளமாய் எழுதிக் குவித்தன. கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம் ‘பணவீக்கத்தை’ ஏற்படுத்தும் என்று இந்த ‘ஆய்வு’ புலம்பியது. பத்திரிகைகள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்ட இச்செய்தியைப் புலனாய்வு செய்த போதுதான் அப்படியான ஓர் ‘ஆய்வே’ நடக்க வில்லை என்று தெரிய வந்தது.அந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஒரு விவாதத்தின்போது ஊகமாகச் சொன்னதை ஒரு நிறுவனத்தின் ஆய்வு முடிவாக கார்ப்பரேட்கள் முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தன. வேலை உத்தரவாதத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக (சுமார் ஒருலட்சம் கோடி ரூபாய்கள்) ஆண்டு தோறும் இராணுவச் செலவுகளுக்காகவும் ஆயுதம் வாங்குவதற்காகவும் ஒதுக்கப்படுகிறது-. மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காத இச்செலவு குறித்து ‘பணவீக்கம்’ ஏற்படுத்தும் என இவர்கள் யாரும் சொல்வதில்லை.கார்ப்பரேட்களுக்குச் சாதகமான நம் அறிஞர் பெருமக்கள் எவரும் இந்த வேலை வாய்ப்புத் திட்டங்கள் எப்படி நடைபெறுகின்றன, யார் பயன் பெறுகின்றனர் என்பதை நேரடியாகச் சென்று பார்த்தவர்களல்லர். ஜீன் ட்ரெஸ் சொன்னது போல அப்படிப் பார்த்திருந்தாலும் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு கீழே எட்டிப் பார்த்திருப்பார்கள்.சமீபத்தில் இந்தியக் கணக்காயரின் ஆய்வறிக்கை இந்த வேலை உத்தரவாதத் திட்டத்தில் உள்ள சில நடைமுறைக் குறைகளைச் சுட்டிக் காட்டியிருந்தது.அரசே சொல்கிறது: எளிய மாநிலங்களில் வேலைக்காக ஒதுக்கப்படும் நிதி ஏழை மக்களைச் சென்றடைவதில்லை’ என்கிற தலைப்பில் கார்ப்பரேட் இதழ்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. அப்படியான ஊழல் பற்றி அந்த அறிக்கை எதையும் சொல்லவில்லை. அந்த நோக்கில் அந்த ஆய்வும் செய்யப்படவில்லை. விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படாதது குறித்த நியாயமான சில விமர்சனங்களை முன்வைத்த அந்த அறிக்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கார்ப்பரேட்கள் இதன் மூலம் மிகப் பெரிய ஊழல் நடப்பதாகப் பிரச்சாரம் செய்தன.இந்தத் திட்டம் ஊழலற்றது, எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது என்று நாம் சொல்லவில்லை. கார்ப்பரேட்களின் மக்கள் விரோதப் போக்குகளைப் புரிந்துகொள்ள ஒரு சிறு எடுத்துக்காட்டாகவே இங்குப் பேசப்படுகிறது. சமூக நிதியையும்கூட இனி கார்ப்பரேட்களின் பொறுப்பில் விட்டுவிடுவது என்பதே அரசின் கொள்கையில் உள்ளது. கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் இனி கார்ப்பரேட்களைச் சார்ந்த நிதியை ஊருவாக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுரை சொல்லப்படுகிறது.மருத்துவம் பெரிய அளவில் கார்ப்பரேட் மயமாகிவிட்டது. ஆனால், கார்ப்பரேட்களைப் பொருத்தமட்டில் லாபம் ஒன்றைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் அவர்களுக்குக் கிடையாது. ஒன்றை ஒன்று விழுங்குவது, ‘கார்கடல்’ களை அமைப்பது, அதன் மூலம் விலைகளை ஏற்றுவது, ஆட்குறைப்பு செய்து லாபத்தை அதிகரிப்பது, திரளும் மூலதனத்தை வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவது என்கிற பெயரில் ஏற்றுமதி செய்வது இவையே கார்ப்பரேட் களின் பண்புகள்.கார்ப்பரேட்களின் ‘ஏஜன்ட்கள்’ ஆட்சியில் உள்ள காலம் இது. கார்ப்பரேட்களிடமிருந்து நமக்குச் சமூக நீதி கிடைக்கும் என நம்புவது மாதிரி அபத்தம் ஏதுமில்லை. கார்ப்பரேட்களை எதிர்த்தே நாம் சமூக நீதியைப் பெற வேண்டும்.

தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்

அ.மார்க்ஸ்

இந்தியாவில் உருவான தேசிய இயக்கம் (காங்கிரஸ்) பொதுவுடமை இயக்கம், முஸ்லிம் லீக், பார்ப்பனரல்லாதார் இயக்கம், தனித்தமிழ் இயக்கம், இந்துத்துவ இயக்கங்கள் (ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை) எல்லாவற்றையும் போலவே தலித் இயக்கத்திற்கும் ஒரு நூற்றாண்டு வரலாறு உண்டு. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1920களில் தனது வெளிநாட்டுப் படிப்புகளை முடித்துக்கொண்டு இந்தியா வந்தபின் ஒரு தெளிவான கோட்பாட்டுப் பார்வையையும் இயக்க வடிவத்தையும் அதற்கு அளித்தார்.
முன்னதாக அதற்குரிய சூழல் மகாராஷ்டிரத்தில் ஓரளவு கனிந்திருந்தது. தலித் சமூக முன்னோடிகள் தவிர பார்ப்பனர் உள்ளிட்ட சில உயர்சாதி சீர்திருத்தவாதிகளும் இதில் பங்கு பெற்றனர் என்ற போதிலும் ஒரு தெளிவான பார்வையுடன் அவர்கள் களத்தில் இறங்கவில்லை. உயர்சாதிச் சீர்திருத்தவாதிகளைப் பொருத்தமட்டில் தலித்கள் சந்தித்துக் கொண்டிருந்த சமகால அநீதிகளுக்கெல்லாம் வரலாற்று ரீதியாக என்ன காரணங்கள் என்கிற கேள்விக்குள் அவர்கள் செல்லவில்லை. ஏதோ தலித்களே அவர்களது இரங்கத்தக்க நிலைக்குக் காரணம் என்பதுபோல அவர்களைச் சீர்திருத்துதல், தீயபழக்கங்களை அவர்களிடமிருந்து அகற்றி நல்ல தூய்மையான வழக்கங்களைப் பயிற்றுவித்தல், கல்வி கற்பித்தல் ஆகியவற்றின் மூலமாகவே தலித்களை முன்னேற்றி விடலாம் என்கிற பார்வையே இருந்தது.
அம்பேத்கரும் கூடத் தொடக்கத்தில் இத்தகைய பார்வையுடன்தான் களத்திற்கு வருகிறார். நல்ல பழக்கங்கள், பேச்சுத்திறன், செத்த பிராணிகளை உண்ணுதலைத் தவிர்த்தல் முதலானவற்றிற்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. தலித்துகளுக்கெதிராக இந்து மதம் உருவாக்கியுள்ள சமூகக் கொடுமைகளுக்கு எதிராக மக்களைக் களத்தில் இறக்கினார்.
அந்த நோக்கில் அவரது அமைப்பு (பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா) உருவாகியது. இந்த சமூகக் கொடுமைகளையும் அவர் இரண்டாகப் பார்த்தார். கோயில், குளம் முதலான பொது இடங்கள் தலித்களுக்கு மறுக்கப்படுவது ஒருபக்கம் என்றால் பொருளாதார ரீதியாக, சாதியை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கட்டாய இலவச உழைப்பு (“மஹர் வாட்டன்முறை”) முதலான செயற்பாடுகளுக்கு எதிராகவும் அவர் இயக்கங்கள் நடத்தினார்.
மூன்றாவதாக, பிரிட்டிஷ் அரசு உருவாக்கியிருந்த புதிய நிறுவனங்களினூடாக தலித்களை அதிகாரப்படுத்துதல் (empowering) பற்றியும் அவர் சிந்தித்தார். கல்வி, அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றின்பால் அவர் கவனம் திரும்பியது. இந்தக் கல்வியையும்கூட அவர் இருவகைப் பட்டதாகவே அணுகினார். இருக்கும் கல்வி அமைப்பைப் பயன்படுத்தி அவை வழங்கும் சான்றிதழ்கள், பட்டங்கள் வாயிலாகத் தலித்கள் தம்மை அதிகாரப்படுத்திக் கொள்ளுதல் ஒரு பக்கம். ஆனால் தலித்கள் விழிப்புப்பெற, சமூகப் பிரக்ஞை பெற இந்தக் கல்வி போதாது.
இந்த நோக்கிலேயே அவர் ஆரம்பம் முதற்கொண்டு தலித்களுக்கான இதழ் (“மூக் நாயக்” முதலியன)கள் முதலானவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார். தலித்களுக்கான ஒரு பல்கலைக் கழகம் அமைப்பதென்பது கூட அவரின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. தலித்களை அவர்கள் மீதான சமூகக் கொடுமைகளிலிருந்து விடுவித்து ஆற்றல்படுத்துவதற்கு எல்லா மட்டங்களிலும் இந்து மதம் பெருந்தடையாக இருந்ததை அவரது அனுபவங்களும் ஆய்வுகளும் உணர்த்தின.
இந்து மதத்துடன் போராடி அதைத் திருத்தி அமைப்பதன் சாத்தியமின்மையையும் அவர் வெகு விரைவில் உணர்ந்தார். இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என்கிற முடிவுக்கு அடுத்த சில ஆண்டுகளிலேயே (1930களில்) அவர் வந்தடைந்தார். ஆலய நுழைவு முதலான போராட்ட வடிவங்களில் அவரது நாட்டம் குறைந்தது. மாறாக இந்துக் கோயில்களை, தலித்களின் வணக்கத்திற்கு உரியதாக இருந்த சொக்கோபா ஆலயம் உட்படப் புறக்கணிக்கச் சொன்னார். காலங்காலமாக இந்தக் கோயிற்படிகளில் உங்களின் நெற்றியைத் தேய்த்துத் தேய்த்து என்னத்தைக் கண்டீர்கள் என சக தலித் மக்களிடம் மன்றாடினார்.
1935ல் இந்திய அரசுச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு உருவாக்கி பரவலாகத் தேர்தலை அறிமுகம் செய்தபோது தலித்களுக்கு அரசியலதிகாரம் என்பதை நோக்கி அவர் நகர்ந்தார். தனது இயக்கத்தை அரசியற் கட்சியாக மாற்றினார். சுதந்திரத் தொழிலாளர் கட்சி (ILP) எனப் பெயரிட்டார். டாங்கே முதலான பொதுவுடைமையாளர்களுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டங்களை எல்லாம் மேற்கொண்டார்.வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியிலும், பிந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் அமைச்சரவைகளில் பங்கேற்றார். இந்து சட்டத் திருத்தத்திற்கு முயன்றார். அரசியல் சட்ட அவையில் பங்கேற்று இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
தலித்களுக்கான தனி வாக்காளர் தொகுதி, தனிக் குடியிருப்பு ஆகியவை குறித்துப் பேசினார். தனி வாக்காளர் தொகுதிக்கென அவர் நடத்திய போராட்டமும் காந்தி அதை முறியடித்ததும் எல்லோரும் அறிந்த கதை. காந்தி இதைச் செய்து முடித்தார் என்கிற போதிலும் அன்றைய ஒட்டுமொத்தச் சமூகமும், அனைத்து அரசியல் கட்சிகளும், சக தலித் தலைவர்களும்கூட அதற்கு எதிராக இருந்தனர். தொடர்ந்து அம்பேத்கர் இந்து மத ஊழல்கள் குறித்தும் சாதி அமைப்பு குறித்தும் மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். இறுதிக் காலத்தில் அவரது ஆய்வு பவுத்தம் குறித்ததாக அமைந்தது.
இடையில் அவர் தனது சுதந்திரத் தொழிலாளர் கட்சி முயற்சியை நிறுத்திவிட்டு “பட்டியல் சாதியினர் கூட்டமைப்பை (SCF)” உருவாக்கினார். இறுதியில் அவர் மீண்டும் தலித்களுக்கான ஒரு அரசியல் கட்சியை (“குடியரசுக் கட்சி”) உருவாக்க முனைந்தார். பெரியாரைப் போலல்லாமல் இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என தான் சொல்லி வந்த கருத்தை வாழ்நாளில் நிறைவேற்றி, பவுத்தத்திற்கு மாறி, மரணமடைந்தார்.
அம்பேத்கரின் வாழ்வும் எழுத்துக்களும் தலித்தியத்திற்கான செய்தியாக, வழிகாட்டலாக இன்றும் இருப்பதால் இன்றைய சவால்களை நாம் யோசிப்பதற்கு முன்னதாக இவற்றைச் சற்று விரிவாகப் பேச வேண்டியதாயிற்று.
அம்பேத்கருக்கு பிந்திய தலித்திய இயக்கங்களின் செயற்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதாக இல்லை. பெரிய அளவில் தேக்கத்தையும் பிளவுகளையும் அவை சந்தித்தன. இதன் பொருள் பிந்தைய தலைவர்களின் பங்களிப்புகளையும், போராட்டங்களையும் மறுப்பதல்ல. எனினும் 1990களில் மீண்டும் ஒரு பெரிய எழுச்சி உருவானது. அம்பேத்கார் நூற்றாண்டை ஒட்டி இது ஏற்பட்டது. உலகளாவிய மாற்றங்களுடன் இதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
உலகமயம், தாராளமயம், சந்தைத் திறப்பு, சோஷலிசக் கட்டுமானங்களின் தோல்வி ஆகியவை பின்னணியில் இருந்தன. புரட்சி என்கிற கருத்தாக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு “அதிகாரப்படுத்துதல்” என்கிற சொல்லாடல் முன்னுக்கு வந்தது. சமூக நீதி என்பதுகூட வலுவான அரசதிகாரத்தின் துணையோடு சட்டபூர்வமாக்கப்படுதல் என்கிற நிலைக்கு மாறாக விருப்ப பூர்வமானதாக (“கார்ப்பரேட் சமூக நீதி”) ஆக்கப்படுதல் என்கிற நிலைபாடுகள் முன்வைக்கப்படும் நிலை உருவாயிற்று.
இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக ‘சமவாய்ப்பு ஆணையங்களை’ உருவாக்குதல் பற்றி இன்று பேசப்படுகிறது, இதுகாறும் பிற்போக்குக் கருத்துக்களாகக் கருதப்பட்டவை ஒரு நியாயபூர்வத் தோரணையுடன் தம்மை முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்கின.
இந்தப் பின்னணியில் மேலுக்கு வந்த தலித்தியம் அரசியல் தளத்திலும் கருத்தியல் தளத்திலும் பதித்த சுவடுகள், நிகழ்த்திய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. இதுகாறும் தலித்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தே இயங்க வேண்டிய நிலைமாறி தமக்கான தனித்துவத்துடன் அரசியலமைப்புகளை உருவாக்கியதன் மூலம் தலித் மக்கள் மத்தியில் உருவான தன்னம்பிக்கை இதில் முதன்மையாகச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.
அரசியல், ஊடகம் எல்லாவற்றிலும் இதுகாறும் இருப்பு மறுக்கப்பட்டு வந்த தலித்கள், இன்று எல்லாத்துறைகளிலும் தங்கள் இருப்பை உறுதி செய்யும் நிலை குறிப்பிடத்தக்கது. எந்த அரசியல் கட்சியும் இன்று தலித்தியம் பேசாதிருக்க இயலாது. இன்று எந்தப் பல்கலைக் கழகமும் தலித்தியத்தைப் புறக்கணித்துவிட்டு கருத்தரங்குகள் நடத்த இயலாது. எந்தக் கருத்தரங்குகளிலும், விவாதக் களங்களிலும் தலித் இளைஞர்கள் தமது குரலை இறுமாப்புடன் ஒலிக்கும் நிலையை நாம் காண முடிகிறது. இறுமாப்பு என்பதை நான் இங்கு போற்றத்தக்க பொருளிலேயே குறிப்பிடுகிறேன்.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு (2007) பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த மிகப்பெரிய முதல் எழுச்சியான 1857 மக்கள் போரின் 150ம் ஆண்டு விழா இந்தியா முழுமையும் கொண்டாடப்பட்டது. நல்ல பல ஆய்வுகளும், கட்டுரைகளும் அதை ஒட்டி எழுதப்பட்டன. 1857 எழுச்சி குறித்து சமகால அறிஞர்கள் (எடு: கார்ல் மார்க்ஸ்) தொடங்கி இந்த 150 ஆண்டு காலம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இது குறித்து நான் சற்று விரிவாக இதழொன்றில் எழுதியுள்ளேன் (தீராநிதி, பிப்ரவரி, மார்ச் 2007). இங்கே ஓரம்சம் மட்டும்.
இந்த எழுச்சியை சிப்பாய் கலகமாய் பார்ப்பதா, விவசாயிகள் எழுச்சியா? இந்து முஸ்லிம் ஒற்றுமையின் ஆகச் சிறந்த வெளிப்பாடு என்பதா? அதிகாரமிழந்த நிலப்பிரப்புத்துவத்தின் எதிர்ப்பு என்பதா? முதல் சுதந்திரப் போராகப் பார்ப்பதா? என்றெல்லாம் பொருட்செறிந்த மிக ஆழமான விவாதங்கள் இந்த 150 ஆண்டுகளிலும் நடைபெற்றுள்ளன. எனினும் இந்த விவாதங்கள் அனைத்திலும் இந்த எழுச்சியில் தலித்கள், விளிம்பு நிலையினர், அரசவை நடனமாதுகள் முதலானோரின் பங்கு குறிப்பிடப்பட்டதே இல்லை.
1907ல் 50ம் ஆண்டு நினைவுகளின்போது அதுகாறும் பிரிட்டிஷாரால் சிப்பாய் கலகமாகப் பார்க்கப்பட்டு வந்த எழுச்சி சுதந்திரப் போராகப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் சுட்டப்பட்டது. 100ம் ஆண்டு நினைவுகளின்போது, இந்தியா புதிதாய்ச் சுதந்திரமடைந்த பின்னணியில் எழுச்சியின் தேசியப் பரிமாணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இடையில் மார்க்சியர்கள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தனர். எனினும் இந்த 150ம் ஆண்டு நினைவுகளின்போதுதான் எழுச்சியில் தலித்கள் மற்றும் விளிம்பு நிலையினரின் பங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான எந்த ஆய்வுத் தொகுப்பை எடுத்துக் கொண்டாலும் தலித்களின் பங்கு குறித்த கட்டுரைகள் முக்கியமாய் பளிச்சிடுகின்றன. இதுகாறும் யாரது கவனத்திலும் படாதிருந்த தலித் கதையாடல்கள், கண்ணில் படாதிருந்த தலித் தியாகிகளின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் முதன் முதலாக இன்றுதான் பதிவு கண்டுள்ளன. 1857 என்றால் தாந்தியாதோபே, பஹதூர்ஷா, மங்கள் பாண்டே, ஜான்சிராணி என்றிருந்த நிலை மாறி முதன் முதலாக ஜல்ஹரிபாய், அவந்திபாய், பண்ணாதாய், உதாதேவி, மதாதின் பங்கி ஆகியோரின் பெயர்கள் இன்று பதிவு காண்கின்றன. வெறும் பதிவுகள் மட்டுமல்லாது வரலாறெழுதியலுக்கு இதன் மூலம் கிடைத்த பங்களிப்பு இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
அதேபோல அயோத்தி தாசர் குறித்த மறுகண்டுபிடிப்பு, பவுத்தம் குறித்த புதிய பார்வைகள், பவுத்த நோக்கிலிருந்து அணுகுதல், தலித் இலக்கியம் என்கிற புதிய இலக்கியப் பரிமாணம் ஆகியன தலித்தியம் அளித்த கொடைகள்.
தலித்தியம் எதிர்நோக்கும் சமகாலச் சவால்களைப் பற்றி யோசிக்கும் முன் இவற்றையெல்லாம் நாம் ஒருமுறை மனதிற்குள் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. எந்த அரசியலும் சவால்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சவால்களைப் பற்றிப்பேசுவது ஒன்றைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. சொல்லப்போனால் சவாலைச் சந்திப்பதே நாம் உயிருடன் இருப்பதன் அடையாளம். வலுவுடன் இருப்பதன் அடையாளம். தலித்தியம் சந்திக்கும் சவால்களை நாம் இரு தளங்களிலிருந்து இங்கே ஆராய்வோம். அரசியல் மற்றும் கருத்தியல் தளங்களை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம். கலாச்சாரம், இலக்கியம் தொடர்பாகத் தனியே ஒரு உரை இருப்பதால் இங்கே அதைத் தவிர்க்கிறேன்.
தலித் அரசியல் என்பது ஆரம்பம் முதற்கொண்டே பாராளுமன்ற அரசியலைச் சார்ந்தே இருக்கிறது. அப்படித்தான் இருக்க முடியும். பாராளுமன்றத்தின் ஊழல்களையும், பொய்மைகளையும் கருத்திற்கொண்டு அதைப் புறக்கணித்துவிடும் சாத்தியம் அதற்குக் கிடையாது. தவிரவும் அது குறிப்பிட்ட அளவிற்கு அரசைச் சார்ந்தும் உள்ளது. அரசின் கொடூரங்களைக் காட்டிலும் சமூகத்தின் கொடூரத்தை அது உடனடியாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே சமூகக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு Arbitrator ஆக அரசை அது அணுகுகிறது.
நடுநிலை என்கிற சொல்லைக் காட்டிலும் Arbitrator என்கிற ஆங்கிலச் சொல்லே பரவாயில்லை என்பதால் அப்படியே பயன்படுத்தியுள்ளேன். எனவே பெரியார், அம்பேத்கர் போன்ற வித்தியாசங்களின் அரசியலைப் பேசியவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு அரசு வலிமையாக இருப்பதையே விரும்பினர். மாறாக காந்தியோ அரசு வலுவற்று இருக்க வேண்டும் என்றார். எந்த அளவுக்கு அரசு குறைவாக உள்ளதோ அந்த அளவு மக்களுக்கு நல்லது என்றார். பதிலாக உள்ளுர் அரசுகள் (பஞ்சாயத்துகள்) வலுவாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. உள்ளுர் அரசுகள் வலுவடைவது சாதி ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்றார் அம்பேத்கர்.
உலகமயம் இன்று தேசிய அரசுகளை வலுவிழக்கச் செய்துள்ளது. உலக முதலாளியத்தின் உள்ளூர் முகவர்களாகவே இன்று தேசிய அரசுகள் உள்ளன. தேசப் பாதுகாப்பு மட்டுமே அரசின் பணி. தேசப் பொருளாதாரம், சமூக நீதி என்பன அரசின் அதிகார எல்லைக்குள் வரா. சமூக நீதியின் இடத்தில் இப்போது சந்தையின் நீதி வந்துவிட்டது. அரசின் எந்தக் கட்டுப்பாடுகளையும் “இடஒதுக்கீடு” உட்பட இன்று கார்ப்பரேட்கள் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. சந்தையே சமத்துவத்தை உருவாக்கிவிடும். கார்ப்பரேட்கள் சமூக நீதியுடன் செயல்படுவர். மக்கள் நல அரசு என்பது இனி சாத்தியமில்லை. கல்வி, மருத்துவம் என எல்லாம் தனி நபர்களின் பொறுப்பு. அரசுக்கு அங்கே இடமில்லை.
தலித்தியம் சந்திக்கும் முதல் சவால் இது. சமூக நீதியைச் சாதிக்க அரசு வலுவாக இருக்க வேண்டும் என்கிற நிலைக்கு நேர்மாறான சூழலை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
உலகமயத்தைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. உலகமயத்தின் மூலம் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளில் தலித்களின் பங்கைக் கோருவதே நமது பணியாக இருக்க இயலும் என்றொரு கருத்து சில ஆண்டுகள் முன்பு இங்கே முன் வைக்கப்பட்டது. கெய்ல் ஓம்வெத் போன்றோர் இதை முன்வைத்தனர். சந்திரபான் பிரசாத் போன்ற தலித் அறிவுஜீவிகளின் முயற்சியால் 2002ல் “போபால் பிரகடனம்” ஒன்று உருவாக்கப்பட்டது. நாங்கள்கூட அதைத் தமிழில் பெயர்த்துப் பரவலாகப் பிரச்சாரம் செய்தோம். தனியார் துறையில் இடஒதுக்கீடு, சந்தையில் ஒதுக்கீடு அதாவது பொருட்களின் வினியோகத்தில் ஒதுக்கீடு ¬தலியவை கோரிக்கைகளாக்கப்பட்டன. “தலித் மூலதனம்” குறித்தும் பேசப்பட்டது.
நீர்வளம், கனிமவளம் ஆகியவற்றை கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்ப்பது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இதுகாறும் நமக்கு மறுக்கப்பட்ட தண்ணீரை கொகோ கோலாக்காரன் உறிஞ்சிக் கொண்டால் நாம் ஏன் போராட வேண்டும் என்றும் கூடச் சிலர் கேள்விகள் எழுப்பினர். தலித்கள், விவசாயிகள் பிரச்சினை குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவரும் மகாசேசே பரிசு பெற்றவருமான சாய்நாத் இதற்கொரு பதிலைச் சொன்னார். முன்னெல்லாம் கிராமத்திலுள்ள ஊரணியில் தலித்கள் தண்ணீர் எடுக்க முடியாதபோது இரண்டு மைல் நடந்து சென்று ஆற்றிலாவது எடுக்க முடிந்தது. இன்று அந்த ஆற்று நீரும் கொள்ளை போகும்போது முதலில் பாதிக்கப்படுவது தலித்களும் பழங்குடியினரும் தானே என்றார்.
இதன் பொருள் உலகமயம் ஒழிக எனச் சொல்லிவிட்டு அதை எதிர்த்துப் போராடிக் கொண்டு மட்டுமே இருந்து விடவேண்டும் என்பதல்ல. வேறெப்போதும் இல்லாத பல புதிய தேர்வுகள் உலகமயத்தால் உருவாகியுள்ளன. தொழில்நுட்பம் பல சாத்தியங்களைப் படைத்துள்ளது. இவற்றில் தலித்களுக்கான பங்கைக் கோருவது அவசியம். அதே நேரத்தில் உலகமயத்தைத் தலித்களின் விடிவாகவும் நாம் பார்க்கத் தேவையில்லை.
உலகமயத்தின் பலன்களைக் கோருவதுகூட ஓரளவு தலித்களில் படித்த வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புறத்தார்களுக்கே சாத்தியம். இவை குறித்தெல்லாம் அறிந்தே இல்லாத எண்பது சதத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய, கிராமப்புறங்களைச் சார்ந்த தலித்களுக்கு அரசு தனது மக்கள் நலத் தன்மையை இழப்பது பெருங்கேடாகும். கல்வியும் மருத்துவமும் ¬ற்றலும் வணிகமயமாகும்போது அதன் பெரும் இழப்புகளை அவர்களே சுமக்க நேரிடுகிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்பை தலித்திய அரசியலில் இணைப்பது குறித்த பிரக்ஞை இன்று தலித் முன்னோடிகள் மத்தியில் உருவாகத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான ஆனந்த் டெல்டும்டேயின் நூல் தமிழில் பெயர்க்கப்பட்டு தலித் இளைஞர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்புப் பெறத் தொடங்கியுள்ளது இதற்கொரு எடுத்துக்காட்டு. எனினும் தலித் முன்னோடிகள், அரசியல் தலைவர்கள் இதற்கு முக்கியவத்தும் அளிக்கும் நிலை உருவாகாதது கவலைக்குரியது.
அரசியல் தளத்தில் தலித்கள் சந்திக்கும் இரண்டாவது சவாலாக அதன் பாராளுமன்றப் பாதையில் அது சந்திக்கும் ஒரு சிக்கலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலித் என்பது குறித்து நாம் எவ்வளவுதான் விரிந்த பொருளைக் கொண்ட போதும் அது தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் அரசியலாகவே உள்ளது. எனவே அதன் ஆதரவுத் தொகுதி (constituency) அதாவது எண்ணிக்கைக்கு ஒரு எல்லை உண்டு. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அது சுமார் 20 சதம். அதற்குள்ளும் ­ன்று பெரும் பிரிவுகளும் (பறையர், பள்ளர், அருந்ததியர்) தனித்தனியே.
பாராளுமன்ற அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கு ஆதரவு பெருக்கப்பட வேண்டும். அப்போது அது தலித் அரசியலைத் தாண்டி வேறு அரசியலைப் பேசியாக வேண்டும். இதனால் தலித் அரசியல் பலவீனப்படுவது ஒரு பக்கம். வேறு என்ன அரசியலைத் தலித்தியம் தேர்வு செய்வது என்பது இன்னொரு கேள்வி. தலித்தியம் சந்திக்கும் இரண்டாவது முக்கிய சவால் இதுவே.
அம்பேத்கரும் இச்சிக்கலைச் சந்திக்கவே செய்தார். பஹிஷ்கரித் ஹிதகரிணிசபா - சுதந்திரத் தொழிலாளர் கட்சி - பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு - குடியரசுக் கட்சி என்பதாக அவரது இயக்கம் இருந்தது. அதாவது, தலித்களுக்கான தனி அமைப்பு - கட்சி - தனி அமைப்பு - கட்சி என்பதாக இருந்தது. கட்சி என ஆகும்போது பெயரைக்கூட தலித் என்கிற வட்டத்தைத் தாண்டி அமைக்க வேண்டியிருந்தது. பரந்த அடையாளம் என்கிற போது அம்பேத்கர் “தொழிலாளர் குடியரசு” முதலானவற்றை தேர்வு செய்தார். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரை அணுகினார்.
கன்ஷிராம் “பகுஜன் சமாஜ்” என்கிற கருத்தை முன்வைத்தார். தலித்கள் + பிற்படுத்தப் பட்டோர் + முஸ்லிம்கள் என்பதாக அவரது அணி சேர்க்கை இருந்தது. பார்ப்பனர், சத்திரியர் முதலான உயர் சாதியினரை அவர் வெளியே நிறுத்தினார்.
தொல்.திருமாவளவன் தமிழ்த்தேசியம் பேசி தமிழர்கள் என்னும் பேரடையாளத்தின் கீழ் தனது ஆதரவுத் தொகுதியை விரிக்க முயல்கிறார். இது குறித்து நான் விரிவாக வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளேன். இங்கே தவிர்க்கிறேன். ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியத்தின் இன்னொரு பக்கமாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரிப்பதன் விளைவாகவே அவரும், அவரது கட்சியினரும் ஈழத்துத் தலித்களின் பிரச்சினையைப் பேசுவதேயில்லை. தலித் இலக்கிய முன்னோடியான கே.டேனியலும் இவ்வாறே புறக்கணிக்கப்பட நேர்கிறது. இதை நான் குறையாகவோ, விமர்சனமாகவோ அன்றி தலித்தியம் எதிர்கொண்டுள்ள ஒரு பிரச்சினையாகவே பார்க்கிறேன்.
மாயாவதி சமீபத்திய உ.பி. தேர்தலில் வைத்து வெற்றி பெற்ற அரசியல் சூத்திரம் பகுஜன் என்கிற வரையறையைத் தலைகீழாக மாற்றியது. பார்ப்பனர்களை அவர் உள்ளடக்கினார். உயர்சாதியினருடனான சகோதரத்துவம் சங்கங்களை ஊர்தோறும் உருவாக்கினார். “பகுஜன்” என்பதற்குப் பதிலாக “சர்வஜன்” என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார். உ.பி. வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்திலும் இப்படியான ஒரு கூட்டணி குறித்து தலித் அறிவுஜீவிகளில் சிலர் பேசினர்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் சாதி அமைப்பு முறை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. தமிழகச் சாதி முறைக்கும் ஈழத்து சாதி முறைக்குமுள்ள வித்தியாசம் அப்படியே. ஓரிடத்திற்குப் பொருந்தும் சூத்திரம் அப்படியே இன்னொரு இடத்திற்குப் பொருந்தாது. இந்தியாவின் வட மாநிலங்களில் சத்திரிய வருணம் உள்ளது போல தமிழ்நாட்டில் கிடையாது. உ.பி.யில் பார்ப்பனர்கள் சுமார் 10 சதம். தமிழ்நாட்டில் வெறும் 2 சதம் மட்டுமே. உ.பி.யில் பிற உயர்சாதியினரும் கூட அப்படியே. எல்லோரும் மாயாவதிக்கு வாக்களிக்கவில்லை. பெரும்பாலோர் இம்முறையும் பாரதீய ஜனதாவிற்கே வாக்களித்தனர். மாயாவதிக்கு வாக்களித்த பார்ப்பனர்களும்கூட அப்படிச் செய்ததற்கான அடிப்படை மாயாவாதி ஏற்கனவே அங்கிருந்த சுமார் 22 சதத்திற்கும் மேற்பட்ட தலித்களை முழுமையாக ஒன்றிணைத்திருந்தார். தமிழகத்தில் இந்நிலை இல்லை.
இது தலித்தியம் சந்திக்கும் மூன்றாவது சவால். தலித் ஒற்றுமையைக் கட்டுவது எப்படி? தமிழக தலித் வரலாற்றைப் பார்த்தால் தொடர்ந்து தலித் உட்சாதிகளுக்கிடையே, குறிப்பாக அதன் உட்பிரிவுகளுக்கிடையே ஒரு பகை முரணே இருந்து வந்துள்ளது. அம்பேத்கரைப் பொதுத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்பது, பெரியாரை அணுகுவது முதலான அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. இன்று மூன்றில் ஒரு பங்கினரான அருந்ததியர்கள் உள் ஒதுக்கீடு கோருகின்றனர். அவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்பது பரவலாக உணரப்படுகிறது. அதே போல தலித் கிறிஸ்தவர்களும் கேட்கின்றனர். அதுவும் நியாயமானதே. எனினும் இதற்கு பிற பிரிவுத் தலைவர்களிடம் எதிர்ப்புள்ளது.
தலித் ஒற்றுமை தமிழகத்தைப் பொருத்தமட்டில் இன்று ஒரு கனவாகவே உள்ளது. தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் கவலைக்குரிய சவால் இது. பொதுவாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படாதது குறித்து டாக்டர் அம்பேத்கர் சொன்ன காரணம் இங்கே சிந்திக்கத்தக்கது. படி நிலையான அசமத்துவம். அது இங்கேயும் செயல்படுகிறது. தலித்தியம் என்பது ஒரு வித்தியாச அரசியல். அது, தனக்குள்ளும் உள்ள வித்தியாசங்களை ஏற்கத்தக்கதாக இருக்க வேண்டும். அதை ஏற்று, அதன் தேவைகளையும் கோரிக்கைகளையும் அங்கீகரித்து இந்த ஒற்றுமை அமைய வேண்டும்.
இனி கருத்தியல் தளத்தில் தலித்தியம் சந்திக்கும் சவால்களில் சிலவற்றைப் பார்ப்போம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி இங்கே தலித்தியம் புத்தெழுச்சி கண்டபோது அத்துடன் பல தளங்களிலிருந்து எதிர்ப்புகள் உருவாகாமலும் இல்லை. தலித்தியத்திற்குத் தத்துவப் பின்புலமில்லை என்பது இவ்வாறு எழுந்த குரல்களில் ஒன்று. நாங்கள் எல்லாம் போஸ்ட் மார்டனிசம் குறித்து எழுதிக் கொண்டிருந்த காலம் அது. பெருங் கதையாடல்களின் சிதைவு, வித்தியாசங்கள் மற்றும் சிதறல்களின் முக்கியத்துவம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நாங்கள் அந்தக் குற்றாட்டை எதிர்கொண்டோம்.
அதே நேரத்தில் மகராஷ்டிர தலித் எழுத்தாளர் அர்ஜுன் டாங்கே எழுதிய தலித் இலக்கியம் குறித்த நூலொன்று மொழியாக்கப்பட்டு வெளிவந்தது. இதுகாறும் சொல்லப்பட்ட வரலாறுகள், எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் தலித்களைப் புறக்கணித்து, அவர்களின் இருப்பை மறுத்து ஆதிக்க சாதியினரால் எழுதப்பட்டவை. அவை முன்வைக்கும் மதிப்பீடுகள், மொழி எல்லாமே தலித்தியத்தை மறுப்பவை. எனவே தலித்தியம் இந்த எல்லா மதிப்பீடுகளையும் மறுக்க வேண்டும் என்கிற (Negation) கருத்து இங்கே தலித்தியம் பேசியவர்களால் முன்வைக்கப்பட்டது.
பெரியாரின், “நமது இலக்கியம், மொழி, சட்டம், அரசு எல்லாமே சாதி காப்பாற்றுபவை. இதுகாறும் வந்த சீர்திருத்தவாதிகள் எல்லாரும் இந்த அடித்தளத்தை அப்படியே வைத்துவிட்டு மேற்தளத்தில் இருந்த ஓட்டை உடைசல்களை மட்டுமே பூசிக் கொண்டிருந்தனர். நான் மட்டுமே அடித்தளத்தையே தகர்க்க வேண்டுமென்கிறேன். எனவே தான் எல்லோராலும் நல்லது எனக் கூறப்பட்டவற்றை நான் கெட்டது என்கிறேன். எல்லோரும் கெட்டது என்பதை நல்லது என்கிறேன். எல்லோரும் உண்டு என்பதை நான் இல்லை என்பேன். எல்லோரும் இல்லை என்பதை நான் உண்டு என்பேன்.....” என்கிற ரீதியில் சொல்லப்பட்ட வாசகங்கள் எல்லாவற்றையும் மறுத்தல் என்பதற்கான ஒரு வரையறையாகவே அமைந்தது.
தலித்களின் அனுபவங்கள் எல்லாம் எந்த உயர் இலக்கியத்தைக் காட்டிலும் குறைந்தவையல்ல என்பது நிரூபணமாகியது. தலித் அனுபவப் பதிவுகள், அவர்களின் மொழிப் பதிவுகள் எல்லாம் பெரிய அளவில் வரவேற்புக்குள்ளாயின. மாற்று வரலாற்றொன்றைக் கட்டமைப்பது என்கிற பார்வைக்கு அயோத்திதாசர் குறித்த மறுகண்டுபிடிப்பு பெரிதும் உதவியது. தலித்களின் ஆய்வுப் பணிகள், பதிப்பு முயற்சிகள் எல்லாம் முதன் முதலில் கவனிப்பிற்குள்ளாயின. நவீன தமிழிலக்கியத்திற்கு தலித் இயக்கம் மூலம் கிடைத்த பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாக இருந்தது.
எனினும் இன்று இந்த வளர்ச்சிப் போக்கிலும் ஒரு சிறிய தேக்கம் ஏற்படவே செய்துள்ளது. தலித்தியம் குறித்த வரையறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் கூட இதற்கொரு காரணம் என்றால் மிகையல்ல. மறுப்பின் மறுப்பு என்கிற அணுகல் முறை இடையில் தலித் அறிவுஜீவிகள் சிலரால் புறக்கணிக்கப்பட்டது. அதேபோல தலித் மொழியை, அது நிகழ் மதிப்பீடுகளால் கொச்சை எனக் கருதப்படுவதால் அதை அப்படியே பதிவு செய்வது என்பதும் கூட மறுக்கப்பட்டது. சொல்லப்போனால் இன்று செல்வாக்குடன் இயங்குகிற ஒரு தலித் அரசியல் கட்சியின் இலக்கியப் பிரிவு சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை இவற்றை வெளிப்படையாகவே கண்டித்தது.
தலித் அரசியல் தொடர்பாக ஒரு அறிக்கை தலித் முன்னோடிகள் பலருடைய பங்களிப்புடன் இங்கு உருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதே போன்ற ஒரு தலித் இலக்கியப் பிரகடனம் வெளியிடப்பட வேண்டும் எனச் சொன்னபோது அது தேவையில்லை என்கிற கருத்து முதலில் முன்வைக்கப்பட்டது. பின் அவர்களே சற்று முன்சொன்ன அறிக்கையை வெளியிட்டபோது தொடக்கத்தில் பேசி வந்த பல கருத்துக்கள் மறுக்கப்பட்டன.
ஒரு இறுக்கமான கொள்கைப் பிரகடனம் தேவை என நான் சொல்ல வரவில்லை. மேற்குறித்த இரு பார்வைகளில் ஏதொன்று மட்டுமே சரி எனவும் கூறவில்லை. மாறாக இத்தகைய ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்ந்து மேலெடுத்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. வலுவான ஒரு கோட்பாட்டுப் பின்புலம் இன்றும் உருவாகாதிருப்பது கருத்தியல் தளத்தில் தலித்தியம் சந்திக்கும் சவால்களில் ஒன்று.
மார்க்சியம், அடித்தள ஆய்வுகள் விளிம்புகளை முன்னிலைப்படுத்தும் நவீன சிந்தனைகள் எல்லாம் தலித்தியத்திற்கு மிகவும் நெருக்கமானவை. இதன் பொருள் அவற்றில் குறைபாடுகள் இல்லை என்பதோ அவை விமர்சனத்திற்குரியவை அல்ல என்பதோ அல்ல. சொல்லப்போனால் மார்க்சியத்திலும், மார்க்சிய நடைமுறையிலுமிருந்த பல குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது தலித்தியத்தின் மிகவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளில் ஒன்று.
இந்தியச் சமூகத்தில் சாதியின் முக்கியத்துவம், அடித்தளம் மேற்கட்டுமானம் என்கிற செவ்வியல் மார்க்சிய வரையறையே அப்படியே இங்கு பிரயோகிப்பதிலுள்ள சிக்கல்கள், மேற்கட்டுமானமாகக் கருதப்படும் சாதியை ஒரு உற்பத்தி உறவாக, அடிக்கட்டுமானக் கூறுகளில் ஒன்றாகப் பார்ப்பது என்கிற அதிரடியான அணுகல்முறை, மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி என்கிற கருத்தாக்கத்தின் மீது கவனம் ஆகியவை தலித் அறிவுஜீவிகள் மூலம் கிடைத்த கொடைகள். இன்று இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பார்வை விசாலிப்பிற்கு இவையே காரணம்.
ஆனாலுங்கூட மார்க்சியம், பெரியாரியம் முதலியன தலித்தியத்திற்கான பகைச் சிந்தனைகள் அல்ல. முற்றாக மறுதலிக்கப்பட வேண்டியவைகள் அல்ல. ஆனால் அதுபோன்ற ஒரு போக்கு இடையில் ஏற்பட்டது. இன்று அந்தப்போக்கு குறித்த மறு பரிசீலனை சகல மட்டங்களிலும் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. மார்க்சியம், பெரியாரியம், அடித்தள மக்கள் ஆய்வுகள், நவீன சிந்தனைகள் ஆகியவற்றில் எந்தெந்தக் கூறுகளை நாம் இன்று உயர்த்திப் பிடிக்க வேண்டும்? எவற்றை விமர்சிக்க வேண்டும்? எவற்றையெல்லாம் முற்றாக மறுதலிக்க வேண்டும்? இவையும் நம்முன் உள்ள கேள்வி. கடும் உழைப்பையும் அதே நேரத்தில் விசாலமான பார்வையையும் கோரும் பணி இது.
தமிழ்ச் சூழலில் தேசிய இனப் பிரச்சினை முக்கியமான ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை. தேசம், இனம், மொழி, சாதி, மதம் சார்ந்த பற்றுக்களையும் அரசியல்களையும் கடுமையாக விமர்சித்த பெரியாரியப் பாரம்பரியம் தமிழகத்திற்கு உண்டு. அம்பேத்கர் இது குறித்து சில முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். தமிழ்த் தேசியத்தைப் பொருத்தமட்டில் அதன் வரையறையில் தமிழ்நாட்டிலும் சரி, ஈழத்திலும் சரி பார்ப்பனிய சைவச் சிந்தனைகளின் கறை படிந்ததாகவே தேசியம் உருவாகியுள்ளது.
தலித்கள் இந்தத் தேசத்திற்குரியவர்கள், மொழிக்குரியவர்கள், மரபுகளுக்குரியவர்கள் என்கிற அம்சத்தை உயர்த்திப் பிடித்து அதனடிப்படையில் இன்றைய தமிழ்த் தேசியத்துடன், அந்த நீரோட்டத்துடன் வித்தியாசமின்றி இணைந்து கொள்ளும் போக்கும் இங்கே சில தலித் அமைப்புகளிடம் உள்ளதை விரிவாக விளக்க வேண்டியதில்லை. தேசியம் குறித்த நமது அணுகல்முறை என்ன? எவ்வளவு தூரம் அந்த நீரோட்டத்தில் இணைந்து நிற்பது? எவ்வளவு தூரம் விலகி நிற்பது?
ஈழ மக்களின் போராட்டத்தையும் அவர்களின் உரிமை வேட்கையையும் ஆதரிப்பதும், பேரினவாத அரசென்றால் கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதும் விடுதலைப் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் ஒன்றா? இது ஏதோ விடுதலைப் புலிகள் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் மற்றும் இயக்கங்கள் குறித்த தலித்திய அணுகல்முறை தொடர்பான பிரச்சினையும்கூட. இது குறித்த ஒரு தெளிவான அணுகல் முறையை உருவாக்குவது நம்முன் உள்ள அடுத்த சவால்.
தேசிய வரையறையிலிருந்து எப்போதும் நழுவ விடப்படுபவர்கள் தலித்கள் மட்டுமல்ல. சிறுபான்மையினரும் கூடத்தான். மொழி, மதச் சிறுபான்மையினரைச் சொல்கிறேன். தேசிய அரசியலின் வீச்சுகல் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்.
தொண்ணூறுகளுக்குப்பின் மறு உயிர்ப்பு கொள்ளும் பாசிச அரசியலாலும் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள். இவர்களுடனான தலித்தியத்தின் அணுகல் முறையையும் வரையறுத்தாக வேண்டும்.
இதுகாறும் மறுக்கப்பட்ட பொது நீரோட்டத்தில் நமக்கொரு பங்கு என்கிற நோக்கு சிறுபான்மையிடமிருந்து விலகி நிற்க வழி வகுத்துவிடும். அவ்வப்போதைய பிரச்சினைகளிலிருந்து முடிவெடுப்பது மட்டும் போதாது. இதுவரைக்கும் சிறுபான்மை மக்களிடமிருந்து தலித் அரசியல் பெரிய அளவில் விலகிவிடவில்லை. இந்தப்போக்கு தொடர்வதற்கு இது தொடர்பான ஒரு தெளிவான பார்வை தேவை. இதுவும் நம்முன் உள்ள சவாலே.
இந்து மதத்திலிருந்து வெளியேறுதல் என்பதை அம்பேத்கர் உறுதியாகவும், இறுதியாகவும் உரைத்துச் சென்றார். வாழ்ந்தும் காட்டினார். பெரிய அளவில் வடமாநிலங்களில் பவுத்தத்திற்கு மாற்றம் ஏற்பட்டது. இன்றும்கூட ஆங்காங்கு பவுத்த மத மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. பவுத்தத்திற்கு மாறுதல் குறித்து இந்துத்துவ பாசிசம் கவலை கொள்ளவில்லை என்ற போதிலும் அது இந்து மத்தின் மீதான வெறுப்பை வெளிக்காட்டும், தீண்டாமைக்கான கண்டனத்தை உமிழும் ஒரு செயல்பாடாக இருந்தது, இருக்கிறது. ஆனால் இதுவும்கூட தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் நடைபெறவில்லை.
தொண்ணூறுகளுக்குபின் தலித்தியம் மேலெழுந்தபோது அயோத்திதாசர் ஊடாக இங்கே பவுத்த நோக்கிலான ஒரு வரலாறு கட்டமைக்கும் முயற்சி பாராட்டத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டபோதும் கூட இந்து மதத்திலிருந்து வெளியேறுதல் என்கிற முழக்கம் பெரும்பான்மையாக உள்ள இயக்கங்களால் முன்வைக்கப்படவில்லை. “தலித் முரசு” முதலான சில அமைப்புகள் இதைச் செய்த போதிலும் வலுவான அரசியல் இயக்கங்கள் அதைச் செய்யவில்லை.
மைய நீரோட்ட அரசியலில் பங்கு பெறுவதற்கு இத்தகைய விமர்சனங்கள் தடையாக இருக்கும் என்பது ஒரு நியாயமான அச்சமே. இந்த முரண் சூழலை நாம் எவ்வாறு கையாளப் போகிறோம்? இதுவும் நம்முன் உள்ள சவாலே. தலித்தியம் இதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்துத்துவ பாசிசத்துடன் கைகோக்கும் தவறை, தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் தலித்தியம் இதுவரை செய்யவில்லை. இந்நிலை தொடர இந்தத் தெளிவு தேவை.
அயோத்திதாசரின் ஊடாக ஒரு மாற்று வரலாற்றைக் கட்டமைக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இது தொடர்பாகவும் ஒரு சில பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் இயங்கியவர் அயோத்திதாசர். எவையெல்லாம் சங்க இலக்கியங்கள் என்பதெல்லாம்கூட இன்றைய தெளிவுடன் வரையறுக்கப்படாத காலம் அது. அதற்குப் பிந்தைய காலங்களில் பல வரலாற்றுண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
வரலாறெழுதியலும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு அயோத்திதாசரை முற்று முழுதாக ஏற்று, ஒரு திருஉருவாகக் கட்டமைக்கும் போக்கு எந்த அளவிற்குச் சரியாக இருக்கும்? அயோத்திதாசர், கர்னல் ஆல்காட், தியாசபிகல் சொசைடி, அன்னிபெசன்ட் ஆகியோரின் உறவும் இந்த வகையில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. இந்து மதத்தின் பல கூறுகளை அவர் பவுத்தம் என ஏற்றுக்கொள்ளும் போக்கையும் ஒருவர் காண முடியும். தலித் பிரிவுகளுக்கிடையேயுள்ள உட்சாதி ஏற்றத்தாழ்வுகளையும் கூட அவர் இந்த வகையில் நியாயப்படுத்த நேரிடுகிறது.
இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு அவரைத் திருஉருவாகக் கட்டமைக்கும் போது தலித் உட்பிரிவுகளின் ஒற்றுமைக்கும் அது இடையூறாகிவிடும். தவிரவும் சமணத்தையும் பவுத்தத்தையும் அவர் ஒன்றெனக் குழப்புவது வரலாற்றுண்மைகளுக்கு எதிரானது. என்ன பெரிய வரலாற்றுண்மைகள் என்கிற ரீதியில் இவற்றை உதறித் தள்ளிவிடுவதும், அயோத்திதாசர் சொல்லிவிட்டாரே என்கிற ரீதியில் அதுவே சரியானது என நியாயப்படுத்துவதும் வேறு பல பிரச்சினைகளுக்கும் வரலாற்று முரண்கட்டும் இட்டுச் செல்லும். இதுவும் இன்று தலித்தியம் சந்தித்துக் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய சவாலே.
வரலாற்று ரீதியாக அடித்தள மக்களின் இயக்கங்களை நாம் உயர்த்திப் பிடிக்கும்போது கிராம்சி குறிப்பிட்ட எச்சரிக்கையை நாம் மறந்துவிடக்கூடாது. அடித்தள மக்களிடம் மோதற் கூறுகள் உள்ளது போலவே சமரசக் கூறுகளும் மிகுந்திருக்கும். உடனடி எதிரியைப் பெரிதாக எண்ணி தொலைவில் உள்ள இன்னும் ஆபத்தான எதிரியை நட்பு சக்தியாகப் பார்க்கும் பார்வையும் அதற்குண்டு. அடித்தள மக்களின் சிந்தனை, செயற்பாடுகள் அனைத்தும் சரியாகவே இருக்கும் என்கிற பார்வை பல பிரச்சினைகளுக்குக் காரணமாகும்.
இந்த சமரசக் கூறுகளைப் பயன்படுத்தி இந்துத்துவ பாசிச சக்திகள் குஜராத், கோவை முதலான இடங்களில் தலித் பிரிவினரை சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தியதை நாம் மறந்து விடலாகாது. அடித்தள மக்கள் எல்லா அம்சங்களிலும் சரியாக இருப்பார்கள் என்கிற Political Correctness பார்வை அரசியல் செயலின்மைக்கும் இட்டுச் செல்லும். அவர்கள் மத்தியில் கருத்தியல் ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும். இதுவும் தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் இன்னொரு பெரிய சவால்.
தலித்தியம் எல்லாவற்றிலும் கருத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்படும் அணு ஒப்பந்தமாயினும் சரி, ஈராக் படை எடுப்பாயினும் சரி. கார்ப்பரேட்களின் செயல்பாடுகளாயினும் சரி எல்லாவற்றையும் பற்றி விமர்சிக்கத்தக்க வல்லமை அதற்குண்டு. அந்த வல்லமையை அது தன் அணிகளுக்குக் கையளிக்க வேண்டும். தானாகவே அடித்தள மக்களிடம் அது வந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது.
அறிவுச் செயல்பாடுகளுக்கு அம்பேத்கர் அளித்த முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. ஏராளமான அறிவுச் செல்வத்தை அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் முதலியோர் நமக்குக் கையளித்துச் சென்றுள்ளனர். இவற்றை தலித் மக்களிடம் கொண்டு செல்லும் பணி இங்கு மேற்கொள்ளப்படவே இல்லை. பவுத்தத்தின் அற மதிப்பீடுகளும் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. தலித்தியத்திற்கு மிகப்பெரிய கருத்தியல் வளம் இருந்தும் கூட தலித் மக்களின், தலித் அரசியலின் கருத்தியல் பலமாக அது மாற்றப்படாதது தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களிலெல்லாம் பெரிது.
தொடக்கத்தில் சொன்ன ஒன்றைச் சொல்லி முடிக்க விரும்புகிறேன். இந்தச் சவால்களை இங்கே முன்வைப்பது தலித்தியத்தைக் குறைத்து மதிப்பிடுவதோ, அதன் மகத்தான பங்களிப்புகளை மறுப்பதோ ஆகாது.
புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் தலித்தியத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வம் தலித்தியத்தின் மூன்றாவது எழுச்சியாகக் காணத்தக்கது. தேசியம், ஏகாதிபத்தியம், இலக்கியம் ஆகியவை குறித்த வளமான தலித்தியப் பார்வையை விட்டுசென்ற கே.டானியலின் பாரம்பரியம் உங்களுக்குண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தேசம் மறுக்கப்பட்டு, பல்வேறு இடர்களையும், சவால்களையும் சந்தித்து எங்களைக் காட்டிலும் பல மடங்கு விசாலமான பார்வைச் சாத்தியத்தை அனுபவபூர்வமாகப் பெற்றவர்கள் நீங்கள். உங்களின் பங்கேற்பும், பங்களிப்பும் தலித்தியத்திற்கு எதிர்காலத்தில் பெரும்வளம் சேர்க்கும். தலித்தியம் சமகாலத்தில் சந்தித்துக் கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்ள அது பெரிதும் உதவும்.
(லண்டன் தலித் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ

தமிழாக்கம்: ராமாநுஜம்

(இந்திய காலனிய எதிர்ப்பில் ஒரு சாரார் 'பாரத மாதா' என்ற உருவகத்தை உருவாக்கியது போலவே, அமெரிக்காவுக்கு 'அங்கிள் சாம்' என்ற உருவகமும், பிரிட்டிஷாருக்கு 'ஜான் புல்' என்ற உருவகமும் உருவாக்கப்பட்டது. இந்த உருவகங்கள் எந்தத் தனிநபரையும் குறிப்பதில்லை. உலகில் பல நாடுகளுக்கு இத்தகைய உருவகங்கள் உண்டு. இந்த உருவகங்கள் தோற்றம் கொண்ட கதைகளும், அதன் அரசியலும் மிக மிக சுவாரசியமானவை.
அங்கிள் சாமுக்கு மண்ட்டோ எழுதிய ஒன்பது கடிதங்கள் சிறு வெளியீடாக 2001ல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. முதல் கடிதம் 1951-ல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதம் எந்த ஆண்டு என்று தெரியவில்லை. மூன்றாவது கடிதத்திலிருந்து 1954 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதங்களில் மண்ட்டோவின் கதைகள், கட்டுரைகளில் காண முடியாத வேறுபட்ட பல தன்மைகளை இதில் காண முடிகிறது. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டை மண்ட்டோ மிகத் திறம்பட விளையாடி உள்ளார். இந்தக் கடிதங்கள் அவர் உயிரோடு இருக்கும் போது பிரசுரம் செய்யப்பட்டதா என்று தீர்மானமாகத் தெரியவில்லை. இந்த இதழில் முதல் மூன்று கடிதங்கள் மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. - தமிழாக்கக் குறிப்பு)
31 லஷ்மி மேன்ஷன், 16, டிசம்பர் 1951ஹால்ரோடு,லாகூர்.
அன்புள்ள அங்கிள்,
வணக்கம்.
நீங்களோ அல்லது ஏழு சுதந்திரங்களும் பெற்று இருக்கும் உங்கள் நாட்டில் எவருமே அறிந்திராத உங்களுடைய பாகிஸ்தான் சகோதரனின் மகனிடமிருந்து உங்களுக்கு இந்தக் கடிதம் வருகிறது.
என்னுடைய நாடு, இந்தியாவிலிருந்து ஏன் துண்டிக்கப்பட்டது என்றும், ஏன் உயிர்பெற்றது என்றும், ஏன் சுதந்திரம் அடைந்தது என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே உங்களுக்கு எழுதும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன். என் நாட்டைப் போலவே நானும் சுதந்திரம் பெற்றுவிட்டேன் - மிகச் சரியாக அதே பாணியில், அங்கிள், இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை. எல்லாம் அறிந்த உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். உங்களுக்கு நான் இதை விளக்கத் தேவை இல்லை.
என் பெயர் சாதத் ஹசன் மண்ட்டோ. இப்போது இந்தியாவிலிருக்கும் ஓர் இடத்தில்தான் நான் பிறந்தேன். என் தாய் அங்குதான் புதைக்கப்பட்டு இருக்கிறாள். என் தந்தை அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார். எனக்குப் பிறந்த முதல் குழந்தையும் அந்தத் துண்டு நிலத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த நிலம் இனியும் என்னுடைய நாடு அல்ல. இப்போது என்னுடைய நாடு பாகிஸ்தான். இதை நான் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தபோது ஐந்தாறு தடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
நான் அகில இந்தியாவிற்கும் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய கதைகள் பல தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. மக்கள் என்னை மதிக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவில் நான் மூன்றுமுறை விசாரிக்கப்பட்டேன். பாகிஸ்தானில் இதுவரை ஒரே ஒரு முறைதான். என்ன இருந்தாலும் பாகிஸ்தான் சிறு குழந்தைதானே!
பிரிட்டிஷ் அரசாங்கம் என்னுடைய எழுத்துகள் ஆபாசமானது என்று கருதியது. என் சொந்த அரசாங்கமும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை விட்டுவிட்டது. ஆனால் என்னுடைய அரசாங்கம் அப்படிச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கீழ் நீதிமன்றம் எனக்கு, மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. மேல் நீதிமன்றத்தில் நான் முறையிட்டதால் விடுவிக்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய அரசாங்கம் நீதி நிலை நாட்டப்படவில்லை என்று நம்புவதால் என்னை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், நான் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
என்னுடைய நாடு உங்களுடைய நாடாக இல்லாததைக் கண்டு நான் வருந்துகிறேன். உயர்நீதிமன்றம் என்னைத் தண்டிக்குமானால், என் நாட்டில் எந்த செய்தித்தாளும் என் புகைப்படத்தையோ, வழக்கு பற்றிய குறிப்புகளையோ வெளியிடாது.
என் நாடு ஏழ்மையானது. இங்கு பளபளக்கும் காகிதங்களோ, சிறந்த அச்சு இயந்திரங்களோ கிடையாது. இந்த ஏழ்மைக்கு உயிருடன் இருக்கும் நானே சாட்சி. அங்கிள், நீங்கள் நம்ப மாட்டீர்கள். இருபத்திரண்டு புத்தகங்களுக்கு ஆசிரியனாக இருந்தும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போகக்கூட என்னிடம் வசதிகள் ஏதும் கிடையாது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்னிடம் பேக்கார்ட்டே, டாஜோ கிடையாது. ஏன், ஏற்னெவே உபயோகப்படுத்தப்பட்ட கார்கூட என்னிடம் கிடையாது.
நான் எங்காவது போக வேண்டும் என்றால் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒரு பத்திக்கு ஏழு ரூபாய் வீதம் செய்தித்தாளில் என்னுடைய எழுத்து வெளிவந்து, இருபது முதல் இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் டோங்காவை எடுத்துக் கொண்டு உள்ளூர் விஸ்கியை வாங்கக் கிளம்பி விடுவேன். இந்த விஸ்கி மட்டும் உங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்குமானால், அந்த சாராயத் தொழிற்சாலையை அணுகுண்டு போட்டு அழித்திருப்பீர்கள். அதனுடைய தரம் அப்படிப்பட்டது. அதைக் குடிப்பவன் ஓராண்டுக்குள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படும் உத்தரவாதம் கண்டிப்பாக உண்டு. நான் தடம் புரண்டு போகிறேன். நான் செய்ய விரும்புவது, என்னுடைய சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெலுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கத்தான். அவருடைய God’s Little acre' என்ற நாவலுக்காக வழக்குப் போட்டதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதாவது நான் இங்கு சந்தித்த அதே குற்றச்சாட்டு: ஆபாச இலக்கியம்.
அங்கிள், என்னை நம்புங்கள். ஏழு சுதந்திரங்களையும் உடைய உங்களுடைய நாட்டில் அவருடைய நாவல் ஆபாசமானது என்று வழக்கு தொடரப்பட்டதைக் கேள்விப்பட்ட போது, நான் அதிர்ச்சியுற்றுப் போனேன். உங்களுடைய நாட்டில் அனைத்துமே அதனுடைய மறைப்புகள் அகற்றப்பட்டு, காட்சிப் பொருளாக வைக்கப்படுவதுதானே சகஜமானது. அது பழமாகட்டும். பெண்ணாகட்டும், இயந்திரமாகட்டும், மிருகங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், நாட்குறிப்புகளாகட்டும், நிர்வாணப் பொருட்களின் பேரரசர் நீங்கள் என்பதால் ஏன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல் மீது வழக்குப் போட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு ஓட்டு ஓட்டவில்லை என்றால் கால்டுவெல் வழக்குப் பற்றி கேள்விப்பட்ட அந்த கணத்திலே நான் அடைந்த அதிர்ச்சியில் எங்களுடைய உள்நாட்டு மதுவை மிக அதிக அளவில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஒரு வழியில், என் போன்றவர்களை ஒழித்துக்கட்டும் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அங்கிள், நான் அடித்தொண்டையிலிருந்து கத்தியிருந்தால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்க முடியாது. இயற்கையாகவே நான் மிகவும் கடமை உணர்வு கொண்டவன். என்னுடைய நாட்டை நான் நேசிக்கிறேன். கடவுளின் அருளால் இன்னும் சில நாட்களில் நான் இறந்துவிடுவேன். நான் என்னையே கொலை செய்து கொள்ளாவிட்டாலும், இன்று கோதுமை மாவு விற்கும் விலையில் வெக்கங்கெட்டவன் மட்டுமே அவனுக்கு இந்தப் பூமியில் விதிக்கப்பட்ட நாட்களை முழுமையாக வாழ முடியும்.
ஆக நான் கால்டுவெல் தீர்ப்பைப் படித்துவிட்டு, பெருமளவு உள்ளூர் சாராயத்தைக் குடித்து என் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தேன். அங்கிள், உங்களுடைய நாட்டில் எல்லாவற்றிலும் ஒருவித செயற்கை அலங்காரத்தன்மை உண்டு. ஆனால் என்னுடைய சகோதரன் கால்டுவெல்லை விடுவித்த நீதிபதியிடம் நிச்சயமாக எவ்வித செயற்கை அலங்காரத்தையும் காண முடியவில்லை. ஒரு வேளை அந்த நீதிபதி - என்னை மன்னிக்கணும், எனக்கு அவருடைய பெயர் தெரியாது; உயிரோடு இருந்தால் என் மதிப்பிற்குரிய வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்தவும்.
தீர்ப்பில் அவருடைய கடைசி வரிகள், அவருடைய அறிவார்ந்த தளத்தின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்: "இது போன்ற புத்தகங்களை ஒடுக்குவதின் மூலம் அந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும், அது மக்கள் மத்தியில் அவசியமில்லாமல் ஆவலை உருவாக்கி, தேவையில்லாமல் காம உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதையே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அமெரிக்க சமூகத்தில் ஒரு சாரார் பற்றிய உண்மையையே அவர் வெளிப்படுத்துகிறார் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். உண்மை என்பது எப்போதும் இலக்கியங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து."
என்னை தண்டித்த நீதிமன்றத்திலும் நான் இதையேதான் சொன்னேன் என்றாலும் அது எனக்கு மூன்று மாத கால கடுங்காவல் சிறை தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. என்னுடைய நீதிபதி உண்மையும் இலக்கியமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். பெரும்பாலானோரும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் மூன்று மாத கால கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக உள்ளேன். ஆனால், நான் முந்நூறு ரூபாய் அபராதத்தைக் கட்டக்கூடிய நிலையில் இல்லை. அங்கிள், உங்களுக்குத் தெரியாது. நான் வறுமையில் இருப்பவன். கடின உழைப்பிற்கு பழக்கப்பட்டவன். பணத்திற்குப் பழக்கப்பட்டவன் இல்லை. எனக்கு முப்பத்தொன்பது வயசுதான் ஆகிறது. என் வாழ்க்கை முழுக்க நான் கடினமாக உழைத்துள்ளேன். இதை மட்டும் நினைத்துப் பாருங்கள். பிரபலமான எழுத்தாளனாக இருந்தும் என்னிடம் பேக்கார்ட் கார் கிடையாது.
என் நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்று எப்படியோ சமாளிக்க முடிகிறது. ஆனால் என்னுடைய பல சகோதரர்கள் இவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் கிடையாது.
என் நாடு ஏழ்மையான நாடாக இருக்கட்டும். ஆனால் அது ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது? அங்கிள், நான் நிச்சயமாகச் சொல்கிறேன் இதற்குக் காரணம் நீங்களும் உங்களுடைய சகோதரன் ஜான்புல்-ம் தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. காரணம் அது உங்களுடைய காதுகளுக்கு இனிமையான இசையாக இருக்காது. நான் உங்களை மதிக்கும் இளையவனாக இருப்பதால் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அப்படி இருக்கவே விரும்புகிறேன். என் நாடு இத்தனை பேக்கார்ட், பைக் மற்றும் மாக்ஸ் ஃபேக்டர் ஒப்பனையைக் கொண்டிருந்தாலும் ஏன் ஏழ்மையில் உள்ளது என்று நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். அங்கிள், இது உண்மைதான். ஆனால் ஏன் என்ற காரணத்தை நான் சொல்லப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய இதயத்தைத் திறந்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். (உங்களுடைய அதி புத்திசாலி மருத்துவர்களால் உங்களுடைய இதயம் வெளியே எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்)
பேக்கார்ட் மற்றும் பைக்கில் பயணிக்கும் என்னுடைய நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் உண்மையில் என்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களில்லை. எங்கு என்னைப் போன்ற ஏழைகளும், என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு. இவையெல்லாம் கசப்பான விஷயங்கள். ஆனால் இங்கு சர்க்கரைத் தட்டுப்பாடு உள்ளது. இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் மீது தேவைப்படும் அளவிற்குப் பூசியிருப்பேன். அதனால் என்ன? சமீபத்தில் நான் ஈவ்லின் வாக்கின் புத்தகம் ‘த லவ்ட் ஒன்ஸ்’ படித்தேன். அவர் உங்கள் நண்பரின் நாட்டைச் சேர்ந்தவர்தான். என்னை நம்புங்கள், உடனடியாக இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தப் புத்தகத்தால் பாதிக்கப்பட்டேன்.
உலகத்தில் உங்களுடைய பகுதியில் பல மேதாவிகளைக் காண முடியும் என்று எப்போதும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்த பின் வாழ்க்கை முழுதும் அவருடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம். எத்தகைய செயல்! நான் சொல்கிறேன் உண்மையிலேயே அங்கு மிகவும் துடிப்புள்ள மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.
உங்களுடைய கலிபோர்னியாவில் இறந்தவர்களை அழகுபடுத்த முடியும் என்றும், அந்தக் காரியத்தைச் செய்வதற்குப் பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் ஈவ்லின் வாக் தெரியப்படுத்துகிறார். நமது அன்புக்குரியவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு கோரமாக இருந்தாலும் இறந்த பின் அவர் ஆசைப்பட்ட அழகை அவருக்குக் கொடுக்க முடியும். சில படிவங்களில் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். முடிக்கப்பட்ட பொருளின் தரம், சிறப்பானதாக இருக்கும் என்பது மட்டும் உத்தரவாதம்; தேவைப்படும் பணத்தை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்வரை. இறந்து போனவரை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் அழகுபடுத்த முடியும். இந்த நளினமான காரியத்தைச் செய்வதற்குப் பல நிபுணர்கள் உண்டு.
நம் அன்புக்குரியவரின் மோவாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய முகத்தில் அழகான புன்னகையை நட்டு வைக்க முடியும். அவருடைய கண் இமைகளைத் திறந்து வைப்பதோடு, நெற்றியைப் பார்ப்பதற்குப் பளபளவென்றும் மாற்றி அமைக்க முடியும். அதாவது இறந்தவர் கல்லறைக்குள் வைக்கப்பட்ட பின், அவருடைய கணக்கைத் தீர்ப்பதற்கு வரும் இரண்டு தேவ தூதர்கள் குழம்பிப் போகும் அளவிற்கு இவையெல்லாம் அவ்வளவு அற்புதமாக செய்து முடிக்கப்படும்.
அங்கிள், கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களுடைய மக்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. உயிரோடு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகு படுத்தப்படுவதையும் ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு அது பற்றி நிறைய பேச்சுகள் உண்டு. ஆனால் அது போலவே இறந்தவரையும் அழகு படுத்த முடியும் என்பதை இங்கு ஒருத்தரும் கேள்விப்பட்டதே கிடையாது. சமீபத்தில் உங்கள் நாட்டுப் பிரஜை ஒருவர் இங்கு வந்தார். சில நண்பர்கள் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது நான் சகோதரன் ஈவ்லின் வாக்கின் புத்தகத்தைப் படித்திருந்தேன்.
உங்கள் நாட்டைச் சேர்ந்தவருக்கு, அவர் புரிந்து கொள்ள முடியாத இரு வரி உருதுக் கவிதையைப் படித்துக் காண்பித்தேன். எப்படி இருந்தாலும் உண்மை என்னவென்றால், அங்கிள் நம்முடைய முகம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு அதைச் சிதைத்து விட்டோம். ஆனால் உயிரோடு இருந்ததைக் காட்டிலும் இறந்தபின் அழகுபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இந்தப் பூமியில் வாழ்வதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. மற்ற நாங்கள் எல்லோரும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய ஆகப் பெரிய உருதுக் கவிஞன் காலிப் நூறு வருடங்களுக்கு முன் எழுதினான்:
மரணத்திற்குப் பின் அவமானப்படுவது என் விதியாக இருந்தால்என் முடிவைத் தண்ணீரில் மூழ்கி எதிர்கொண்டிருப்பேன்அது என் சவ அடக்கத்தைத் தவிர்த்திருப்பதோடுஎன் இறுதி ஓய்விடத்தில் தலை மீது கல்லேதும் விழுந்திருக்காது.
உயிரோடு இருக்கும்போது அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு காலிப் அச்சம் கொண்டது கிடையாது. தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்போதும் அவன் அப்படிதான் இருந்தான். ஆனால் மரணத்திற்குப் பின் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொண்டான். அவன் மிகவும் பண்பட்டவன். தன்னுடைய மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்று மட்டும் அவன் அச்சம் கொண்டிருக்கவில்லை, அவன் சென்ற பிறகு என்ன நடக்கும் என்று மிகத் தெளிவாகவும் உணர்ந்திருந்தான். அதனாலேயே அவன் தன்னுடைய மரணம் தண்ணீரில் மூழ்கி ஏற்பட்டால் சவ அடக்கமோ கல்லறையோ அவசியமில்லாமல் போகும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.
அவன் உங்களுடைய நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு அவா கொள்கிறேன். அவனது கல்லறைக்கு அவனை மிகப் பிரமாண்டமான ஊர்வலத்தில் எடுத்துச் சென்று, அவன் ஓய்வெடுக்கும் இடத்தில் வான் உயர கட்டிடத்தைக் கட்டியிருப்பீர்கள் அல்லது அவன் விருப்பம் சாத்தியப்பட்டிருந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் அவனது உடல் வைக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் சென்று வருவது போல, அவனைப் பார்க்கப் போயிருப்பார்கள்.
உங்களுடைய நாட்டில் இறந்த மனிதர்களை அழகுபடுத்தும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் இறந்த மிருகங்களுக்கும் அது சாத்தியமாகும் என்று சகோதரர் ஈவ்லின் வாக் எழுதுகிறார். ஒரு நாய் ஒரு விபத்தில் தன்னுடைய வாலை இழந்துவிட்டால் அதற்குப் புதியதாக ஒரு வாலைப் பொருத்திவிடலாம்.
உயிரோடு இருக்கும்போது அதுக்கு எத்தகைய உடல்ரீதியான குறை இருந்தாலும், மரணத்திற்குப் பின் அதையெல்லாம் சரி செய்து விடலாம். பிறகு அது சடங்குகளோடு புதைக்கப்பட்டு மலர்வளையங்கள் அதன் கல்லறை மீது வைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் நம் அன்பிற்குரியது இறந்த தினத்தன்று அதனுடைய எஜமானனுக்கு இதுபோல் பொறிக்கப்பட்ட அட்டை ஒன்று அனுப்பப்படும்: “சொர்க்கத்தில் உங்களுடைய டாமி (அல்லது ஜெஃபி) அதனுடைய வாலை (அல்லது காதை) ஆட்டிக்கொண்டே உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது’’
இவையெல்லாம் எதை உணர்த்துகிறது என்றால் எங்களைக்காட்டிலும் உங்களுடைய நாட்டில் நாய்கள் எவ்வளவோ நல்ல நிலையில் உள்ளது. இங்கு இன்று நீங்கள் இறந்தால் நாளை மறக்கப்பட்டு விடுவீர்கள். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்து போனால், உயிரோடு இருப்பவர்களுக்கு அது ஏற்படுத்திய பேரிழப்பால் இப்படித்தான் கதறுவார்கள்: “இந்தப் பாவப்பட்டவன் ஏன் இறந்தான்? அவனுக்குப் பதிலாக நானல்லவா இறந்திருக்க வேண்டும்’’. அங்கிள் உண்மை என்னவென்றால், எங்களுக்கு வாழவும் தெரியாது. சாகவும் தெரியாது. நான் இதையும் கேள்விப்பட்டேன்.
உங்களுடைய நாட்டுப் பிரஜை ஒருவர் அவர் இறந்த பின் எத்தகைய சவஅடக்கம் அவருக்குக் கொடுக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரியாததால், அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சவ அடக்கம் எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்று நிகழ்த்திக் கொண்டாடினாராம். அவர் விருப்பப்பட்டால் ஒழிய எதுவுமே நடக்காத, செல்வம் கொழித்த, பகட்டான அவருடைய வாழ்க்கைக்கு இது தகுதியுடையதுதான். அவருடைய சவ அடக்கத்தில், காரியங்கள் சரியாகச் செய்யப்படாமல் போகும் சாத்தியங்களை அவர் ஒழித்துக் கட்ட விரும்பினார். உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய இறுதிச் சடங்குகளை அவரே நேராக நின்று பார்த்தது அவரளவில் நியாயமானதுதான். ஏனெனில் மரணத்திற்குப் பின் நடப்பவை எல்லாம் இங்கும் இல்லாதது; அங்கும் இல்லாதது.
நான் சற்று முன்தான் ‘Life’ (நவம்பர்-5 1951 சர்வதேச வெளியீடு) இதழைப் பார்த்தேன். அமெரிக்க வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். இரண்டு பக்கங்கள் விரிந்திருந்த அந்த விவரணை உங்கள் நாட்டின் ஆகச்சிறந்த கொள்ளைக்காரனின் இறுதிச் சடங்கை விவரித்திருந்தது. நான் வில்லிமொரீட்டியின் (அவனின் ஆன்மா சாந்தி அடையட்டும்) படத்தைப் பார்த்தேன்.
சமீபத்தில் $55,000க்கு விற்கப்பட்ட அவருடைய மிகப் பிரம்மாண்டமான வீட்டையும் பார்த்தேன். இந்த உலகத்தின் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க அவன் வைத்திருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் பார்த்தேன். கண்கள் மூடியிருக்க இறந்து போனதுபோல் அவன் படுக்கையில் கிடந்த படத்தையும் பார்த்தேன். $5000 விலை நகைப்பெட்டியும், அவருடைய சவ அடக்கத்திற்கு எழுபத்தைந்து கார்கள் ஊர்வலமாக வந்த படங்களும் அதில் இருந்தது. கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், அது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் வாயில் மண் விழட்டும். ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால், வில்லி மோரீட்டியை விட பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் உங்களுக்கும் நடத்தப்பட வேண்டும்.
பயணம் செய்வதற்கு ஒரு மிதி வண்டி கூட இல்லாத ஏழ்மையில் இருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளனின் உண்மையான வேண்டுதல் இதுதான். உங்களுடைய நாட்டில் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளவர்கள் போல், நீங்களும் உயிரோடு இருக்கும்போதே உங்களுடைய இறுதிப் பயணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இதை நீங்கள் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. எதையுமே தவறாகவே செய்யும் பழக்கமுடையவர்கள் இதிலும் தவறு செய்யக்கூடும். நீங்கள் இறந்தபின் உங்களுடைய உடல் தகுதியான அளவிற்கு அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படாமல் போகலாம்.
இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே கூட உங்களுடைய இறுதி ஊர்வலத்திற்கு நீங்களே சாட்சியாக இருந்திருக்கக் கூடும். நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்பதால் மட்டுமல்ல, நீங்கள் என்னுடைய தந்தையின் சகோதரர் என்பதாலும் தான் நான் இதையெல்லாம் சொல்கிறேன்.
என் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல்லுக்கும், அவரை ஆபாச வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரியப்படுத்தவும். நான் என்னை அறியாமல் ஏதாவது தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் ஏழைச் சகோதரனின் மகன்சாதத் ஹசன் மண்ட்டோபாகிஸ்தானில் குடியிருப்பவன்(இந்தக் கடிதத்திற்குப் போதுமான அளவு தபால்தலை இல்லாததால் தபாலில் சேர்க்க முடியவில்லை.)
2
31 லஷ்மி மேன்ஷன்,ஹால்ரோடு,லாகூர்.
என் மதிப்பிற்குரிய அங்கிள்,
வணக்கம்.
நான் சமீபமாக உங்களுக்கு ஏதும் எழுதவில்லை. உங்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றாலும் உங்கள் தூதரகத்திலிருந்து ஒரு நாகரிகமான மனிதர் - அவருடைய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, சில நாட்களுக்கு முன் உள்ளூர்க்காரர் ஒருவரோடு என்னைப் பார்க்க வந்தார். அந்த நாகரிகமான மனிதரோடு நடந்த உரையாடலின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.
நாங்கள் ஆங்கிலத்தில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கை முழுக்க என்னால் புரிந்து கொள்ள முடியாத, அமெரிக்க மொழி அல்ல அது.
நாங்கள் முக்கால் மணிநேரம் பேசினோம். ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு பாகிஸ்தானியையோ, ஒரு இந்தியனையோ சந்திக்கும்போது சந்தோஷப்படுவது போலவே என்னைச் சந்தித்ததிலும் சந்தோஷப்பட்டார். அவரைச் சந்தித்ததில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தேன். உண்மை என்னவென்றால், வெள்ளைக்கார அமெரிக்கர்களைச் சந்திப்பதில் நான் எப்போதுமே மகிழ்ச்சி அடைந்தது கிடையாது.
தயவு தாட்சண்யம் அற்ற என்னுடைய வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். போன யுத்த சமயத்தில், நான் பம்பாயில் இருந்தபோது ரயில் நிலையமான பம்பாய் சென்ட்ரலில் நான் என்னையே கண்டேன். அந்த நாட்களில் நகரம் முழுக்க எங்கு பார்த்தாலும் அமெரிக்கர்கள்தான். பாவப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களை எவரும் சீண்டவில்லை. பம்பாயைச் சேர்ந்த ஆங்கில-இந்தியப் பெண்மணிகள், யூதப் பெண்கள், பார்ஸி பெண்கள் நாகரிகம் என்பதால் கண்ட இடத்தில் படுத்தவர்கள் இப்போது ஒரு அமெரிக்கனோடு கைகோர்த்து நடப்பதைப் பார்க்க முடிந்தது.
அங்கிள், நான் சொல்வதை நம்புங்கள். உங்களுடைய படைவீரர்களில் ஒருவர் ஒரு ஆங்கில-இந்தியப் பெண்ணுடனோ, யூதப் பெண்ணுடனோ, பார்ஸி பெண்ணுடனோ, கைகோர்த்து பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கடந்து செல்ல நேர்ந்தால், அவர்கள் பொறாமையால் வெந்து எரிவதைப் பார்க்க முடிந்தது.
இந்த உலகத்தில் உண்மையிலேயே நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான மனிதர்கள்தான். எங்களுடைய படை வீரர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவில் பாதி அளவைக்கூட பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய அலுவலக உதவியாளனுக்குக் கூட மூச்சு முட்டும்வரை ஒரு வயிற்றை அல்ல, இரண்டு வயிறுகளை நிரப்பிக் கொள்ள முடிகிறது.
அங்கிள், நான் தவறாகப் பேசுவதற்கு மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையிலேயே இது மாபெரும் ஏமாற்றும் வேலை இல்லையா? இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே! நீங்களும் மனிதர்தான் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால் அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.
நான் தடம் புரண்டு போகிறேன். பம்பாய் சென்ட்ரலில் உங்களுடைய படை வீரர்கள் பலரைப் பார்த்தது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் என்றாலும் சில கருப்பர்களையும் எதிர்கொண்டேன். உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் என்றால், அந்தக் கருப்புப் படை வீரர்கள் வெள்ளைக்காரர்களைக் காட்டிலும் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.
உங்களுடைய மக்கள் பெரும்பாலானோர் ஏன் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வெள்ளையர்கள் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நீக்ரோ என்றழைக்கப்படும் கருப்பர்கள் கூட அதை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது? எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. இப்படியும் இருக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய பெரிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். நீங்கள் ஐந்து சுதந்திரங்களைப் பெற்றுள்ளதால் உங்களால் சுலபமான நிரந்தரமான தூக்கத்திற்கு ஆளாகப்படுகிறவர்கள் - நீங்கள் அப்படி செய்வது உண்டுதானே, உங்களை உங்களுடைய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்கப்படுவதை நீங்கள் விரும்பியிருக்கலாம்.
பம்பாய் சென்ட்ரலில் நான் ஒரு நீக்ரோ படை வீரரைப் பார்த்தேன். அவருடைய புஜங்களின் உறுதியைப் பார்த்த அந்த கணத்திலேயே என் உயரத்தில் பாதியாக நான் சுருங்கிப்போனேன். எப்படியோ என் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவரை நோக்கி நடந்தேன். அவர் முதுகைச் சுவரில் சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மூட்டை முடிச்சுகள் அவருக்கு அருகில் இருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.
என்னுடைய காலணிகளைத் தரையில் தேய்த்து நான் சத்தம் எழுப்ப, அவர் கண்களைத் திறந்து பார்த்தார். நான் அவரிடம் ஆங்கிலத்தில், ‘நான் இவ்வழியே போய்க் கொண்டிருக்க, உங்கள் ஆளுமையில் மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றேன். பிறகு அவரை நோக்கி நட்புக்கரம் நீட்டினேன்.
கண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்தப் படை வீரர், தன்னுடைய திடகாத்திரமான கையால் என் கையைப் பிடிக்க, என் கை எலும்புகள் சுக்குநூறாவதற்கு முன்பே என் கையை விடுவிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய கருத்த உதடுகளில் பெரிய புன்னகை தோன்றியது, அவர் என்னிடம், ‘நீங்கள் யார்?’ என்று சுத்தமான அமெரிக்க உச்சரிப்பில் கேட்டார்.
என் கையைத் தடவிக் கொடுத்தபடியே, ‘நான் இங்குதான் வாழ்கிறேன்’ என்றேன். மேலும், ‘நான் உங்களை இந்த நிலையத்தில் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது’ என்றேன்.
‘இங்கு நிறைய படை வீரர்கள் இருக்கிறார்கள். ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்டார்.
இது சிக்கலான கேள்வி என்றாலும் நான் சிரமப்படாமல் அதற்கு பதில் தந்தேன். ‘நான் கருப்பு நீங்களும் அப்படியே. நான் கருப்பின மக்களை நேசிக்கிறேன்’ என்றேன். மிகப்பெரிய சிரிப்பை வெளிப்படச் செய்தார். அவருடைய கருத்த உதடுகள் அவ்வளவு அழகாக இருந்தது. அதில் முத்தமிடவேண்டும் என்று தோன்றியது. கதை முற்றும்.
அங்கிள், உங்களுடைய பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். ‘பாத்திங் பியூட்டி’ என்ற உங்களுடைய திரைப்படம் ஒன்றை முன்பு ஒரு முறை பார்த்தேன். ‘இத்தனை அழகான கால்களை எங்கிருந்து எப்படி அங்கிள் ஒன்று திரட்டினார்' என்று என் நண்பர்களிடம் பின்னர் கேட்டேன். ஏறக்குறைய இருநூற்றி ஐம்பது கால்கள் அதிலிருந்தது என்று நினைக்கிறேன். அங்கிள் உங்கள் நாட்டில் பெண்கள் கால்கள் அப்படித்தான் இருக்குமா? அப்படி இருந்தால் கடவுள் புண்ணியத்தில் (அதாவது உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால்) குறைந்தபட்சம் அதை பாகிஸ்தானில் கண்காட்சியாக்குவதைத் தடுத்து நிறுத்துங்கள்.
இங்கு பெண்களின் கால்கள் உங்கள் நாட்டுப் பெண்களின் கால்களைவிட அழகாக இருப்பதுகூட சாத்தியம். ஆனால் அதை இங்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாங்கள் எங்களுடைய மனைவிமார்கள் கால்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற கால்கள் எல்லாம் எங்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டதாகும். உங்களுக்குத் தெரியும்தானே, நாங்கள் மரபைப் போற்றுபவர்கள்.
நான் மீண்டும் தடம் புரண்டு போகிறேன் என்றாலும் இம்முறை மன்னிப்புக் கோரப்போவதில்லை. ஏனெனில் இத்தகைய எழுத்துகள்தான் உங்களுக்குப் பிடித்திருக்கும். என்னைப் பார்க்க வந்த அந்த நாகரிகமான மனிதர், உங்களுடைய தூதரகத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி விட வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்காக ஒரு கதை எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். எனக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாததால், எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவரிடம், ‘சார் நான் உருது எழுத்தாளன். ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியாது’ என்றேன்.
“நான் உருது மொழியில் ஒரு பத்திரிகை கொண்டு வருவதால், எனக்கு உருதுக் கதைதான் வேண்டும்” என்று பதில் தந்தார். இதற்கு மேலும் விசாரிக்க விரும்பாததால், ‘நான் சம்மதிக்கிறேன்’ என்றேன்.
கடவுள்தான் என்னுடைய சாட்சி. உங்கள் உத்தரவின் பேரில்தான் அவர் என்னைப் பார்க்க வந்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை, இவருக்கு நீங்கள் படிக்க கொடுத்திருக்கலாம்.
இதையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். எத்தனை காலத்திற்குப் பாகிஸ்தானுக்கு உங்களுடைய கோதுமை தேவைப்படுகிறதோ, அதுவரை நான் உங்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ள முடியாது. ஒரு பாகிஸ்தானி என்ற முறையில் (என்னுடைய அரசாங்கம் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட குடிமகனாக என்னைப் பார்க்கவில்லை என்றாலும்) நான் கடவுளிடம் இதைத்தான் வேண்டிக் கொள்கிறேன்.
உங்களுக்கு உண்ணத் தகுந்த கீரை வகைகளும் வரகு தானியமும் தேவைப்படும் காலம் ஒன்று வரும். அன்று நான் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.
என்னிடம் கதை கேட்ட அந்த நாகரிகமான மனிதர், அதற்கு நான் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.
அங்கிள், பொய் சொல்வது உங்களுக்கு சாத்தியமானது - நிஜமாகவே அப்படிச் சொல்வதோடு, அதை ஒரு கலையாகவே அதை மாற்றிவிட்டீர்கள். ஆனால் எனக்கு அப்படி செய்யத் தெரியாது.
இருந்தாலும் அன்றைய தினம் நான் பொய் சொன்னேன்.
‘என் கதைக்கு ரூபாய் இருநூறு கேட்கிறேன்’ என்றேன்.
உண்மை என்னவென்றால் இங்கு பெரும்பாலான வெளியீட்டாளர்கள் ஒரு கதைக்கு நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரை தான் கொடுப்பார்கள். அதனால் என் கதைக்கு 200 ரூபாய் வேண்டுமென்று சொன்னபோது மிகவும் அசிங்கமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன். ஆனால் எல்லாம் கடந்துவிட்டது.
அங்கிள், நான் அதிர்ச்சியடைந்த அதே அளவிற்கு நீங்கள் அனுப்பி வைத்த அந்த நாகரிகமான மனிதரும் அதிர்ச்சியடைந்தார். (இது உண்மையா அல்லது நடிப்பா என்று எனக்குத் தெரியாது) ‘வெறும் இருநூறு ரூபாய் தானா... நீங்கள் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயாவது கேட்க வேண்டும்’ என்று சொன்னார்.
ஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கேட்கலாம் என்று அதிகபட்ச கற்பனையில்கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால், அவர் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் நான் சொன்னதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதால், ‘இங்க பாருங்க சார்., இருநூறு ரூபாய்தான் இது சம்பந்தமாக இதற்கு மேலும் எந்தப் பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரில்லை’ என்று பதில் தந்தேன்.
நான் குடித்திருப்பதாக நினைத்து அவர் திரும்பச் சென்று விட்டார். நான் குடிக்கிறவன் தான். எதைக் குடிக்கிறேன் என்று என்னுடைய முதல் கடிதத்தில் விவரித்துள்ளேன். அங்கிள், இங்கு தயாரிக்கப்படும் அந்த விஷத்தைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருந்தும், நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எப்போதாவது இங்கு வர நேர்ந்தால் இந்தக் கேடுகெட்டதை உங்களுக்கும் குடிக்கக் கொடுக்கிறேன். நீங்களும் அதைக் குடித்துவிட்டு உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு என்னைப்போல் உயிரோடு இருக்கலாம்.
எப்படியிருந்தாலும் அடுத்தநாள் காலை நான் வராண்டாவில் சவரம் செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய இந்த நாகரிகமான மனிதர் மீண்டும் தோன்றி, "இங்கே பாருங்கள். இருநூறு ரூபாய்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். முந்நூறு ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.
நான் நல்லது என்று சொல்லி அவர் கொடுத்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டேன். அந்தப் பணத்தை என் சட்டைப்பையில் வைத்தபின் அவரிடம், ‘நான் உங்களிடம் நூறு ரூபாய் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எழுதுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதில் மாற்றங்கள் செய்யும் உரிமையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்' என்றேன்.
இதற்குப் பிறகு அவர் என்னைப் பார்க்க வந்ததே கிடையாது. நீங்கள் அவரைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது உங்களிடம் அவருடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்போதோ உங்கள் பாகிஸ்தான் சகோதரரின் மகனுக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.
அந்த முந்நூறு ரூபாயை நான் ஏற்கனவே செலவு செய்துவிட்டேன். உங்களுக்கு அந்தப் பணம் திரும்ப வேண்டும் என்றால், மாதத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் திரும்பக் கொடுத்து விடுகிறேன்.
உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
உங்களுக்குக் கீழ்ப்படிந்தஉங்கள் சகோதரனின் மகன்.சாதத் ஹசன் மண்ட்டோ
3
31, லஷ்மி மேன்ஷன், 15, மார்ச் 1954ஹால் வீதி, லாகூர்.
அன்புள்ள அங்கிள்,
வணக்கம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இதை எழுதுகிறேன். விஷயம் என்னவென்றால் நான் நோயுற்று இருந்தேன். எங்களுடைய கவித்துவ மரபில் நோய்க்கான மருந்து என்பது நீண்ட கழுத்துள்ள குவளையிலிருந்து, உமர்கயாமின் கவிதைகளிலிருந்து நேரடியாகத் தோன்றும் ஒயிலான கவர்ச்சி மங்கைகள், அருமருந்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் உள்ளது. இருந்தாலும் நான் இதையெல்லாம் வெறும் கவிதை என்றே நினைக்கிறேன். குவளையை ஏந்தி வரும் அழகு மங்கைகள் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு தாடி முளைத்த கோரமான வேலையாட்கள் கூட குவளை ஏந்தி வருவது கிடையாது.
இந்த மண்ணிலிருந்து அழகெல்லாம் ஓடோடி விட்டது. பெண்கள் முகத்திரைக்கு வெளியே வந்துவிட்டார்கள் என்றாலும், அவர்களுடைய முகத்தை ஒரே ஒருமுறை பார்த்தால் போதும், முகத்திரைக்குப் பின்னாலேயே அந்த முகங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுடைய மாக்ஸ் ஃபேக்டர் அவர்களுடைய முகங்களை மேலும் கோரமாக்கிவிட்டது. இலவச கோதுமை, இலவச இலக்கியம், இலவச ஆயுதங்கள் என்று நீங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். மிகத் தூய்மையான இருநூறு அமெரிக்கப் பெண்மணிகளை நீங்கள் ஏன் இங்கு அனுப்பி வைக்கக்கூடாது? குறைந்தபட்சம் குடிப்பதற்கு எப்படி ஊற்றிக் கொடுக்க வேண்டுமோ அப்படியாவது அவர்கள் ஊற்றிக் கொடுக்கட்டும்.
நான் நோயுற்றுப் போக, அசாத்திய வேகம் கொண்ட அந்த மதுதான் காரணம் நான் கடவுளைச் சபிக்கிறேன். கலப்படம் ஏதும் இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்வதென்றால் - அது விஷம். எனக்கு ஏனென்று தெரியாததும் இல்லை. புரிந்து கொள்ள முடியாததும் இல்லை. ஆனால் கவிஞன் மீர் எழுதிய வரிகள் என் நிலைப்பாட்டிற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.
எவ்வளவு சாதாரணமானவன் இந்த மீர். மருந்து விற்பவனின் மகன்தான் அவனை நோயுறச் செய்தான்மருந்து விற்பவனின் மகன்தான் அவனுக்கு மருந்துகளை வாங்கி வர ஓடினான். எந்த மருந்து விற்பவனின் மகனால் அவன் நோயுற்றிருக்கிறான் என்று மீர் அறிந்திருந்தும், ஏன் அதே மருந்து விற்பவனின் மகனிடம் மருந்தை எதிர்பார்க்கிறான் என்று யாருக்குத் தெரியும். நான் எவனிடமிருந்து என் விஷத்தை வாங்குகிறேனோ அவன் என்னைக் காட்டிலும் மோசமாக நோயுற்றுக் கிடக்கிறான். நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டுப் போனதுதான். அவன் நிலையில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.
மூன்று மாதங்கள் மருத்துவமனையின் பொது வார்டில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் நோயுற்று இருந்ததையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று டெராமைசின் புட்டிகளை எனக்கு அனுப்பி வைத்து, அதற்காக இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் நற்பெயரைப் பெற்றிருப்பீர்கள்.
அயல்நாடுகளில், எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் செய்ய நிறைய இருக்கிறது என்றாலும் எங்களுடைய அரசாங்கம் எந்த நிலையிலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஓவியர்கள் மீது கொஞ்சமும் ஈடுபாடு காட்டப் போவதில்லை.
என்னால் நினைவில் கொண்டு வர முடிகிறது. புலம்பிக் கொண்டிருந்த எங்களுடைய முந்தைய அரசாங்கம் ஃபிர்தௌஸி -இ- இஸ்லாம் ஜூலந்தரியை மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று பாடல்களைப் பிரபலப்படுத்தும் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்டது எல்லாம் ஒரு வீடும் ஒரு அச்சு இயந்திரமும்தான். இன்று நீங்கள் செய்தித்தாள்களை விரித்துப் பார்த்தால் என்ன பார்க்க முடிகிறது?
பாகிஸ்தானுக்கு தேசியகீதம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டதால், ஹஸிப் ஜூலந்தரி புலம்பிக் கொண்டிருக்கிறார். உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாட்டிற்குத் தேசியகீதம் எழுதுவதற்கும், ஏன் அதை இசை வடிவில் கொடுப்பதற்கும் உள்ள ஒரே கவிஞர் அவர்தான். பிரிட்டிஷார் போய் விட்டதால் அவர் தன்னுடைய பிரிட்டிஷ் மனைவியை விவகாரத்து செய்துவிட்டார். இப்போது அவர் ஒரு அமெரிக்க மனைவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கிள், கடவுளுக்குப் புண்ணியமாகட்டும். அவருக்கு இந்த விஷயத்தில் ஏதாவது உதவி செய்து, மிக மோசமான முடிவிலிருந்து அவரைக் காப்பாற்றுங்கள்.
உங்களுடைய சகோதரன் மகன்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், இந்த சகோதரன் மகன் போன்ற உண்மையானவனை நீங்கள் அணுகுண்டு வெளிச்சத்தில் கூட காண முடியாது. அதனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் வேண்டுவது எல்லாம் இதுபோல் ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும்: ‘அதாவது உங்கள் நாடு (காலம் முடியும் வரை கடவுள் அதைக் காப்பாற்ற வேண்டும்) ஆயுதங்கள் கொடுத்து எங்கள் நாட்டிற்கு (இந்த நாட்டில் உள்ள மதுபான தயாரிப்பாளர்களை அந்தக் கடவுள் ஒழித்துக் கட்டட்டும்) உதவ வேண்டுமானால் சாதத் ஹசன் மண்ட்டோவை உங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்’.
ஒரே இரவில் என்னுடைய மதிப்பு எங்கோ போய்விடும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நான் ‘ஷாமா’ மற்றும் ‘டைரக்டரி’யில் வரும் குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மிக முக்கியமானவர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவார்கள். உங்களுடைய வழக்கமான பல்லிளிப்பை ‘ஏர் மெயிலி’ல் எனக்கு அனுப்பி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதை என் முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு வருகிறவர்களை ஒழுங்காக அப்போதுதான் வரவேற்க முடியும்.
இது போன்ற பல் இளிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ''நீ கழுதை', ' நீ வழக்கத்திற்கு மாறாக அதி புத்திசாலி', 'எனக்கு மன அமைதியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சந்திப்பில் கிடைக்கவில்லை', 'நீ அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட்', 'நீ பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி', நீ உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்து', 'நீ கோக்கோ-கோலா' இத்யாதி.. இத்யாதி...
பாகிஸ்தானில் நான் வாழ விரும்ப காரணம், பூமியில் இந்தத் துண்டுப் பகுதியை நான் நேசிக்கிறேன். இதிலிருந்து புறப்படும் தூசியெல்லாம் நிரந்தரமாக என் இதயத்தில் படிந்து விட்டது. இருந்தாலும் என் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு உங்கள் நாட்டிற்கு வருவேன். என் இதயத்தைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் உங்கள் நாட்டு நிபுணர்களிடம் கொடுத்து அதையெல்லாம் அமெரிக்காவாக மாற்றிக் கொள்வேன். எனக்கு அமெரிக்க வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது.
உங்கள் டி-சர்ட் வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. அது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு விளம்பரங்களுக்கும் ரொம்பவும் உபயோகமானது. ஒவ்வொரு நாளும் அன்றைய பிரச்சார வரிகளை அதில் அச்சடித்து ஷ¨ஸானிலிருந்து காபி ஹவுஸ் முதல் சீன உணவகம் வரை போனால் அதில் உள்ள வரிகளை எல்லோரும் படிக்கலாம். டீ-சர்ட் போட்டுக் கொண்டு, நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பைப்பை என் பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, மாலுக்குப் போக எனக்கு பேக்கார்ட்டு வண்டியும் தேவை. என்னைப் பார்த்தவுடன் எல்லா முற்போக்கு மற்றும் முற்போக்கு அல்லாத எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களுடைய நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
ஆனால் பாருங்கள் அங்கிள், காருக்கு பெட்ரோலை நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும். இருந்தாலும் எனக்கு பேக்கார்ட்டு கிடைத்த அந்த நொடியிலேயே 'ஈரானின் ஒன்பது மணங்கு எண்ணெயும் ராதையும்' என்று கதை எழுதுவதாக உறுதிமொழி தருகிறேன். என்னை நம்புங்கள். அந்தக் கதை பிரசுரமாகும் அந்தக் கணத்திலேயே ஈரான் எண்ணெயோடு உள்ள எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பிறகு உயிரோடு இருக்கிற மௌலானா ஜபார் அலிகான் 'லாய்ட் ஜார்ஜும் எண்ணெயும்' என்ற கவிதையை மாற்றி எழுத வேண்டி வரும்.
நான் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம் குட்டிக் குட்டியான அணுகுண்டுகளை நீங்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட நாட்களாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளேன். அது என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுவது இயற்கையானதுதான்.
நீங்கள் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். ஹிரோஷிமாவை நிர்முலமாக்கினீர்கள். நாகசாகியை தும்பும் தூசுமாக்கினீர்கள். ஒவ்வொன்றும் அதனதன் வடிவில் என்று பல ஆயிரம் குழந்தைகள் ஜப்பானில் பிறப்பதற்குக் காரணமானீர்கள். எனக்கு வேண்டியதெல்லாம், எனக்குச் சில சலவை இயந்திரங்களை அனுப்பி வையுங்கள். இது அப்படித்தான்: இங்கு பல முல்லா வகையறாக்கள் சிறுநீர் கழித்த பிறகு ஒரு கல்லை எடுத்து, ஒரு கையை நாடா அவிழ்க்கப்பட்ட சல்வாருக்குள் விட்டு சிறுநீர் கழித்த பிறகு சொட்டக்கூடிய துளிகளைக் கல்லில் பிடித்து, அவர்கள் நடையைத் தொடருகிறார்கள். இதைப் பொதுவில் எல்லோரும் பார்ப்பது போல் செய்கிறார்கள். நான் விருப்பப்படுவது எல்லாம் அப்படி ஒருவன் தோன்றும் அந்த சமயத்தில் நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த அணுகுண்டை எடுத்து அவன் மீது வீச அந்த முல்லாவும் அவன் பிடித்துக் கொண்டிருக்கும் கல்லும் புகையாக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
எங்களோடு நீங்கள் போட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதை நீங்கள் அப்படியே தொடர வேண்டும். இந்தியாவோடும் இதற்குச் சமமான ஒன்றை நீங்கள் கையெழுத்திட வேண்டும். போன யுத்தத்தில் நீங்கள் உபயோகித்து இப்போது பயனற்று இருக்கும் ஆயுதங்களை எல்லாம் எங்கள் இருவருக்கும் விற்பனை செய்யுங்கள். இந்தக் குப்பைகள் எல்லாம் உங்களிடமிருந்து அகற்றப்படுவதோடு, உங்களுடைய ஆயுதத் தொழிற்சாலைகளும் இனிமேல் வேலையற்று இருக்காது.
பண்டிட் ஜவகர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு சூரிய ஒளியில் வைத்தவுடன் வெடிக்கும் துப்பாக்கி ஒன்றை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நானும் காஷ்மீரைச் சேர்ந்தவன்தான். ஆனால் முசல்மான். அதனால்தான் எனக்கென்று சிறிய அணுகுண்டுகளைக் கேட்கிறேன்.
இன்னும் ஒரு விஷயம். எங்களால் அரசியல் சாசனத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் தயவுபண்ணி சில நிபுணர்களை அனுப்பி வையுங்கள். ஒரு தேசம், தேசியகீதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனம் இல்லாமல் இருக்க முடியாது - உங்களுடைய விருப்பமும் அதுவாக இருந்தால் மட்டும்.
இன்னும் ஒரு விஷயம். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன் ஒரு கப்பல் முழுக்கத் தீப்பெட்டிகளை எனக்கு அனுப்பி வைக்கவும். இங்கு தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் ஈரானில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளோடு உரசினால்தான் பற்ற வைக்க முடிகிறது. பாதிபெட்டி வரை உபயோகித்த பின், மிச்சத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் உதவியில்லாமல் உபயோகிக்க முடியாமல் வீணாகிறது. ஆனால் அது தீக்குச்சி போல் அல்லாமல் பட்டாசுபோல் நடந்து கொள்கிறது.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மேலங்கி அற்புதமானது. அவை இல்லாமல் எங்கள் லண்டா பஜார் வெறிச்சோடிக் கிடக்கும். அங்கிள், நீங்கள் ஏன் எங்களுக்கு டிரவுசர்களையும் அனுப்புவதில்லை. நீங்கள் உங்கள் டிரவுசர்களைக் கழற்றுவதே கிடையாதா? அப்படி ஒருவேளை செய்தால், அதை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள். இதிலும் ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும். எங்களுக்கு டிரவுசர் இல்லாமல் மேலங்கியை மட்டும் அனுப்பி வையுங்கள். டிரவுசரை எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வையுங்கள். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய டிரவுசரும் மேலங்கியும் நீங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு போரிட்டுக் கொள்ளும்.
சார்லி சாப்ளின் தன்னுடைய அமெரிக்கப் பிரஜா உரிமையைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப்பட்ட விஷயம் என்ன? அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான்? நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா? எவராலும் கவனிக்கப்படாமல் லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிந்ததை அவன் மறந்துவிட்டான் போலும்!
அவன் ஏன் ருஷ்யாவிற்குப் போகவில்லை? ஆனால் அங்குதான் கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லையே. அவன் இங்கிலாந்துக்குத்தான் போக வேண்டும். அப்போதாவது அங்குள்ளவர்கள் அமெரிக்கர் போல் வாழ்க்கையில் வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக் கொள்ளட்டும். தற்போதைய நிலையில் அவர்கள் எப்போதும் துயரம் நிறைந்தவர்களாகவும், தற்பெருமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய போலித்தன்மைகளில் சிலவற்றைக் கிழித்து எறிவதற்கு, இதுதான் சரியான சந்தர்ப்பம்.
ஹெட்டி லாமருக்கு காற்றில் ஒரு சுதந்திரமான முத்தம் கொடுத்து நான் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.
உங்கள் சகோதரனின் மகன்சாதத் ஹசன் மண்ட்டோ.
குறிப்புகள்:
1. ஹஸிப் ஜுலந்தரி - சுதந்திரத்திற்கு முன் மிக முக்கியமான உருதுக் கவிஞர். ஷாநாமா -இ-இஸ்லாம் என்ற இஸ்லாமிய வரலாறு பற்றிய காவியப் படைப்பின் மூலம் பிரபலமானவர். ஷாநாமா என்ற காவியத்தைப் படைத்த பாரசீகக் கவிஞன் ஃபிர்தௌசிக்கு சமமாக ஒப்பிடக்கூடியவர். ஹசீஃப் பிரபலமாக ஃபிர்தௌசி -இ- இஸ்லாம் என்று அழைக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் தேசியகீதம் எழுதும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட அவரும் அதைச் செய்து முடித்தார். இருப்பினும் தன்னுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு இருந்தது. அவரை மனிதனாகவோ, கவிஞனாகவோ மண்ட்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.
2. டெல்லியிலிருந்து வெளிவந்த 'ஷாமா', லாகூரில் இருந்து வெளிவந்த 'டைரக்டர்' இரண்டும் பிரபலமான உருதுப் பத்திரிகைகள். அச்சமயத்தில் இப்பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி நிறைய பணத்தைப் பரிசாகக் கொடுத்தது.
3. ஸெலின் காப்பி ஹவுஸ், பாக் டீ ஹவுஸ், செனே உணவகம் எல்லாம் லாகூரில் உள்ள மாலில் உள்ள பிரபலமான உணவகங்கள். எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் அங்கு ஒன்று கூடுவது வழக்கம். பாக் டீ ஹவுஸ் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
4. மௌலானா ஜாஃபர் அலிகான்: கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். 'ஜமீன்தார்' என்ற செய்தித்தாளை நிறுவியவர். 1950களில் இறந்து போனார்.

மதம் பற்றிய புதுக் கதை

அண்மையில் வெளியான Richard Dawkins -ன் The God Delusion - கடவுள் என்ற மாயம் - புத்தகத்தை முன்வைத்து மதம் பற்றி கதைத்தல்.ஊறுருப்பட்ட அடையாளங்களின் உலகலாவிய உரையாடல் பெருமளவு நடக்கும் காலகட்டமிது. இந்த தருனத்தில் மதம் பற்றி பேசும்பொழுது எம் பார்வையை குறிப்பிட்ட சில அடையாளங்களுக்குள் குறுக்கிக்கொண்டால் கருத்தியல் ரீதியான பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதேசமயம் சில தனித்துவமான கலாச்சாரங்களும், அடையாளங்களும் ஏற்படுத்தும் வன்முறைகளையும் அதன் பண்புகளையும் உலகளவில் பொதுமைப்படுத்தி பார்க்கமுடியாது.இதன் காரணமாக நாம் இங்கு எந்த ஒரு மையப்புள்ளியையும் சார்ந்து இயங்காமல் எமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முயன்றுள்ளோம். அதனால் மதம் என்று சொல்லி வைக்கும் கருத்தை இந்துத்துவம் இஸ்லாம் என்று வலிந்து கணிப்பதோ அல்லது இந்துத்துவம் இஸ்லாம் பற்றி வைக்கும் கருத்துக்களை மதம் சார்ந்து புரிந்து கொள்வதோ தவறான புரிதலுக்கே இட்டுச் செல்லும்.உலகளவில் பலமாக கட்டமைக்கப்பட்ட ஒரு அடையாளமாக இருக்கிறது மதம். ஏறத்தாழ ஆறு பில்லியன் உலக சனத்தொகையில் ஐந்து பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஏதோ ஒரு வழியில் தம்மை மதத்துடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது உலக சனத்தொகையின் மிகப் பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஒரு வகையில் தம்மை மதத்துடன் அடையாளப்படுத்துகிறார்கள்.மதம் சார்ந்த - மதம் பற்றி கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. எல்லா மதங்களும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவே தகவல்கள் சொல்கின்றன. அமெரிக்க மேற்குலக கிறித்தவ வலதுசாரிகளுக்கும் இஸ்லாமிய வலதுசாரிகளுக்கும் இடையிலான மோதல் உலகளவில் மும்முரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பின்னனியில் மதம் பற்றிய பார்வையை ஒரு சிறு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. இருப்பினும் டாக்கின்சின் புத்தகத்தை முன்வைத்து சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.பல்கலைக்கழகங்களில் ‘சமூக விஞ்ஞானம்’ என்ற போர்வையில் புகட்டப்படும் கருத்துக்களும் தனித்தியங்கும் ‘சமூக விஞ்ஞானிகளாக’ தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டவர்களின் கருத்துக்களும் ‘விஞ்ஞானம்’ என்ற போர்வையிட்டு கேள்விக்கு அப்பாலாகி தத்துவார்த்த சந்தேகங்களில் இருந்து தப்ப முயற்சிக்கின்றன. மேற்சொன்னவகை விஞ்ஞானங்களுக்குப் பின்னால் பல்வேறுவகை அரசியல் நோக்கங்கள் இயங்குகின்றன.இவற்றில் முக்கியமாக கவணத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins). ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியரான இவர் (Chair for the Public Understanding of Science ) உலகின் தலையாய புத்தி ஜீவிகளில் ஒருவராக கருதப்படுகிறார். உயிரியல் பரினாமவியளாளரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் மீம் (meme) என்ற புதிய கருத்தை உருவாக்கி மீமட்டிக்ஸ் (memetics) என்ற புதிய துறை உருவாக காரணமானவர்.இவரது மதம் பற்றிய கருத்துக்கள் உலகப் புகழ் பெற்றவை. அண்மையில் இவர் கடவுள் என்ற மாயம் (The God Delusion) என்ற புத்தகத்தை வெளியிட்டு மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இப்புத்தகத்தின் முன்னுரையில் மத நம்பிக்கையை அடித்து நொறுக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார். இப்புத்தகத்தை படிக்கும் மதசார்பானவர்கள் படித்து முடித்தபின் கடவுள் எதிர்ப்பாளராக மாறுவார்கள் என்று தம்பட்டம் அடித்திருந்தார்! விஞ்ஞானத்தின் மேலான அவரது ‘நம்பிக்கை’ அப்படி.அனைத்து விஞ்ஞான பூர்வ ஆய்வுகளுக்கும் வரலாறு உண்டு. டார்வின் பரிணாமவியலை அறிமுகப்படுத்திய பின்பு வரலாற்றுக்கு ஒரு புதிய அர்த்தம் பிறந்தது. தமது சமகால ஆய்வுகளை வேகமாக உள்வாங்கிய பொருள் முதல்வாதிகள் வரலாற்று பொருள் முதல்வாதம் என்ற விஞ்ஞான முறையை முன் வைத்தார்கள். ஸ்டாலினியத்திற்கெதிரான பனியுத்தத்தின் பெயரில் மேற்குலக சிந்தனையாளர்கள் இம்முறையை ஒதுக்கி ஓரங்கட்டினர். உலகெங்கும் ஸ்டாலினிஸ்டுகள் மார்க்சியத்தின் பெயரில் இயங்கியலுக்கும் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்திற்கும் உலைவைத்து இதற்கு உதவியது. இயங்கியல் சார்ந்து உருவான புரிதல்களை உள்ளெடுத்து-சிலசமயம் களவெடுத்து பல்வேறு மேற்குலக அறிஞர்கள் புகழ்பெற்றனர். (இதுபற்றிய விரிவான ஆய்வை இன்னுமொறு இடத்தில் பார்ப்போம்).இதன் காரணமாக பலரும் வரலாறு, பரிணாமம் என்ற கருத்துக்களை வெற்றிகரமாக குழப்பினர். வரலாறு பரிணாமாகவும், பரிணாமம் வரலாறாகவும்? தவறாக புரியப்பட்டு பல்வேறு விஞ்ஞான முறைகள் எழுந்தன. பரினாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கும் வரலாற்றின் அடுத்த கட்டத்திற்கும் வித்தியாசமில்லை என்று இவர்கள் ஆய்வுகள் கூறின. டாக்கின்சும் இவவகை சிந்தனையாளர்களில் ஒருவர். இருப்பினும் டாக்கின்ஸ் இவ்வகை சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவர்.தனித்துவமான திறமையான அறிஞர் என்ற காரணத்துக்காக அன்றி - அவருடைய ஜனரஞ்சக எழுத்து வன்மைக்காக மட்டுமன்றி - தான் வைக்கும் கருத்தை மற்றயவர்கள் போல் பூசி மெழுகாமல் மதத்தின் தலைவர்களுக்கும் அதன் உபகரணங்களுக்கும் இரக்கமின்றி அடிபோடுவது மட்டுமின்றி - மதத்துக்கெதிரான தொடர் பிரச்சார நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக நாம் டாக்கின்சை பாராட்டித்தான் ஆகவேண்டும். இவரது இந்த நடவடிக்கை பலம் வாய்ந்த மத நிறுவனங்களுக்கும் ‘நிறுவப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும்’ எதிராக அவரை நிறுத்தியுள்ளது. இந்த மாதிரி சிக்கலான முரன்பாட்டை தவிர்ப்பதற்காக இப்படிப்பட்ட பல்கலைக்கழக புத்தி ஜீவிகள் தம் சக புத்தி ஜீவிகளுடன் சமரசத்துக்கு வந்து நேரடித் தாக்குதலை தவிர்ப்பர்.கருத்து ரீதியில் தத்துவார்த்த ரீதியில் தமது வேறுபட்ட கருத்துக்களை கஷ்டமான வசனங்களுக்குள் புதைப்பர். டாக்கின்ஸ் இவர்களில் இருந்து மாறுபட்டவராக தமது சக பயணிகள் என்ற சமரசத்தில் இறங்காமல் இவர்களை பெயர் ஊரோடு “பேர்சனலாக” விளாசித் தள்ளுவது மதிக்கப்படவேண்டியதே.ஆதிக்க சக்திகளுக்கு எதிராக டாக்கின்ஸ் இயங்குகிறார் என்று நாம் கூறுவதாக தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இவரது ஆதிக்க சக்திகளுடனான சமரசம் சமூகம் பற்றிய தெளிவான புரிதலின்மையால்- இவரது தத்துவார்த்த குறைபாட்டில் இருந்து பிறக்கிறது. இது அவரது சமூக பொருளாதார அந்தஸ்துக்கு உதவுவதாக இருப்பதும் - இந்த அந்தஸ்து அவரது கருத்துருவாக்கத்தை கடுமையாக பாதிப்பதும் நிச்சயமாக கவனத்தில் எடுக்கப்படவேண்டியதே. மத நிறுவனங்களின் மேலான அவரது தாக்குதலை வரவேற்று அவரது “விஞ்ஞான” முறை என்ற போர்வையில் சுற்றித்தரப்படும் மதம் பற்றிய அணுகுமுறைய பார்ப்போம்.மதமும் மீமியலும்மீம், மற்றும் மீமியல் பற்றிய முழு விளக்கத்தையும் இங்கு குறுக்கித்தர முடியாது. இருப்பினும் மதத்தை டாக்கின்ஸ் அணுகும் முறையை தெரிந்துகொள்ள வேண்டுமானால் சில மீமியலின் அடிப்படைகளை தெரிந்தே ஆகவேண்டும். மீம் (meme) என்றால் கலாச்சார பரப்பல் அலகு (Unit of Cultural Transmission) இங்கு அலகு என்று குறிப்பிடுவது எந்த கருத்தாக்கமாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட சிந்தனை முறை, கலாச்சாரம், பல்வேறு நம்பிக்கைகள் என்று மீம் அலகுகள் உலக கலாச்சார வெளியில் எதுவாகவும் இருக்கலாம்.இந்த அலகு எவ்வாறு மனிதர்களுக்கிடையில் பரிமாற்றம் அடைகிறது அதாவது எவ்வாறு பிரதி (Replication) செய்கிறது, பரவுகிறது, பரினாமமடைகிறது என்ற முறைகளை மீமியல் ஆய்வு செய்கிறது. எவ்வாறு மீம் பரிணாமம் அடைகிறது என்ற கேள்வி எழுந்தவுடன், பரினாமத்தை விளக்கும் இனமரபியில் உத்திகள் உடனடியாக தருவிக்கப்படுகின்றன. வல்லது வாழும் போன்ற டார்வீனிய முறைகளையே மீமியல் பரினாமத்திற்கும் உபயோகப்படுத்துகின்றனர்.பரிணாமம்; பல்வேறு வகைப்படும். மரபணு (Gene) அடிப்படையிலான பரிணாமம் ஒருவகை பரிணாமம் மட்டுமே. அதன்படி மனித கலாச்சார வளர்ச்சி முறைகளை விளக்க முடியாது என்று கூறும் டாக்கின்ஸ் அவற்றை விளக்க புதியவகை பரிணாமமுறையாக மீம் அடிப்படையிலான பரினாம முறையை அறிமுகப்படுத்தினார். சில மீம்கள் மிக வேகமாகவும் நீண்ட காலத்துக்கும் பரவக்கூடியன. சில தோன்றி வெகு விரைவில் மடிந்து போகின்றன. தன்னைத்தானே வேகமாக பிரதி செய்யும் மீம் வெற்றியடைந்த மீம்மாக நிலைபெறுகிறது. ஒரு மீம் தன்னை மீண்டும் பிரதிசெய்யும் தன்மை பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கிறது என்று கூறும் டாக்கின்ஸ் சில முக்கியமான காரணங்களாக பின்வருவனவற்றை முன்வைக்கிறார்.வெற்றியடையும் மீம்கள் நேரடிக் கவணத்தை ஈர்ப்பனவாக இருக்கின்றன அல்லது தம்போன்ற மற்றய மீம்கள் மத்தியில் (ஏற்கனவே அதிகளவு பிரதிசெய்யும் மற்றய மீம்கள் மத்தியில்) சென்று இவை மேலும் அதிகமாக பெருகுகின்றன. இதன் மூலம் தமக்குள் உதவிசெய்யும் மீம்கள் மேலும் அதிகமான பிரதிகளை உருவாக்குகின்றன. இவ்வாறு கலாச்சாரத்தை ஆட்டிப்படைக்கும் ஆழமையான மீம்கள் உருவாகின்றன. இதேபோல்தான் மதக்கருத்துக்கள் பெருகி முதன்மைப்பட்டன. வெவ்வேறுபட்ட மதக்கருத்துக்கள் ஏற்கனவே உருவாகியிருக்கும் பல்வேறுபட்ட மீம்தொகைகளுடன் (Memeplexes) ஒத்ததாக அல்லது தொடர்புள்ளதுபோல் தோன்றுவதால் பிரதியாக்கம் அதிகளவில் நடக்கிறது.உதாரணமாக ‘நீ உன் மரணத்தில் இருந்து தப்புவாய்’, ‘கடவுளின் மேலான நம்பிக்கை புனிதமானது’ போன்ற மதம்சார் மீம்கள் மீம்தொகையில் இலகுவான பிரதியாக்கத்தில் ஈடுபடக்கூடியனவாக வெற்றிபெறக்கூடியனவாக இருக்கின்றன. மீம் தொடர்பாடலில் திளைக்கும் வல்லமை பல மீம்களுக்கு உண்டு என்றாலும் சில மீம்கள் மற்றய மீம்களின் மத்தியில் மட்டுமே திளைக்கும் பிரதிசெய்யும். அதன்மூலம் அவை ஒரு மாற்று மீம் தொடர்பாடலை உருவாக்குகின்றன.இதன்படி கத்தோலிக்க மதமும், இஸ்லாமும் மற்றய மதங்களும் தனி நபர்களால் உருவாக்கப்பட்டவையல்ல. மாறாக மாற்று மீம் தொடர்பாடலாக அதிக பிரதியாக்கங்கள் அடைகின்றன. அதனால் இஸ்லாம் மத மீம்மும் கத்தோலிக்க மத மீம்மும் தொடர்பாடலில் தோல்வியுறும். அதாவது மாற்று மீம் தொகைகள் ஒனறுக்குள் ஒன்று வளர முடியாது. மதத்தோற்றத்தின் ஆரம்பகாலத்தில் மதம் சார்ந்த தனித்த மீம்கள் அவற்றின் சர்வதேச கவனிப்பால்-ஈர்ப்பால் மட்டுமே பிரதியாக்கம் பெற்றன. அதாவது இந்த மீம்கள் பொது ஈர்ப்பு (Universal appeal) கொண்டவையாக இருப்பதால் மீம் பிரதியாக்கம் பெற்றன.நாளடைவில் எவ்வாறு மதம் அமைப்பு மயப்பட்டு இயங்கத் தொடங்கியது என்பதை மீம் தொடர்பாடலின் மூலம் விளங்கப்படுத்தமுடியும் என்ற குறிப்பிடும் டாக்கின்ஸ் இதற்கு உதவியாக பாதிரிகளினதும், மதவாதிகளினதும் திரிபு படுத்தும் வேலைகள் உதவியாக இருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது என்று குறிப்பிடுகிறார். இவ்வகையில் மதம் ஒருவகை Intelligent Design என்று நகையாடும் அவர் மீமியல் தெரிவு (Memetic Selection) மதத்தின் வளர்ச்சியை தெளிவாக விளக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.மீமியலின் பற்றாக்குறைமதம் ஒரு கருத்தாக உருவாகிப் பரவவில்லை. கருத்துக்களும் நடவடிக்கைகளும் என்று அணுகுவது மிகவும் பிழையானது. மனித வாழ்க்கை வரலாறு உயிரியல் மட்டும் சார்ந்த ஒரு தனித்தியங்கி அல்ல. மாறாக அது பல்வேறு வகை புறவய காரணிகளின் பாதிப்புள்ளாகிய மனிதர்களுக்கிடையிலான மனித குழுக்களக்கிடையிலான உரையாடல். மீம்களின் ஒரு குறிப்பிட்ட கருத்து பொருள் பரவுவதன் மூலம் இவை நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக தேவை, குறிப்பாக அத்தியாவசியத் தேவைகளின் மூலமும் அதை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பல்வேறு புறக் காரணிகளுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமும்தான் இவை தீர்மானிக்கப்படுகின்றன.மதத்தின் தேவை பற்றி மீமியலின் மூலம் சிந்திப்பது சாத்தியமற்றது. மதத்தின் தோற்றம் பற்றி டாக்கின்ஸ் வைக்கும் கருத்து குழந்தைப்பிள்ளைத் தனமாக இருக்கிறது. முன்பொருநாள் பொது ஈர்ப்பு கொண்ட ஒரு கருத்து எழுந்தது. பின்பு அந்த ஈர்ப்பின் காரணமாக அது பற்றிப்பரந்தது என்று கதை எழுதுவது விஞ்ஞான முறை அல்ல. இன்று பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் முன்வைக்கும் கல்விமுறையும் இவற்றுக்கு பின்னால் இயங்கும் ஆதிக்க அரசியல் பின்னனிகளுமே இப்படியான விதண்டாவாதங்களை விஞ்ஞானமயப்படுத்த காரணமாயிருக்கின்றன.இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கான காரணங்கள் என்ன? சமுதாய ஏற்றத் தாழ்வுக்கான காரணங்கள் என்ன? அவற்றை எவ்வாறு தீர்த்துவைக்க முடியும்? ஏன் முட்டாள்தனமாக மதத்தின் பெயரில் ஒடுக்குமுறைகளும் சுரண்டலும் நடக்கிறது? போன்ற புறக்காரணிகள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு டாக்கின்ஸ் இடமோ மீமியல் வாதிகளிடமோ தெளிவான விளக்கம் இல்லை. தகவல் பரிமாற்றம் தகவல் பரிணாமம் என்ற குறிப்பிட்ட துறையை இவர்கள் கலாச்சாரத்திற்கு பன்முகப்படுத்தி வாசிக்க முயல்வது பெரும் தோல்வியையே தழுவுகிறது.உதாரணமாக அயர்லாந்தில் காலம் காலமாக முரண்பட்டு நிற்கும் கத்தோலிக்க புரட்டஸ்டான்ட் மக்களின் அமைதிக்கு டாக்கின்ஸ் முன்வைக்கும் தீர்வு கேலிக்கிடமானது. கலப்புப் பாடசாலைகளை உருவாக்கினால் ஒரு சந்ததிக்குள் எல்லாம் மறக்கப்பட்டு அமைதி வந்துவிடும் என்று கருதுகிறார் அவர். சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு அவர் மேலோட்டமாக பார்க்கிறார் என்பதைகாட்ட இது ஒரு நல்ல உதாரணம்.பொஸ்னியாவில் நடந்த சேர்பிய அரசின் ஆதிக்க சக்திகளின் இன அழிப்பு நடவடிக்கை இன அழிப்பல்ல. அது மதம் சார்ந்த மத அழிப்பு என்று கருதும் டாக்கின்ஸ் இன்று ஈராக்கில் சியா, சென்னி மதங்களுக்கிடையிலான யுத்தமும், மதச்சுத்திகரிப்பு நடவடிக்கையே என்று இலகுபடுத்துகிறார்.பல மதத்தைச் சேர்ந்த ஈராக் மக்கள் ஒரே பாடசாலையில் படித்ததும், அங்கு தொடர்ந்து மத கலப்பு திருமணங்கள் நடந்ததும் பற்றி டாக்கின்ஸ் கவனத்திற்கு கொடுக்கவில்லை. அயர்லாந்தில் வேலை செய்யக்கூடிய உத்தி ஈராக்கில் பலமிழந்தது ஏன் என்று விளங்கவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலை ஒழித்து வைக்கவே டாக்கின்ஸின் மதம்சார் அணுகுமுறை உதவுகிறது. ஐரோப்பிய மையவாதம் பற்றி பல இடங்களில் விளாசும் டாக்கின்ஸ் இஸ்லாம் என்று வந்தவுடன் தானும் ஐரோப்பிய மைய வாதத்திற்கு தாவுகிறார். கடந்த வருடம் (2006 மார்ச்) Jyllands-Postan என்ற டென்மார்க் பத்திரிகை முகமது பற்றிய 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. இது உலகளவில் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டுபண்ணியது.இதை எவ்வாறு சில வலதுசாரி இமாம்கள் ‘வெறுப்பை’ தூண்ட மேலும் பயன்படுத்தினார்கள் என்று சரியானபடி சுட்டிக்காட்டும் டாக்கின்ஸ் டென்மார்க் அரசு இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முஸ்லிம் மக்கள் கோரிக்கையை கேலிப்படுத்தி நிராகரிக்கிறார். எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்? அரசா இந்த காட்டூன்களை வரைந்தது அல்லது வெளியிட்டது? டென்மார்க் மக்கள் பத்திரிக்கை சுதந்திரம் உள்ள நாட்டில் வாழ்கிறார்கள். இது இஸ்லாமிய நாடுகளில் இருப்பவர்களுக்கு புரிவது கடினமாகத்தான் இருக்கும் என்று ஒரு போடு போடுகிறார். இந்த கேலிச்சித்திரங்களை வெளியிட்ட பத்திரிகை அரசின் பத்திரிகை என்பது மட்டுமல்ல இதற்கு எதிர்ப்பு மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மத்தியிலேயே முதல் எழுந்தது என்பதும் டாக்கின்சுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் டென்மார்க் அரசை வாஞ்சையுடன் ஆதரிப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று எமக்கு தெரியும். இதற்கு ‘மத எதிர்ப்பு’ என்ற போர்வை போதாது. இதற்கு பின்னால் இருக்கும் ஐரோப்பிய மையவாதமும் இன மையவாதமும் வெளிச்சமாக தெரிகிறது.இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற முன்னின்றதற்காக காந்தியையும், நேருவையும் பாராட்டி எழுதும் டாக்கின்ஸ் இந்தியா, பாகிஸ்தான் உடைவையோ, அந்த உடைவில் ஓடிய இரத்த வெள்ளத்தையோ அல்லது இன்று மதத்தின் பெயரில் நடக்கும் கொடூரத்தையோ, வர்ணாச்சிரம் வளர்த்த அரசையோ விமர்சிக்கத் தவறுகிறார். அவரது மேலோட்டமான பார்வைக்கும் எழுந்தமானமாக வைக்கும் கருத்துக்களுக்கும் இவை நல்ல உதாரணங்கள். அவர் தானே முன்னுரையில் கூறுவதுபோல் கிறிஸ்தவம் தாண்டி மற்றய மதங்கள் பற்றிய ஆழமான அறிவு அவருக்கில்லை. (அவரை உலகின் மிகப் பெறும் புத்தி ஜீவியில் ஒருவராக நிறுத்தி வைத்திருக்கிறது பல மேற்கத்திய கணிப்பீடுகள் என்பதை இங்கு கவனிக்கவும்)இஸ்லாமிய நாடுகளில் வாழும் மக்களிற்கு பத்திரிகை சுதந்திரம் பற்றி தெரிந்திருக்காது என்று தெரிவிக்கும் அவர் தெனாவெட்டுக்கு காரணம் அறிவு போதாக்குறை மட்டுமல்ல. இன்றய காலகட்டத்தில் - முஸ்லிம்களுக்கு மேலான மோசமான வலதுசாரி தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் இன்றய காலகட்டத்தில்- இவர் எந்த அரசியலின் பின்னால் நிற்கிறார் என்பதை இவை எமக்கு தெரிவிக்கின்றன. ஏன் முஸ்லிம்கள்மேல் தாக்குதல் நிகழ்கிறது என்றோ, எண்ணை வியாபாரிகளின் போட்டி பற்றியோ டாக்கின்ஸ் அதிகம் பேசமாட்டார். மதத்திற்கெதிராக தன்னை காட்டிக் கொண்டாலும் இந்த மதத்தை கருவியாக பாவிக்கும் அதிகாரத்திற்கு எதிராக தன்னை நிறுத்திக்கொள்ள அவர் தயாரில்லை.இன்றைக்கு இயங்கிக் கொன்டிருக்கும் புத்திஜீவிகளின் பண்பே இதுதான். சமகாலத்து புத்திஜீவிகள் டாக்கின்சை விட கேவலமான முறையில் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிந்து கிடக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும். டாக்கின்ஸ்மேல் நாம் வைக்கும் விமர்சனம் மற்ற வலதுசாரி புத்திஜீவிகளை காப்பாற்ற அல்ல. அல்லது மேரிமிட்சிலி (Mary Midgley) போல் மதத்தை காப்பாற்றும் நோக்கமும் நமக்கில்லை. கலாச்சாரம் பற்றியும் மொழிபற்றியும் டாக்கின்ஸ் வைக்கும் வாதங்கள் குறுகிய பார்வைக்கு இட்டுச்செல்லும் சாத்தியகூறு இருப்பினும் அவை முழமையாக மறுக்கப்பட கூடியவை அல்ல. அவற்றை முழமையாக தவிர்த்து மேரிமிட்சிலி போன்றவர்கள் வைக்கும் வாதங்கள் டாக்கின்சை விளங்காததாகவே தொணிக்கின்றன.மொழியும் கலாச்சாரமும் சிறு அலகுகளாக பிரிக்கப்பட கூடியவை அல்ல. அவை ஒரு தொடர் ஒழுங்கு(continum) என்று டாக்கின்ஸ் மேல் சாடுகிறார் மேரி. டாக்கின்ஸ் மீம்மை ஒரு வழிமுறையாக அறிமுகப்படுத்துகிறார் அன்றி அதை ஒரு சிறு அலகு என்று குறுக்கவில்லை. கலாச்சாரம் போன்றவை சுருக்கி அறியப்படமுடியாதவை (Irreducible Complexity - IC) என்ற கருத்து பிழையானது என கூறும் டாக்கின்ஸ் அறிதலின் சாத்தியத்தின்மேல் இது நம்பிக்கையின்மையை உருவாக்குவதை சுட்டிக்காட்டுகிறார். இயற்கையை விளங்கிக்கொள்வதற்கு எம்மிடம் இருக்கும் ஒரே சாதனம் விஞ்ஞானமே எனும் டாக்கின்சை எதிர்த்து மதத்துக்கான தேவையை வலியுறுத்துகிறார் மேரி. விஞ்ஞானத்திற்கும் அப்பாலான புரிதல் சாத்தியம் என்கிறார் அவர்.மனித வளர்ச்சி முறையை விளங்கிக்கொள்வதற்கான விஞ்ஞான முறைகளின் போதாக்குறையால் பல்வேறுபட்ட பிழையான முடிவுகளுக்கு பலர் தாவுவதும். ‘மரபணு’ சார்ந்த புரிதலை மட்டும் முதன்மைபடுத்துவதும் தவறான நடவடிக்கைகள் என்று டாக்கின்ஸ் சுட்டிக்காட்டுவதை இங்கே கவனிக்க வேண்டும். மனித வளர்ச்சியின் பண்புகள் மிக சிக்கலானவை என்ற காரனத்திற்காக அவை மனிதரின் புரிதலுக்கு அப்பாற்பட்டவை அல்ல. டாக்கின்சால் சில வெளிச்சங்களை ஏற்படுத்த முடியுமானால் அது வரவேற்கப்பட வேண்டியதே. மேரியின் விஞ்ஞானத்திற் கப்பாலான புரிதலை விட இது முற்போக்கானதே.கர்ல் பொப்பர் (Karl Popper) எது விஞ்ஞானம் என்ற கேழ்வியை பிரபலப்படுத்திய பின் சமூகவியல் ஆய்வுகளுக்கு ‘விஞ்ஞானம்’ என்ற அடையாளத்தை தருவிக்க பலரும் வலிந்து பொளதீகமுறை விஞ்ஞான உத்திகளை சமூகவியலுக்கு தருவித்து புகுத்த முயலுவதாக கருதும் மேரி டாக்கின்ஸின் மீமியல் அதற்கு உதவுவதாக கூறுகிறார். இவர்கள் தமது தர்க்கங்களை பொளதீகவியல் தர்க்கங்களுக்கு ஒத்ததாக மாற்றியமைத்து விஞ்ஞானம் என்ற மாயத்தோற்றத்தை உண்டுபண்ண நினைப்பது தேவையற்றது என்று பொதுவான சரியான கருத்தை வைத்து சமூகவியலுக்குள் பண்மைத்துவத்துக்காக போராடுவதாக அடையாளப்படும் மேரி அதன் பகுதியாக பொப்பரை ஏற்று டாக்கின்ஸ்க்கு அடிபோட பார்க்கிறார். உண்மையை பொய்யோடு பிணைந்து ‘கலப்படமான உண்மை’ என்ற புனித புதிய கட்டுமானத்தை உருவாக்குவதாக அவரது கதை விரிகிறது.கார்ல் பொப்பர் விஞ்ஞானம் பற்றியோ விஞ்ஞான முறை பற்றியோ எதுவிதமான ‘பவுதீக விஞ்ஞான பூர்வ’ நிறுவல்களையும் ஏற்படுத்தவில்லை. மார்க்சியம் விஞ்ஞான பூர்வமானதென்ற அனுகுமுறைக்கு எதிராக கிளம்பிய பல வாதங்கள் ஒழுங்குகளுக்குள் தலையாய குரல் பொப்பரது.பொளதீக முறை அணுகுமுறை அல்லது ‘உண்மையான’ விஞ்ஞான முறை என்று மேரி கருதுவது எதை? நிறுவப்படக்கூடியது, பரிசோதனையின் மூலம் அறியப்படகக்கூடியது, பாவனைக்கு உட்படக்கூடியது என்ற அடிப்படைகளில் வகுக்கப்படக்கூடியதுதான் விஞ்ஞானமாயின் பல புதிய ‘விஞ்ஞான’ கண்டுபிடிப்புகளை ஒதுக்கித்தள்ள வேண்டியதுதான். ஏன் ஜன்ஸ்டைன் கண்டுபிடிப்புக்கள் பலவற்றை கூட இந்த முறையில் ஒதுக்க முடியும். அதற்கான பல முயற்சிகள் முன்பு நடந்ததும் நாமறிவோம். FBI தலைமை அதன் அரக்க தலைவர் எட்கார் கூவர் - ஜன்ஸ்டைனின் சார்பியலையே மறுத்து நிறுவ பல முன்னனி விஞஞானிகளை தூண்டியதும் அதை தலைமேல்கொண்டு பல வலதுசாரி முண்ணனி விஞ்ஞானிகள் முக்கி முக்கி நேரம் விரயம் செய்ததும் இன்று அனைவரும் அறிந்ததே. ஜன்ஸ்டைன் சோசலிஸ்ட் என்ற ஒரே காரணத்தால் ஜன்ஸ்டைனுக்கு இக்கதி என்றால் மார்க்ஸை முடக்க இவர்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை ஊகித்து கொள்ளுங்கள்.டாக்கின்சுக்கு எதிரான புத்திஜீவிகளில் தெளிவான கருத்துக்களை வைப்பவராக குறிப்பிடத்தக்க சிந்தனையாளராக ஸ்டிபன் ரோசை குறிப்பிடலாம். தன்னை ஒரு மார்க்சியராக ரோஸ் கருதுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகள் அரசியல் கலாச்சார தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று கூறும் ஸ்டிபன் ரோஸ் வலதுசாரி அரசியல் நோக்கின் சிதறல்களாக டாக்கின்ஸ் போன்றவர்களின் தத்துவங்கள் பாவனை பெறுகின்றன என்ற அழுத்தமான கருத்தை வைக்கிறார்.மனித இயல்பை அறிதலுக்கான சரியான அணுகுமுறை இயங்கியலிடம் மட்டுமே இருப்பதாக அடித்துக்கூறும் ரோஸ் டார்வினிய அடிப்படை வாதத்தை மறுக்கிறார். மரபணுவுக்கும் இயற்கைக்குமான தொடர்பாடலால் மட்டும் உயிரின் தோற்றமும் வளர்ச்சியும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக இயற்கையின் மத்தியில் உயிரின் செயற்பாடு இயக்கம் அதன் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. அதன்மூலம் உயிரியும் இயற்கையும் மாற்றத்திற்குள்ளாகிறது என்று விளக்குகிறார் அவர்.ரோஸின் விஞ்ஞானம் பற்றிய பார்வை டாக்கின்ஸினதும் மேரியினதும் பார்வையில் இருந்து மாறுபட்டது. ரோஸ் போலி விஞ்ஞானங்களை விஞ்ஞானம் என்ற பெயரில் நடக்கும் திருகுதாளங்களை விமர்சிக்க, மேரியோ விஞ்ஞானத்திற்கு அப்பாலான புரிதலின் சாத்தியத்தின் அடிப்படையில் விஞ்ஞான முறைகளை கேழ்வி கேட்கிறார். டாக்கின்ஸ் கறாறான விஞ்ஞானத்தை முன்வைக்கிறார். அறிவுள்ள யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்காது என்ற Menza Magazine - ன் ஆய்வுகளை சுட்டிக்காட்டுகிறார் டாக்கின்ஸ். 1927ம் ஆண்டில் இருந்து நிகழ்த்தப்பட்ட 43 கணிப்பீடுகளின்படி ஒருவருடைய அறிவு எவ்வளவுக்கு அதிகமாக இருக்கிறதோ (IQ) அவ்வளவுக்கு மத நம்பிக்கை குறைவாக இருக்கும் என்று சுட்டிக்காட்டி உலகின் முக்கால்வாசி மக்களை ஒதுக்கித்தள்ளும் டாக்கின்ஸை சார்ந்தும் எதிர்த்தும் பல்வேறு புத்திஜீவிகள் இயங்குகிறார்கள். இருப்பினும் ரோஸையும் மேரியையும் மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் மாறுபட்ட குழக்களில் முண்ணனியில் இருப்பதும் அதற்குள் இருக்கும் இருவகை பாணியை இவர்கள் பிரதிநிதிப்படுத்துவதுமே ஆகும்.மத எதிர்ப்பும் அதன் அவசியமும், மதம் எதிர்ப்பின் வரலாறாகவும்‘மத எதிர்ப்பின்’ வரலாறு இன்றைக்கு நேற்று ஆரம்பித்ததல்ல. தொழிற்புரட்சிக்கு முன்பு கலாச்சாரம் பண்பாடு என்று மனித வரலாற்றுடன் பின்னிப்பினைந்து குழமைப்படுத்தும் தலையாய பிசையாக மதம் பலப்பட்டு இருந்த காலத்தில் கூட அதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. அக்காலத்தில் 1/3 பகுதி நிலம் கிறித்தவ ஆலயங்களுக்கு சொந்தமாக இருந்ததும் பல்வேறு மன்னர்களும் ஆளும் சக்திகளும் அவர்கள் கைவசம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ‘சமூக ஒழுக்கம்’, ‘கட்டுப்பாடு’ முதலான பொதுக்கருத்துக்கள், கலாச்சாரங்களின் சுரப்பிடமாக மதமே இருந்தது.மதம் தன் கிறுக்குப்பிடியில் சமுதாயத்தை வைத்துக்கொள்ள முயன்ற அக்காலத்தில் கூட அதற்கு எதிராக ஒடுக்கpபட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மதம் முன்வைத்த விளக்கம் எல்லா நேரமும் எடுபடவில்லை. அதன் ஒரு விழைவாக புதிய மதங்கள் எழுந்தன. இந்துத்துவத்துக்கு எதிராக எழுந்த புத்த சமன முறைகளை உதாரணமாக குறிப்பிடலாம். தொழிற்புரட்சி உந்தித் தள்ளிய வளர்ச்சிக்குப்பின் மதத்திற்கான எதிர்ப்பு மாற்றத்திற்கான தேவை பலமடைந்தது. நிலப்பிரபுத்துவத்தில் ஊறிய மதம் இதற்கு பலத்த எதிர்பை கிளப்பியது. ஆனால் லாப நோக்கை முதன்மைப்படுத்திய முதலாளித்துவ வளர்ச்சி மதத்தை ஓரங்கட்டி வளர முயன்றது.இதனால் கிறித்தவம் உட்பட பல மேற்கத்திய மதங்கள் மாற்றம் கண்டன. புது மதங்கள் உருவாகின. அதே சமயம் புதிய தலைமுறை சிந்தனையாளர்கள்- விஞ்ஞானிகள் பலரும் மதத்தின் அடிப்படை கருத்துகளை கேள்விகேட்கத் தொடங்கினர். விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக மதத்தின் பிடியில் இருந்து விடுபடதொடங்கியது. உலகம் தட்டை. வானத்தில் கடவுள் இருக்கிறார் போன்ற சின்னத்தனங்கள் உடைந்தன. உலகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற மதத்தின் கருத்துக்கு எதிராக டார்வினிய உயிரியல் எழுந்தது.இதன் பகுதியாக உருவான பெரிய மத எதிர்ப்பு தத்துவ ஞானியாக நீட்சேயை சொல்லலாம். ‘கடவுள் செத்துப்போன கதை உங்கள் காதில் விழவில்லையா’ என்று கத்திய நீட்சே மதத்திற்கு எதிராக வைத்த கருத்துக்கள் ஏராளம். இருப்பினும் மதத்தின் வளர்ச்சியை இந்த தத்தவ ஞானிகளால் மாற்றியமைக்க முடியவில்லை. மதம் வேகமாக தன்னை உருமாற்றிக்கொண்டது மட்டுமின்றி இந்த எதிர்ப்பாளர்கள் மாற்றத்திற்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பதும் அதற்கு முக்கிய காரணம். இவர்கள் செய்ததெல்லாம் வெறும் பிரச்சார நடவடிக்கைகள் மட்டுமே. ஒரு மாற்றத்திற்கு உதவியாக இருக்கலாமே தவிர பிரச்சாரம் மட்டும் மாற்றத்தை கொண்டுவரமுடியாது.மார்க்சியமும் மத்திற்கெதிராக பலமான குரலை வைத்தது. இருப்பினும் இந்தக் குரல் மற்றயவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கருத்து ரீதியால் வெல்வதால் மட்டும் மதத்தை நொருக்கிவிடலாம் என்று மார்க்சியர் நம்பவில்லை. ஒடுக்கப்படும் மக்களின் ஒருவகை இளைப்பாறும் தளமாக மதம் இயங்குகிறது என்பதை சரியாக புரிந்து கொண்டதால் டாக்கின்ஸ் போன்று உலகின் பல பில்லியன் மக்களை ஒதுக்கித் தள்ளும் செயலை மார்க்சியர் செய்வதில்லை. மதம் இன்று ஏன், எங்கு முக்கிய செல்வாக்கு செலுத்துகிறது என்ற முக்கிய கேள்வியை கேட்டிருந்தால் புத்திஜீவிகளுக்கு மதம் பரவும் விதம் பற்றி ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும்.இன்றைக்கு ஏறத்தாள 2 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் தங்களை கிறித்தவர்களாயும் 1.2 பில்லியனுக்கு அதிகமானவர்கள் தங்களை முஸ்லிம்களாயும் அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். அதே சமயம் உலகின் மொத்த சனத்தொகையில் மூண்று பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமையான இடங்களில் ஆப்பிரிக்காவில், ஆசியாவில், தென்னமரிக்காவில் மதம் புற்றீசல்போல் பரவி வருகிறது. ஏகாதிபத்தியத்தின் கடும் தாக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் ஆசிய, ஆபிரிக்க, அரேபிய நாடுகளின் அரசமைப்பில் மதம் முக்கிய பங்கை வகிக்கிறது. (இந்நாடுகளில் நிலவும் நிலபிரபுத்துவத்தின் எச்சசொச்ச பொருளாதார கலாச்சார முறைகளும் இதற்கு இன்னுமொரு உதாரணம்).மாற்று மதமாக இஸ்லாமிய அரசியலின் எழுச்சி நிகழ்கிறது. வளர்ச்சியடைந்த மேற்கத்தேய நாடுகளில் மதத்தின்பிடி இளகியிருப்பினும் இங்கு வாழும் வெளிநாட்டு வேலையாட்கள் மத்தியில் மதம் மிகமிக வேகமாக பரவிவருகிறது. (US, UK இதற்கு நல்ல உதாரணங்கள்). இது ஒரு விபத்து அல்ல. எழுந்தமானமான நடவடிக்கை அல்ல. மதம் உட்பட சமூகம் சார்ந்த அறிவு சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பின் வெளிப்பாடாக இருக்கிறது. மதம் சார்ந்து இயங்கும் பெரும்பான்மை மக்கள் விஞ்ஞானத்திலும் ஏன் அசையாத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற முரண்பாட்டை விளக்க, மதம், சார்ந்து இயங்கும் தளத்தை புரிந்து கொள்வது அவசியம்.‘வறுமை இருந்தே ஆகும்’ –என்று வலியுறுத்தும் இன்றய முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி பெரும்பான்மை மக்களை ஓரங்கட்டியே நிகழ்கிறது. உலகின் முன்னனி 50 பில்லியனர்களின் சொத்து உலகின் முன்னனி 40க்கும் மேற்பட்ட நாடுகளின் சொத்திலும் அதிகமாக இருக்கிறது. 2 வீத பணக்காரர் 50 வீதத்திற்கும் மேற்பட்ட உலகின் சொத்துக்களை தம்வசம் வைத்துள்ளார்கள். 20 வீதத்திற்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் எந்தவித அரசியல் பொருளாதார உறவுமின்றி வறுமையில் வாடுகிறார்கள். இந்த இருபது வீத மக்களுக்கு எந்த நாசம் அழிவு ஏற்பட்டாலும் உலக பொருளாதாரத்தில் மாற்றமேதும் ஏற்படபோவதில்லை.தென் கிழக்காசிய சுனாமி, அமெரிக்க கற்றினா, முதலான இயற்கை அழிவுகளுக்கு உட்பட்ட மக்களும், நித்தம் வெள்ளத்தால் அழியும் பங்களாதேசிய மக்களும், மற்றும் மில்லியன் கணக்கில் எயிட்சாலும் வறுமையாலும் அழியும் ஆபிரிக்கர்களும் உலக பொருளாதாரத்தில் பெரிய செல்வாக்கற்றவர்கள். ஓரு பொறுக்கி சர்வதேச நிறுவணம் அழிந்தால் அல்லது ஒரு முன்னனி வங்கி விழுந்தால் பொருளாதாரத்தில் பூகம்பமே வெடிக்கும் என்பதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.இந்த பொருளாதார முறை வறிய ஒடுக்கப்படும் மக்களின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை உண்டுபன்னி நிற்கிறது. அவர்தம் அத்தியா அவசிய தேவைகள் மட்டுமின்றி அடையாளம், சமூக தொடர்பாடல் எதுவும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், இவர்கள் ‘அறுந்த மனிதர்கள்’ ஆக்கப்படுகிறார்கள். ஏகாதிபத்தியத்தால் முதலாளித்துவ பொருளாதாரத்தால் உடைக்கப்பட்டு சிதறிய கலாச்சாரத்தில் தடுமாறும் இந்த ‘அறுந்த மனிதர்கள்’ மனிதரின் இயற்கையான தேவைகளுக்கு சமூக தொடர்பாடலின் தேவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல! அதை அடைவதற்கு அவர்களுக்கு வழியில்லாத நிலையில் பலரும் மதத்திடம் தஞ்சம் புகுகிறார்கள்.மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் கோவில்கள் ஒருவகை சமூக தொடர்பாடல் நிலையமாக விளங்கிவருகிறது. வறுமையில் வாடும் கறுப்பின, ஆசிய, அரேபிய இளவயதினர் தொடர்ந்து வறுமைக்கும் துவேசத்திற்கும் உள்ளாக்கப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் தூண்டப் படுவதை தவிர்க்க அவர்தம் பெற்றோர்கள் அவர்களை கோயில்களை நோக்கி துரத்துகின்றனர். தேசிய, இன, கலாச்சார அடையாளங்கள் அறுக்கப்பட்ட மனிதர்களுக்கு மதம் ஒரு அடையாளத்தை கொடுப்பதாக பாவனை எடுக்கிறது.நாம் மேலே குறிப்பிட்ட, தம்மை மார்க்சியராக கருதும் ஸ்டீபன் ரோஸ் தனது மகனின் அடையாளம் பற்றிய கேள்வி எழுந்தவுடன் குழப்பமடைகிறார். தனது புத்திஜீவி மனைவியாருடனான ஆலோசனையின் பின் மகனுக்கு அடையாளம் கொடுப்பதற்காக பிரிஸ் (சுன்னத்து) செய்வித்தார். இது ஒரு மதம்சார் முட்டாள்தனமான நடவடிக்கை என்பது அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் யூத இன அடையாளத்தை இழந்து தமது மகன் அறுபட்டுபோகலாம் என்ற பயம் அவர்களை கவ்விக் கொண்டது.இளைப்பாறும் குகையாக தோற்றமழிக்கும் மதம் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத் தேவையை பின்போடுகிறது அல்லது மழுங்கடிக்கிறது. மக்களுக்கு போலியான போதையை வழங்கி அவர்கள் கிளர்ந்தெழுந்து தமது உரிமைகளை கோருவதை தவிர்க்கிறது. இதனால் மதம் ஆதிக்க-ஆளும் வர்க்கத்தின் சிறந்த உபகரணமாக விளங்குகிறது. இஸ்லாம் பல அரபிய நாடுகளில் அரசியல் மதமாக விளங்குகிறது. அந்த அரசியல், ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான பாங்கால் அதிக செல்வாக்கை பெற்றுவருகிறது. இந்த ‘இஸ்லாமிய’ நாடுகளில் இருக்கும் வளத்தை கைப்பற்ற ஏகாதிபத்தியம் இஸ்லாமுக்கு எதிரான போரை தொடங்கியுள்ளது. இன்றைய பொருளாதார முறை உருவாக்கியுள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.ஏகாதிபத்தியம் செய்யும் பொய்பிரச்சாரங்களுக்கு சம்பந்தப்படாதது இந்த நாடுகளின் வரலாறு. ஈரான், சிரியா உட்பட அனைத்து நாடுகளிலும் முஸ்லிம் மக்கள் தமது விடுதலைக்காக கிளர்ந்து எழுந்துள்ளனர். இன்று லெபனானில் ‘கடவுளின் கட்சி’ என்று பெயர்கொண்ட இசபுல்லாவினதும், பாலஸ்தீனத்தில் கமாசினதும் நடவடிக்கைகளை நாம் அவதானிக்க வேண்டும். வர்க்க அரசியலை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துக் கொண்ட ‘கடவுளின் கட்சியில்’ இசபுல்லாவில் லெபனானின் இஸ்லாமியர் அல்லாத ஏனைய மதத்தை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் இனைவதை நாம் கவனிக்க வேண்டும்.எல்லா மதம்சார் இயக்கங்களும் சமூகம் சார்ந்தே இயங்குகின்றன. சமகால இஸ்லாமிய எதிர்ப்புக்கு எதிரான போர் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக இருப்பதால் இசபுல்லா போன்ற இயக்கங்கள் லெபனானின் அனைத்து மக்களையும் உள்வாங்க கூடியதாக இருக்கிறது. இதேபோல் மதத்தின் தோற்றமும் சமூகம் சார்ந்ததே. பெரும்பான்மை மதங்களின் தோற்றம் ஒருவித சமூக புரட்சியாகவே நிகழ்ந்தது. மதத்தின் தோற்றத்திற்கு மீமியல் விளக்கம் தரும் டாக்கின்ஸ் மதம் பரவியது பற்றி மட்டுமே அதிகமாக பேசுகிறார் அன்றி ‘மதம்’ என்ற ‘கருத்து’ ‘மீம்’ என்பதற்கு சரியான விளக்கம் தரவில்லை.அதே தருணம் மதம் பற்றிய அரசியல் விளக்கம் தனக்கு திருப்தி தருவதாக இல்லை என்று வர்க்கம் சார் விளக்கத்தை மறுக்கிறார். மதம் எப்படி ஒடுக்கும் கருவியாக அரசர்களாளும் மதத்தலைவர்களாளும், அரசியல்வாதிகளாளும் பயன்பட்டது பயன்படுகிறது என்பதற்கு இந்த அரசியல் விளக்கம் போதாது என்று கூறும் அவர் ‘மதம் பொல்லாத மதத்தலைவர்களாளும் ஆட்சியாளர்களாளும் வடிவமைக்கப்பட்டது என்ற வாதம் சுவாரஸ்யமான வாதம், அதை நாம் வரலாற்றாசிரியர்களுக்கு விடுவோம்’ என்று பிழையாக புரிந்து விளக்கி நழுவ முயல்கிறார். அவர் புரிந்து கொண்ட விதம் முற்றிலும் பிழையானது. அவர் கூறும் ‘அரசியல் விளக்கம்’ மதம் அடக்கு முறையாளர்களால் திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்பட்டதென்று ஒருபோதும் சொல்லவில்லை.எப்படி ஒரு சமூக கிளர்ச்சியாக எழுந்த கருத்து செயற்பாடு கிளர்ச்சி செய்த ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதமாகவின்றி ஒடுக்கிய ஆதிக்க சக்தியின் உபகரனமாக மாறியது என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையிலேயே டாக்கின்ஸ் ஒதுங்கிக்கொள்கிறார். (தான் பிழை என்று கருதும் இக்கருத்தின் மேல் தமது வழமையான பாணியில் ஓங்கி அடிக்காமல் வரலாற்றாசிரியர்களுக்கு விட்டு ஒதுங்குவது இது பற்றிய அவரது குழப்பத்தையே காட்டுகிறது).உற்பத்தி சக்திகளுக்கிடையிலான உறவில் ஏற்பட்ட முரன்பாடுகள் காரணமாக உருவான சமூக கிளர்ச்சியின் ஒரு வெளிப்பாடாக மதம் உருவானதே தவிர ‘மதத்தின்’ தோற்றத்தின் பின்பு கிளர்ச்சி உருவாகவில்லை. ஆக மத வெளிப்பாடு ஒரு காலத்தில் விடுதலை கருத்தியலாகவோ முற்போக்கு கருத்தியலாகவோ இருந்தாலும் அவை மக்களை ஒரு போதி போதையின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் கருத்தாகவே என்றும் இருந்தது. இதனால் கிளர்ச்சியை எதிர்கொண்ட ஆளும் வர்க்கத்திற்கு, மதத்தை கைப்பற்றியதன் மூலம் மக்களை எந்த பிரச்சினையுமற்று கட்டுப்படுத்த முடிந்தது. பின்பு மதம் நிர்வாகமயமாக்கப்பட்டதும் ஆளும் வர்க்கத்தின் முக்கிய ஒடுக்கும் கோலாகியதும் நிகழ்ந்தது. இவ்வாறு நாம் கூறும்போது ஏதோ இவை படிப்படியாக நிகழ்ந்தன அல்லது திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டன என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். மாறாக இதை இயங்கியல் முறையில் புரிந்து கொள்ள வேண்டும். புறக்காரணிகளால் உந்தப்பட்டு உருவான பல்வேறு கட்டமைப்புக்களில் மதத் தோற்றமும் வளர்ச்சியும் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்த ஒரு கட்டமைப்பு.இதே தருணம், மதம் எல்லா தருணங்களிலும் ஆளும் வர்க்கத்தின் உபகரணமாகவே தொடர்ந்து இயங்கிவரும் என்ற கருத்துப்பிழை என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். குறுகிய வர்க்க நலன்களுக்காக மட்டுமே இயங்கும் ஆதிக்க சக்திகளுக்கு அவை துணை நிற்குமே அன்றி பெரும்பான்மை ‘மக்களின் ஆட்சிக்கு’ அவை துணை நிற்காது. அதாவது பெரும்பான்மை மக்களின் நலனுக்கான ஒரு பொருளாதார மாற்றம் நிகழும் பொழுது குறுகிய நோக்கம் கொண்ட மதத்தின் தேவை புறக்கணிக்கப்படும்.வெனிசுவேலா நாட்டிற்கு எதிராக கடும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள பாதிரிகளை இங்கு நினைவு கூறுவோம்! வெனிசுவேலா நாட்டு தலைவர் கூகோ சாவேஸை அமெரிக்க அரசு கொல்லவேண்டும் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற பாதிரியார் கேட்டுக்கொண்டது எல்லாருக்கும் ஞாபகமிருக்கும். அரச மாற்றத்திற்காகவும் தனிநபர்களின் சொத்துக்களுக்காகவும் ‘போராடுவதாக’ சொல்லும் வெனிசுவேலாவின் கிறித்தவ கோயில்களும் அதன் பாதிரிமாரும் சாவாசை அரசியலில் இருந்து அறுக்க எதுவும் செய்ய தயாராக உள்ளார்கள். தலாய்லாமா, தெரேசா முதலானோர் நோபல் பரிசு பெற்று உலக பிரமுகர்களான பின்னனியும் இதுதான். இவ்வாறு பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிராகவே மதம் தொடர்ந்து இயங்கும். மக்களின் தேவைகள் சரியானபடி என்று பூர்த்தி செய்யப்படுகி;ன்றதோ அன்றே சரி மதத்தின் கதை. அதை சமகால மதத்தலைவர்களும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்!இன்றைய சூழலில் மதத்தை முற்று முழுதாக அழித்து விடுவது சாத்தியமில்லை. உண்மையில் மதத்திற்கான தேவை இல்லாமல் இருந்த போதும் மதத்தின் பாவனை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து மக்களின் நலனுக்குமான புரட்சிகரமான சமூக மாற்றமே மதத்தின் தேவையின்மையை சரியானபடி உணர்த்தி அதன் பாவனையை இல்லாதொழிக்கும். இதை கூறியதன் மூலம் மதம் பற்றிய முழுமையான ‘சமூக பார்வையை’ நாம் வைத்திருகிறோம் என்று அர்த்தமில்லை. மதம்சார் புரட்சிகர சூழலும் இன்றய தருணத்தில் சாத்தியம் (இது முரண்பட்ட கருத்தல்ல. நாம் முன்பே கூறியபடி சிக்கலான சமூக உறவுகளின் தொடர்பாடலின் விளைவே இது).ஊதாரணமாக இன்று இஸ்லாம் கிளர்ச்சிக்கு பயன்படக்கூடிய மதமாக இருக்கிறது. ஈரானிய புரட்சியின்போது நிகழ்ந்தது போல் பள்ளிவாசல்களுக்கூடாக புரட்சி வளர சாத்தியமுள்ளது. அதே தருணம் ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய நட்பை பேணும் இந்துத்துவம் எதுவித புரட்சிகர பங்குமின்றி கடுமையாக எதிர்;க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. மனித மூளையில் உருவாகும் இயற்கையின் பிரதிபலிப்பாக ‘கருத்துருவாக்கத்தை’ விளங்கி கொள்பவர்களுக்கு, எவ்வாறு புறக்காரணிகள் மாறும் பொழுது ‘கருத்து’ மாறிவிடுகிறது என்பது புரியும். ‘கருத்து’; தனித்தியங்க வல்லது அல்லது எல்லாக் காலங்களிலும் மாறாது இயங்கவல்லது போன்ற பார்வைகள் பிழையானவை.டாக்கின்ஸ் சொல்லும் மீம்களின் குறைபாடும் இதுவே. ஒவ்வொரு காலகட்டத்திலும் தருணங்களிலும் நாம்தான் ‘கருத்துக்குள்’ அர்த்தத்தை தேவைக்கேற்றபடி திணிக்கிறோமே அன்றி அவை தனித்தியங்கி தாமாக மாற்றத்திற்குள்ளாகி ‘உயிர்ப்புடன்’ நடமாடவில்லை. உயிரியல் விளக்கத்தின் குறைபாடுகள் இங்கிருந்தே தொடங்குகிறது. இறுதியாக டாக்கின்சின் போக்கிரித்தனமொன்றை இங்கே சுட்டிக்காட்டாமல் இக்கட்டுரை நிறைவடையாது!! ஜன்ஸ்டைன் மதம் சார்ந்த அல்லது மதத்தில் முழுநம்பிக்கை வைத்திருந்த விஞ்ஞானியல்ல என்பதை நிறுவ பல பக்கங்களை விரயம் செய்யும் டாக்கின்ஸ் ஜன்ஸ்டைனின் அரசியல் சம்பந்தமாக ஒரு வார்த்ததை கூட குறிப்பிடவில்லை.ஜன்ஸ்டைனின் தத்துவார்த்த அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதை விளக்க, ‘ஏன் சோசலிசம்’ என்று சோசலிசத்தின் தேவை பற்றி ஜன்ஸ்டைன் எழுதிய கட்டுரைகளையோ அல்லது மர்க்சியத்துக்கு எதிராக அவர் முழு மூச்சாக போராடியதையோ குறிப்பிட்டாலே போதுமானதாக இருந்திருக்கும். மாறாக காலம் காலமாக ஆழும் வர்க்கம் பூசி மெழுகி புறக்கனித்து வரும் இந்த விஞ்ஞானியின் அரசியலை டாக்கின்சும் புறக்கணித்து அவரது கருத்துக்களை எமக்கு புரியவைக்க முயற்சிக்கிறார். இதுபோலவே மதம் பற்றி புகழ்பெற்ற கருத்துக்களை வைத்த மார்க்சைப்பற்றி ஒரு வரிகூட இல்லை. இந்த லட்சணத்தில் அவரது புத்தகத்தை படித்தவுடன் படிப்பவரின் மத நம்பிக்கை ஓடிப்போய்விடப்போகிறது என்று முன்னுரையில் அவர் அடிக்கும் தம்பட்டம் கேலிக்கிடமானதாகவே இருக்கிறது