Saturday, August 8, 2009
ஹெகல்
ஹெகலுக்கு முந்தைய இயக்கவியல் முரண்பாடுகளை சுட்டிக் காட்டினாலும் ஹெகலியம் மட்டுமே பிரபஞ்சத்தை முழுமையாக விவரித்து கூறுயது.
கான்ட் அறிவின் முரண்பாடுகளை வெளிக்கொணர முடியுமே தவிர தீர்க்க வியலாது என கூறுவார்.
கான்ட் புலன் கடந்த இயங்கியலைப் பற்றிப் பேசுவார். ஹெகல் அதை உலகப் பொருள்களுக்கு விரிவுப்படுத்துவார்
philosophicaldebate
தனிமுதல் அறிவு -கான்ட்
Tuesday, June 30, 2009
சாரு, ஜெயமோகன் :- வேதம் ஓதும் சாத்தான்கள்


இணையத்தில் எழுதும் இரண்டு தமிழ் எழுத்தாளர்கள். இரண்டும் வெவ்வேறு ரகம். இந்தப் பதிவு இவர்களது பதிவுகள் குறித்த ‘ஏமாற்றங்களை’ முன்வைக்கிறது. ஈழத்தில் போர் தொடர்ந்து மாதங்களாக நிகழ்ந்துகொண்டிருந்த போதெல்லாம் ஏதும் சொல்லாத இந்த இரண்டு பிரக்ருதிகளும் இறுதிவரை எதுவும் சொல்லாமலே இருந்திருந்தால் சரி - எல்லாம் முடிந்தபின் தர்ம கோவிந்தா போடுவது போல அஹிம்சை குறித்து எழுதுகிறேன் என்று பிலாக்கணத்தை வைத்து நானும் இதில் கருத்து சொன்னேன் என்று துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.
சாரு நிவேதிதா செ கெபாரா பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார் - சீலேயில் ஸல்வதோர் அயெந்தெ எப்படித் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார் என்று ரிஸ்தோரெந்தெயில் சிவப்பு ஒயின் அல்லது டாம் பெரிஞ்யோன் குடித்து சிந்தித்து ஸோஃபாக்ளீஸின் துன்பியல் நாடகங்கள் கண்முன் நடனமாட கலா கௌமுதியில் எழுதுவார். கியெர்மோ கப்ரெரா இன்ஃபாந்தெயின் கூவா பற்றி எழுதுவார். கப்ரெரா இன்ஃபாந்தெயின் ‘பொறியில் மூன்று புலிகளை’ (Three trapped tigers - தலைப்பு சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக உள்ளது அல்லவா?) மூல எஸ்பஞோலில் படிக்கவேண்டுமென்று நான் ஸ்பானிஷ் கிளாஸ் போனபோது மாட்டிய ‘குட்டி’ பற்றி இந்த தமிழ் ஹென்றி மில்லர், செக்ஸஸ்-ப்ளெக்ஸஸ்-நெக்ஸஸ்-கடகரேகைக் கதைகள் எழுதுவார். கார்ஸீயா லோர்க்கா குறித்து எழுதுவார்; ஏன், யுக்கியோ மிஷிமா செப்புக்கு செய்துகொண்டு வீரமரணம் எய்தியது பற்றியும் கூட எழுதுவார். நபக்கவ் விட்ட குசுவைப் புட்டியில் அடைத்து ‘உன்னத சங்கீதம்’ என்று திறப்பார் - இதை ரசிக்க தமிழனுக்குத் தெரியாது என்பார். கக்கத்தைச் சிரைக்கவேண்டுமானால் கூடுதல் கட்டணம் தரவேண்டுமென்று போராட்டம் நடத்தவும் (தவறேதுமில்லை தான்), குற்றாலம் அருவியில் குளிக்க நகராட்சி வைக்க முயற்சித்த கட்டணத்தை எதிர்க்கவும் (தவறேதுமில்லை தான்), நந்திகிராமத்தில் சாமானியர்களை நொறுக்கி எடுக்கவும் (“தவறேதுமில்லை” தான்) தெரிந்த மாதிரி ஆட்சியில் பங்கிருந்தும் ஈழத்தில் சிதறிச் செத்த ஜனங்களைப் பார்த்தும் பார்க்காமலும் சிவப்புத் துண்டை/தலைப்பாகையைச் சுருட்டி வாயில் திணித்துக்கொண்டு குந்தி உட்கார்ந்திருந்த சில்லுண்டிகள் மாதிரி. அமெரிக்காவில் ‘செ கெபாரா’ ஒரு போதைக்கடிமையான நட்கேஸாக வலதுசாரி “compassionate conservative” ஊடகமுனிகளால் சித்தரிக்கப்படுவதை நாம் சொன்னால் தடாலடி ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகி அமெரிக்கா ஐரோப்பா மாதிரி புத்திரீதியில் விசாலமடையாத தேசம் என்பார். சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் - ஐரோப்பாவிலிருந்து வந்த ஐரோப்பியர்கள், இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி. இந்தியர்கள் (ஜெயமோகன் ரக பாரத பிரேமிகள்) வேறு ராகம் - குடும்ப வேல்யூஸ் இல்லை, இது உடலுக்கான நாடு உள்ளத்துக்கான நாடு அல்ல மாதிரி வழக்கமான பல்லவிகள்.
இது அங்கே மட்டுமல்ல - பொதுவானதொரு சள்ளை மனோபாவத்துக்கு - குறிப்பாக சாரு கிண்டலடிக்கும் தயிர்வடை மனோபாவத்துக்கு வெகு பாந்தமானது இது. இந்தியாவில் ஜப்பானியக் கார் வாங்குவதும், ஜப்பானில் அமெரிக்கக் கார் வாங்குவதும், அமெரிக்காவில் ஜெர்மன் கார் வாங்குவதும் ஜெர்மனியில் போய் ஜப்பானியக் கார் வாங்குவதும் மாதிரி. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது - சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது. இப்படி ஊதிப்பெருக்கும் ஒரு ‘எழுத்தாளரிடம்’ சொல்வதற்குக் கருத்து ஏதுமில்லாமலிருப்பதில் தவறேதுமில்லை - அறியாமை தவறுமல்ல. ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அனைத்தும் தெரிந்தவர்களும் அல்ல.
ஈழப் பிரச்னை பற்றி சாரு ‘எழுதியதை’ வைத்துப் பார்த்தால், செய்தி ஊடகங்கள் வழி செய்திகளை அறிந்துகொள்ளும் ஒரு சராசரித் தமிழனை விட பெரிதாக ஏதும் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது தவறில்லை, இருந்தாலும் எழுதுகிறார், இந்தியாவின் மாபெரும் அஞ்சால் அலுப்பு மருந்தான காந்திய வழியைப் பற்றி பேசத் தொடங்குகிறார். ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதிப் போட்ட கட்டுரை கொடுத்த peer pressureல் பொதுவாக இந்தா நானும் ஒன்று என்று ஒன்றைத் தட்டிப் போட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது, அதில் பெரிதாக ஒன்றும் இல்லை எனினும், அதைக் ‘கவனித்து’ ஜெயமோகன் ஒரு கடிதம் எழுதி தனது வழக்கமான திருதராஷ்டிர ஆலிங்கனத்தைத் தர முயன்றிருக்கிறார் (நீங்கள் எழுதுவதை ரஸிக்கவில்லையானாலும் ‘கவனித்து’ - வார்த்தைப்பிரயோகத்தைக் கவனிக்கவும் - ‘கவனித்து’ வருபவன் என்ற முறையில் நீங்கள் காளைமாட்டில் பால்கறப்பதை நானும் வரவேற்கிறேன் - அன்புடன் ஜெயமோகன்) - இங்கே பீமன் தப்பித்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது, நாட்டுக்கு நல்லது.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் எந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கிறது?
இதைக் கேட்கிறார் சாரு நிவேதிதா. நாகரிகமடைந்த எந்த மனிதனும் தவிர்க்க இயலாத, எதிர்கொண்டே ஆகவேண்டிய விஷயங்கள் போர், அழிவு. இப்படி இருந்திருக்கவேண்டியது இந்தக் கேள்வி: ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டும் எந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கிறது? எரியும் அடுப்பிலிருந்து தப்பி எண்ணெய்ச் சட்டிக்குள் விழுந்து கிடக்கும் ஈழ மக்களுக்கு இந்த இலவச அறிவுரை. இலங்கை ஊடகங்கள் இதையும் ஒரு பொய்ப் பரப்புரை எனும் - அதையும் சாரு நம்பலாம். சாருவுக்கு எளிதாக இருக்க, தெற்காசியத் துணைக்கண்டத்தை (இந்தியா அஹிம்சை வழியில் பெற்றுத் தந்த பங்களாதேஷின் ‘சுதந்திரம்’ உட்பட) முழுக்கத் தவிர்த்துவிடுவோம். புலிகளை விமர்சிக்கும் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ புத்தகத்தின் (சாரு பாணி hyperbole வழி - அது ஒரு இரண்டாயிரம் பக்க புத்தகம், படித்து முடிக்க இரண்டு வருடம் தேவைப்படும்) தொடக்க அத்தியாயங்களையாவது படித்திருந்தால் கூட எப்படி சாத்வீகப் போராட்டங்கள் வன்முறைக்குத் திரும்புகின்றன என்று விளங்கியிருக்கும். போரால் புலம்பெயர்ந்த கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் (ஏதிலிகள் - அகதிகள்) வாழும் அமெரிக்(கக் காலனிகள்)கா காந்தி வழியில் சத்தியாக்கிரகம் செய்தா ‘சுதந்திரம்’ அடைந்தது? எது அமெரிக்கா, எது சுதந்திரம், எது அமெரிக்க ‘சுதந்திரம்’, செவ்விந்தியர்களைக் கொன்றொழித்த வெள்ளைக் காலனிக் குடியேற்றர்கள் பெற்றதை ‘சுதந்திரம்’ எனமுடியுமா என்பதுபோன்ற முட்டையிலிருந்து கோழியா விட்டையிலிருந்து பூனையா போன்ற கேள்விகளைக்கொண்டு எழுத்தாளர்கள் இவற்றை லாகவமாகக் கையாளலாம். பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஜார்ஜ் வாஷிங்டன் போன்ற அமெரிக்க ‘தேசியத் தந்தைகள்’ போரில் தோற்றுப் பிடிபட்டிருந்தால் பிரிட்டிஷார் உடனுக்குடன் தூக்கிலேற்றிச் சாகடித்திருப்பார்கள். அது ஆயுதப்போர். செ கெபாரா சிம்பதைஸர் சாரு, தனது குடும்பமும் இன்னபிற குட்டிகளும் அவரது நாய்களும் அரசாங்க யந்திரத்தால் பிளக்கப்படுவதை நேரில் அனுபவித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் - காஃப்கா புத்தகங்களில் கே யின் படுக்கையறையுள் எப்படி அதிகாரம் நுழைகிறது, ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984ன் அபத்தம், ஆர்தர் கெஸ்லரின் Darkness at noon என்று பட்டியல் போடுவது மாதிரியான சமாச்சாரங்கள் தவிர்த்து, குறைந்தபட்சம் ஆட்டோ அனுப்பி நொறுக்கப்பட்டாவது. தப்பி ஓட முயலும் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் விசா கொடுத்து அனுப்பிவிட்டு பிறருக்கு விசா மறுத்து நாட்டுக்குள் முடக்கிப் போட்டு குடும்பத்தைச் சிதறடிப்பது என்பது கொம்யூனிஸ இரும்புத்திரை இறங்கிய நாடுகளில் பெர்லின் சுவர் விழும் வரை நிகழ்ந்துகொண்டிருந்ததை, என் வயதொத்த எத்தனையோ பேர் போதைமருந்து, தற்கொலை என்று சென்றதையோ சொகுசான தமிழ்நாட்டில் சோறும் குழம்பும் தின்று வாழ்ந்த நானும் அனுபவித்ததில்லை தான், ஆனால் நேரடியாக நண்பர்கள் வழி கேட்க முடிகிறது இல்லையா? சாருவுக்குப் பணம் பிரச்னை என்றால் வலைத்தளத்தில் எழுதலாம், வாய்ப்பு கிடைத்தால் தளிகை சாப்பிடலாம், ஈழத்தில் நிகழ்ந்த அரசாங்க அடக்குமுறைகள், உரிமை மறுப்புக்கள் கூட வேண்டாம் - ஆனால் சாரு பார்த்த ஃபிரான்ஸில் ரொட்டியில் ப்ரீயும் கேமுன்பேர் பாலாடைக்கட்டியும் தடவித் தின்றது போக ஐரோப்பாவின் மறுபக்கத்தில் ஈஸ்டர்ன் ப்ளாக் நாடுகளில் சூப்பர்மார்க்கெட்டுகளில் வெறும் வினிகர், காய்ந்த ரொட்டி மட்டும் கிடைக்கும், பிற ஏதும் கிடைக்காத அடக்குமுறை/கண்காணிப்பில் சாரு வாழ்ந்திருக்கவேண்டும். சாரு நேசிக்கும் ஃபிரெஞ்சுக் கலாச்சாரம் ஃபிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் ‘புரட்சியின் எதிரிகள்’ என்று வரைமுறையின்றி கியட்டினில் போட்டுத் தள்ளவில்லையா? காம்யுவைக் கரைத்துக் குடித்த சாரு நிவேதிதா, ஃப்ரெஞ்சுக்காரர்களிடமிருந்து அல்ஜீரிய விடுதலை காந்தி வழியிலா கிடைத்தது என்று விளக்குவாரா? ஃபிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிப்பதை அல்ஜீரிய-ஃப்ரெஞ்ச் ஆல்ப்யே கமி (ஆல்பர்ட் காமு/காமுஸ்/காம்யுஸ்/கம்யூஸ்) எலிகள் கொத்துக் கொத்தாக செத்து விழுவதாக The Plagueல் உருவகமாக எழுதினால்தான் சரிப்பட்டு வருமாமா? இவரும் சரி, தன் தேடல்களால் தெருவில் அலைந்து சோத்துருண்டை தின்றதை ஒடுக்குமுறையின் விளைவான ஈழச் சாவுகளுடன் ஈவிரக்கமோ அடிப்படைக் கூச்சமோ இன்றி ஒரு வக்கிரம் பிடித்த ‘ஞானியின்’ தர்க்கச் சமநிலையோடு ஓரிணையில் வைத்து தமிழகத் தமிழர்களின் அரசியல் தேர்வுகளுக்கு வக்காலத்து வாங்கி, என் பிரச்னையே இங்கே தலைபோகிற பிரச்னை என்று நழுவி, இதற்குத் துணையாக பிழைப்புக்கு வழியில்லாதவர்களை இழுத்து தர்க்கக்கவசமாக வைக்கும் ஜெயமோகனும் சரி, ஆ ஊ என்றால் நெல்சன் மண்டேலாவையும் இழுத்து அகிம்சாவாதி காந்தி என்றுவிடுகிறார்கள்.
நெல்சன் மண்டேலா சாத்வீகப் போராட்டங்களுக்குத் திரும்புமுன் இனவெறிக்கெதிராக தென்னாப்பிரிக்க அரசாங்க அலுவலகங்களில் குண்டு வைக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார் - அப்போதைய வெள்ளை இனவெறி அரசாங்கம் மண்டேலாவை தீவிரவாதி என்று கட்டம்கட்டி, இப்போது ஜெயமோகன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகும் ‘கவற்சிமிகுந்த’ அமெரிக்கா 2008 வரை மண்டேலாவை தீவிரவாதிப் பட்டியலில் வைத்திருந்தது. மண்டேலா அமெரிக்காவுக்கு வந்தால் ஜெயமோகன் மாதிரி ஃப்ளோரிடாவுக்கும் பாஸ்டனுக்கும் கலிஃபோர்னியாவுக்கும் போயிருக்க முடியாது - நியூ யார்க்கில் ஐக்கிய நாடுகள் கட்டிடத்துக்குள் மட்டும்தான் போயிருக்க முடியும் (சர்வதேச எல்லை என்பதால்). இந்தத் தடை, 2008ல் தான் நீக்கப்பட்டது. வெள்ளை இனவெறி அரசாங்கம் மண்டேலாவை தீவிரவாதி என்று கட்டம் கட்டியிருக்கிறது, ‘சர்வதேச சமூகத்தால்’ அது அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அந்தத் தவறை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ளவாவது செய்திருக்கிறார்கள்.
இங்கே தமிழர்கள் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல் அமைதியாக வாழ ராஜபக்சே வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இதற்கும் அவரை உலக நாடுகள் நிர்ப்பந்திக்க வேண்டும்.
என்கிறார் சாரு நிவேதிதா.
புலிகள் தீவிரவாத இயக்கம் என்று உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கம் - அவர்கள் செய்த (அல்லது செய்ததாகச் சொல்லப்படும்) குற்றங்கள் அவர்கள் பிடிபட்டால் விசாரணைக்குட்படுத்தப்படும் - தற்போது முழுக்க அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர்களது அத்துமீறல்கள் நிச்சயம் ஆவணப்படுத்தப்படும். அதே குற்றங்களை இலங்கை அரசு செய்தால் (அல்லது செய்ததாகச் சொல்லப்படுவதை) அது குறித்தான விசாரணைகளுக்குக் கூட இடமில்லாதபோது, ராஜபக்ச வழிவகுத்துக் கொடுக்கவேண்டும் என்று கட்டுரையை முடிக்கிறார் சாரு நிவேதிதா. ஈசாப் செத்தான். தமிழ்-புலி-கொலை-சுதந்திரம்-அஹிம்சை-ராஜபக்ச-ஹிட்லர் என்று ஸ்டாக்கட்டோ எடிட்டிங்கில் உளறுகிறார். வட கொரியாவில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், கிம்-ஜாங்-இல் தனது நாட்டு சிறுபான்மையினரை ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி கொத்துக்குண்டுகள் போட்டுக் கொன்றிருந்தால், அது கூட வேண்டாம், உளவுபார்த்தார்கள் என்று பிடித்து வைத்துள்ள இரு அமெரிக்க நிருபர்களைக் கொன்று போட்டால் ஐக்கிய நாடுகளின் தற்போதைய தலைவர் பங்கி மூன் என்ன செய்திருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத்தில் சாகும் சிவிலியன்கள் குறித்து பங்கி மூனுக்கு என்ன கவலை இருக்க முடியும். உலக அரசியலுக்கு எந்தவிதத்திலும் உபயோகமற்ற ஒரு இனக்குழுவின் சிவிலியன்கள், அரசாங்கத்தின் ராணுவத் தாக்குதலில் செத்து மடிந்தால் அதுகுறித்த விசாரணைகள் நடக்கச் சாத்தியமில்லை, எதிர்காலத்தில் நடக்கும் என நம்பிக்கை வைக்கவும் முகாந்திரம் இல்லை, ஐ.நாவில் இலங்கையை ஆதரிப்பது செர்பியா போன்ற சிறுபான்மையினரைக் கொன்றொழிக்கும் நாடுகள் என்பது சாருவுக்குத் தெரிமல் இருக்காது. ஆனாலும் அவர் மிலோரட் பாவிச்சின் Lost love in Constantinopleல் ஆழ்ந்து போய் கொன்ஸ்ந்தந்திநோப்பிளில் இழந்த காதல் என்று இழவிலக்கியம் அறிமுகம் செய்யலாம். கொன்ஸ்தந்திநோப்பிளை எரித்தபோது நிகழும் (பொய்கள் எப்படி வரலாறுவழிக் கடத்தப்படுகின்றன என்பதைக் கலைநயத்தோடு கக்கும்) கதை என்று ஈழ நிலவரத்தோடு இணைத்து உம்பர்த்தோ ஈக்கோவின் பாதோலினோவை மேற்கோள் காட்டலாம். அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்பாளரான, இனவெறியரான இத்தாலியின் ஓரியானா ஃபல்லாச்சி (Oriana Fallaci) 9/11க்குப் பிறகு இத்தாலிய ஏடான Corriere della seraவில் மொத்த இஸ்லாமியருக்கும் எதிராகக் கக்கிய விஷத்துக்கு ‘எழுத்தாளரான’ உம்பர்த்தோ ஈக்கோ ஆற்றிய ஆக்கப்பூர்வமான எதிர்வினையை சாரு படித்துத் தெரிந்துகொள்ளலாம். சாரு நாளை அமெரிக்கா வந்தால், ஓரியானா ஃபல்லாச்சி போன்றவர்களை முன்வைக்கும் டேனியல் பைப்ஸ் போன்ற ‘அறிஞர்களை’ சந்தித்து ‘விரிவாக உரையாடி’ தனது அறிவையும் விருத்தி செய்துகொள்ளலாம். தமிழர்கள்/தமிழ்நாடு/ஈழம்/தமிழ் குறித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் கக்கும் விஷம் இதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.
ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம்? சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் - முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள். ஜெயமோகன் போன்ற வறட்டுப்பிடிவாத காரியக்கோமாளிகளிடம் இது நடவாத காரியம் - முயற்சி செய்பவர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதுதான் மிச்சம். Hop-frog என்று எட்கர் ஆலன் போவின் ஒரு கதை உள்ளது. அதில் வருவது மாதிரியான விபரீதமான, குயுக்தியான காரியக்கோமாளி ஜெயமோகன் என்று தொடக்கத்திலிருந்து உள்ள எண்ணம் இப்போதுவரை மாறவில்லை. பிரசங்க அடிப்படையிலான ஓர்திசை நீரோட்டம் போல மேலோட்டமாகத் தோன்றினாலும், deflective rhetoric என்பதை இவ்வளவு திறமையுடன் பிரயோகிக்கத் தெரிந்த ஒரு நபரை தமிழ் கூறும் நல்லுலகம் இதுவரை கண்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.
மேலேயுள்ள கதையிலாவது கோமாளிக்கு ஒரு நியாயம் உள்ளது - இந்த நிஜக் கதையில், ஜெயமோகன் தமிழ்க் கோமாளிகள் முகத்தில் தர்க்க மதுரசத்தை விசிறியடித்து, குரங்கு ஆடைகளையும் மாட்டிவிட்டு, கட்டிவைத்து தனது ஞானச்சுடரால் எரிக்கவும் செய்கிறார். எட்கர் ஆலன் போ கதைகள் பலவற்றில் ‘நீதிவயப்பட்ட’ முடிவுகள் இருக்காது - பெரும்பாலான கதைகள் குற்றம் நிகழ்த்துபவர்களைப்பற்றி விவரிப்பவை மட்டுமே - ‘குற்றம்’ என்ற நிகழ்வு முடிந்ததும் கதையும் முடிந்தது - ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட கதை சரி என்பது மாதிரி. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் ஜெயமோகன் செய்துள்ள ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் தாண்டி, அவரது வீம்பும் முரட்டுப் பிடிவாதமும் விசிறியடித்திருக்கும் பெரும் குப்பையைப் பெருக்கி அள்ள பல காலம் பிடிக்கும் - எனது ஊகப்படி, சில தசாப்தங்கள் கழித்து தமிழ்ச் சூழலில் ஜெயமோகனின் இருப்பும் அவரது ‘குப்பைக் கருத்துக்களின்’ எதிர்காலமும் ஒரு எட்கர் ஆலன் போ கதை போலத்தான் முடியும். நிறுத்தி நிதானமாகச் செய்யப்படும் சேதம், ஒரு கட்டத்துக்குப் பின் சேதத்தின் வசீகரம் குறித்த உரையாடலைத் துவங்குவது போல. இது தவிர்க்க இயலாத ஒன்று.
தன் நிழலைப் பின்தொடரும் அப்பாவிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களாகத் தன் ‘பயணங்களை’ நிறுவுவதும், நிறுவலுக்குத் தேவையான பிரத்யேக தர்க்கங்களை உருவாக்கிக்கொள்வதும், தனது முரண்பாடுகளைத் தனது ‘தேடல்கள் வழியான தெளிவு’ அல்லது ‘தெளிவை நோக்கிய தேடல், பயணம்’ என்று சுண்ணாம்படிப்பதும் இவருக்குக் கை வந்த கலை. இதில் இவரது பேச்சு இப்படிப்பட்டது என்று மலினத்திலிருந்து வீரியத்தைப் பிரித்து பதவுரை அளிக்க ‘சூரியா’ போன்ற ‘ரசிகர்கள்’ வேறு. எல்லனையும் மல்லனையும் பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். மல்லன் குதி குதி என்று குதிக்கும் ஆஜானுபாகுவான ஆசாமி - என்ன, சூதானம் பத்தாது. எல்லன் ஒரு சூம்பையன் - சதையளவில் மட்டும். வயிறுநிறையத் தின்று தண்ணீரும் குடித்து வைக்கும் மல்லனின் மூத்திரப்பை நிறைய எப்போதும் சிறுநீர். தினமும் சிறைச்சுவரின் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே குறிவைத்து மூத்திரம் அடிப்பது மல்லனின் வாடிக்கை. எல்லன் பொறுமையாகக் காத்திருக்கிறான். மாதங்கள்/வருடங்கள் கழித்து சுவர் நொதுநொதுத்ததும் ஒரு நாள் அதில் ஒரு ஓட்டை போட்டுத் தப்பியோடுகிறான். மல்லனுக்கு பிறகுதான் உறைக்கிறது, அவனும் ஓட்டைக்குள் நுழைய முயல்கிறான் - கால் மட்டும் ஓட்டைக்குள் போகிறது, மாட்டிக்கொள்கிறது. தமிழர்கள் சுவர் முழுக்க மூத்திரமடிக்க மட்டும்தான் லாயக்கு என்பது தொடர்ந்து நிரூபணமாகி வரும் விஷயமென்பதால் இதற்கு மேலும் ஏதும் விளக்கத் தேவையில்லை. மல்லர்சூழ் உலகில் நழுவியோட ஓட்டைகளுக்கா பஞ்சம். ஒரு பத்தியாளராக இந்த விஷயத்தில் தன்முனைப்பு, சுயநிரூபணம் என்ற இரண்டு விஷயங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அஹிம்சை என்ற போர்வையில் ஜெயமோகன் கட்டவிழ்த்து விட்டுள்ள தர்க்கத்திலுள்ள வீம்பும் பிடிவாதமும், அதைத் தொடர்ந்த விமர்சனங்கள் குறித்தான நேரடியான பதிலாயன்றி அவரது வாதத்தை நிலைநிறுத்த தற்கால இந்தியத் தமிழர்களின் விட்டேற்றித்தனத்தைத் தொட்டுச்செல்வதாகப் பாவனைகாட்டி, அதற்குக் காரணமாக அவர்களின் பொருளாதார நிலையைக் கவசமாக முன்வைத்து, ஈழத்தில் குண்டுவீச்சில் சாகும் பொதுஜனங்களின் துயரத்தையும் தமிழ்நாட்டின் பிளாட்ஃபாரங்களில் வசிப்பவர்களது ஏழைமையையும் தனது ஆன்மீகத் தேடல் வழி தெருவில் அலைந்தபோது சோற்றுருண்டை தின்றதையும் கூச்சமின்றி ஒரே இணையில் வைத்து, தற்போதைய தேர்தல் முடிவுகளைக்கொண்டு ஈழத்தவர் இந்தியத் தமிழர்களை எடைபோடக்கூடாதென்று எழுதுவதை அவரது வலைத்தளத்தில் படித்து திக்பிரமை மட்டும்தான் மிஞ்சியது.
ஆந்திராவில் பணிபுரிந்த போது ஆற்காடு மாவட்டங்களிலிருந்து/தமிழ்நாட்டு வட மாவட்டங்களிலிருந்து சில தமிழர்கள் - குறிப்பாகப் பெண்கள் - வண்ணச் சாயம் அடித்த கோழிக்குஞ்சுகளை ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த சித்தூர் மாவட்ட ஆந்திரக் கிராமங்களுக்குள் கொண்டு வந்து விற்பார்கள். வெவ்வேறு தருணங்களில் அவர்கள் தட்டுப்படும் போதெல்லாம் கால் கூடை அரைக் கூடை என்று குஞ்சுகளை வாங்கி கிராமத்துச் சிறுவர்களுக்குக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன் - அவர்களுக்கு வியாபாரமும் ஆயிற்று, இவர்களுக்கு விளையாட்டுச்சாமானும் ஆயிற்று, உதவி செய்தோமென்று நம் “அகத்தை நிரப்பிக்கொள்வதும்” ஆயிற்று. இதை வைத்து ‘பிழைப்புக்காக கோழிக்குஞ்சு விற்க ஆந்திரா வரை போகும் தமிழர்கள் தங்கள் பிழைப்பைப் பார்ப்பார்களா அல்லது ஈழப்பிரச்சினையைப் பார்ப்பார்களா’ என்று அவர்களை நான் முன்னிறுத்தினால் அதைவிடக் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறேதும் இருக்க முடியுமா? இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது? இதையெல்லாம் ஜெயமோகன் தெரிந்து செய்கிறார் என்று தோன்றவில்லை - இதெல்லாம் அப்படியே தற்போக்கில் வருவதுதான் போல - தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்பது மாதிரி சட்டியில் இருப்பது அகப்பையில் வருகிறது, அவ்வளவுதான். இதுபோன்ற பிரக்ருதிகள் தமிழ்நாட்டில் அசாதாரணமான வெற்றி அடையும் வாய்ப்புள்ளவர்கள் - சமீபகாலமாகக் கருணாநிதியைக் கருணாநிதி என்று எழுதாமல் வாய்க்கு வாய் கருணாநிதி அவர்கள் கருணாநிதி அவர்கள் என்று எழுதும் ஜெயமோகன், எம்.ஜி.ஆர் சிவாஜி குறித்து எழுதியதற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு தொடர்ந்து வசனம் எழுதும் இந்த சுயமரியாதைச் சுடர், நாளை ஈழப் பிரச்னையில் கருணாநிதி செய்தது ராஜதந்திரம் என்று எழுதி, அவரை சிலாகித்து இரண்டு வரி எழுதி, இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து கருணாநிதியின் இலக்கியம் குறித்தான தனது பார்வைகளை ‘மறுபரிசீலனை’ செய்து, தமிழ்ப் பண்பாட்டுப்புலத்தில் அதுவும் தேவையான ஒன்றுதான் என்று ‘மறுவாசிப்பு’ செய்து பின்பு ஒரு மேடையில் தோன்றி என்று இருபது வருடங்களில் நடக்கத்தான் போகிறது (கருணாநிதி அதுவரை உயிருடன் இருக்கத்தான் செய்வார்).
இந்த கழுவும் மீனில் நழுவும் போக்கு வலதுசாரிகளின் வெளிப்படையான வெறுப்பரசியலைவிட அபாயகரமானது. வலதுசாரிகளிடம் கவனமாக இருக்கவேண்டிய விஷயம் அவர்களது பிரச்சாரங்கள்/பரப்புரைகள் கூட அல்ல - அவர்களது புகார்களும் கழிவிரக்க நாடகங்களும் மட்டுமே. அமெரிக்க ஊடக வலதுசாரிகள் ரஷ் லிம்பா, டெப்பி ஷ்லுஸ்ஸெல், மைக்கேல் சாவேஜ் (பில் ஓ ரெய்லி, ஆன் கூல்டர் போன்ற ஃபாக்ஸ் தொலைக்காட்சி/பிற வலதுசாரிப் பண்டிதர்கள் இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும்) போன்ற உதாரணபுருஷர்கள் கட்டவிழ்த்து விடும் ‘தர்க்க’ ஊற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல - சொல்லப்போனால் அதைவிடத் தளுக்காக முன்வைக்கப்படும் ‘தர்க்கம்’ ஜெயமோகனது - இவரது பிரசங்கங்களனைத்தும் “தற்போதைய சூழலின் அபத்தத்தை விலகி நின்று விளக்கமுயல்வதாக, நீண்டகாலத்துக்குப் பயனுடையதாக இருப்பதாக” வேஷங்கட்டியிருப்பது தற்போதைய அவரது இருப்பை/கருத்துதிர்ப்பைத் தொடர்ந்து முன்னகர்த்துவதற்கான பிரயத்தனங்களே தவிர வேறேதுமில்லை. உதாரணம் இது: நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள். இது போன்ற கருத்துதிர்ப்புக்கள் தமிழ் “பண்பாட்டுச்சூழலில்” ஒரு சீரிய கருத்துக்கோர்வையாக/தத்துவக்கோர்வையாகக் கண்டுகொள்ளப்படும் என்பதுதான் விபரீதம்.
ஜெயமோகன் போலவே மற்றொரு அஹிம்சாவாதியான, தமிழரான, முன்னாள் அதிபரான அப்துல் கலாம் ஈழம் குறித்தோ, அங்கு நடக்கும் மனித உரிமை அத்துமீறல்கள் குறித்து வாயைத் திறந்ததாக ஊடகங்களில் எங்கேயும் படித்த நினைவில்லை. ஆனால், சில வருடங்களுக்கு முன் இந்தியா-பாகிஸ்தான் இடையில் பதட்டம் மூண்டும் போர் நிகழாமல் போனபோது அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயம் ஊடகங்களால் கொண்டாடப்பட்டது - “இந்தியா பாகிஸ்தான் இருவரிடமும் அணுகுண்டு இருந்ததால்தான் நேரடிப் போர் நிகழவில்லை” என்று. ஜெயமோகன் பார்வையில் அப்துல் கலாம் ஐயா சொன்னது மாதிரி ‘அணுகுண்டு வைத்திருந்து பிரயோகிக்காததும்’ ஒரு திருகப்பட்ட அஹிம்சையாகத்தான் இருக்கும். நமது பாரத மாதா 1947ல் சுதந்திரமடைந்தபோது கோவாவிலிருந்து போர்த்துகீசியர்கள் இன்னும் வெளியேறவில்லை - துக்கடா போர்த்துகல்லிலிருந்து முறுக்கிக்கொண்டிருந்த சாலஸாரை தட்டி வைத்து கோவாவை பாரத மாதாவின் இடுப்புடன் இணைக்க இந்தியா தனது படைகளை அனுப்பி வைத்தது அஹிம்சையின் அடிப்படையிலா? ஆம். ஏனெனில் படைகளை அனுப்பியது மட்டுமே இந்தியா செய்தது - போர் நிகழவில்லை! எனவே அதுவும் நமது பாரம்பரியப்படி அஹிம்சா அணுகுமுறை. கட்டையைத் தலைக்கும் மேல் ஓங்கினால் பரவாயில்லை, அடித்தால்தான் தவறு. அதுவும், நமது உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு பெரிய கட்டையை வேண்டுமானாலும் ஓங்கலாம். கட்டை கீழிறங்கித் தலையைப் பிளந்துவிட்டாலும் பரவாயில்லை - கட்டையின் பாதையில் தலை இருந்தது, அதனால் கட்டையை மட்டும் முழுதாகக் குற்றம்சொல்ல முடியாது. தலை சுற்றுகிறதா? ஜெயமோகனைத் தொடர்ந்து படித்து வருபவர்களாக இருந்தால், அவர் இந்த மாதிரியான வாதத் திறமையோடு ஹெராக்ளிட்டஸின் நதியிலோ காவிய சோனாவிலோ தனது தர்க்கக் கௌபீனத்துடன் இறங்கும்போது நதிகள் தலைதெறிக்கக் கரைபுரண்டோடும், நாமும் ரசிப்போம். ‘செ கெபாரா’ பற்றி சாரு நிவேதிதா அப்படி எழுதினால், ஜெயமோகன் அமெரிக்க வலதுசாரிகளின் அதே பார்வையுடன், “நூறு பேர் போய் கைப்பற்றினார்கள், அது எப்படியோ ஃப்ளூக் அடித்து புரட்சியாகிவிட்டது” என்று எழுதியிருக்கிறார். இவர் ‘மதிக்கும்’ நாவல் கலை நிபுணர் உம்பர்த்தோ ஈக்கோ கீழைத்தத்துவத்தை/அறிவியலைப் பற்றியும் இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார் - தொடக்கத்தில் ஏதோ ஒன்றிரண்டு விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள் கிழக்கே இதிலென்ன பெரிய விஷயம் என்று. அதே கதியில், 1857 சிப்பாய்க் கலகத்தில் மரணித்தவர்களின் புத்திசுவாதீனத்தை நாழியில் அளந்து விலை நிர்ணயிப்பது ஜெயமோகனின் அடுத்த கருத்திலக்காக இருக்கவேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு சிப்பாய்க் கலகம் ஒரு பொறி என்றுள்ள வரலாற்றை மாற்றி, அது முஸ்லிம் மன்னரை மீண்டும் பீடத்திலமர்த்த சவுதி அரேபியாவிலிருந்து போன பெட்ரோ டாலர்களால் உருவான சதி, சிப்பாய்களுக்கு பாங் கொடுத்து கலகத்துக்குத் தூண்டி நமது பாரத பாரம்பரியத்தின் அஹிம்சா நெறியிலிருந்து தவற வைத்துவிட்டார்கள் - அதில் பிடிபட்டுச் செத்தவர்கள் குறித்தான மரியாதை அசலில் தேவையா இல்லையா என்பதை வரலாற்று மறுவாசிப்பு செய்யவேண்டுமென்று அடுத்து எழுதினால் கணக்குச் சரி. ஜெயமோகன் போன்ற ஒரு ‘பெருங்கலாச்சாரவாதிக்கு’, ‘தேசியவாதிக்கு’, கிட்டத்தட்ட எண்பது கோடி மக்கள் கொண்ட ‘பெரும்பான்மை’ மத்தியில் வாழும் ‘பெரும்பான்மை உறுப்பினர்’ ஒருவருக்கு, தனது வாழ்நாளில் போர் மட்டுமல்ல - தனது ‘அடையாளங்ஙள்’ மீதான கலாச்சார/உடல்ரீதியான/உள்ளரீதியான வன்முறை எதையும் சந்தித்திராத ஆளுக்கு காந்தியின் அஹிம்சை குறித்து சண்டப் பிரசண்டங்கள் செய்ய எந்தத் தயக்கமும் இல்லாததை நாம் அவரது கோணத்திலேயே புரிந்துகொள்ள முயலலாம். பி.ஜே.பியின் ‘இந்தியா ஒளிர்கிறது’ விளம்பரங்களின்போது காந்தியின் ‘தேவையென்றால் இந்தியா ஆயுதமும் எடுக்கலாம்’ என்னும் வாக்கியம், அதன் உள்ளடக்கத்திலிருந்து அகற்றப்பட்டு திரிக்கப்பட்டு இந்துத்துவக் குரங்குகளால் திசைதிருப்பப்பட்டதாக (implied) ‘அஹிம்சாவாத’ ‘ஈழ ஆதரவு’ ‘த ஹிந்து’வில் திரு. சி. ராம்மனோகர் ரெட்டி எழுதினார் - “நரேன் பாய்” குறித்து ஜாடை மாடையாகவும். காந்தியின் இந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகளை (முழுமையாக அல்ல) முன்பொரு தருணத்தில் குறிப்பிட்டிருந்தேன் - ராஜீவ் ஸ்ரீனிவாசன் போன்ற quasi-intellectual பிரக்ருதிகள் எழுதும், தமிழ்நாட்டைக்குறித்து எழுதும் நிருபர்கள்கூட சமகாலத் தமிழ்ப் பாரம்பரியப்படி “கணேஷ் நாடார்” என்று தோகை விரித்தாடும் மயில் போல பெயர் போட்டு எழுதும் ரிடிஃபிலும் கூட, பாரத மக்களால் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொடர்புத் துறை எப்படி காந்திய வார்த்தைகளை ‘திரிக்கிறது’ என்று திலிப் டிசௌஸாவால் எழுதப்பட்டிருந்தது.
ஆக, நமது இந்திய அரசாங்கம் கூட காந்தியின் வார்த்தைகளைத் திரிக்கிறது. இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறது (பிரணாப் முகர்ஜியின் அஹிம்சா வழி, வெறும் உளவு பார்க்கும் ஆயுதங்கள்தான் - உளவு பார்க்கும் ஆயுதங்களைப் பயன்படுத்திப் போடும் குண்டு இந்தியக் குண்டு அல்ல என்றாலும் என்பார் ஜெயமோகன்). இதைச் சொல்பவர்கள் பாரத தேஸத் துரோகிகள் என்பார் ஜெயமோகன். இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பார். காந்தியின் ‘அஹிம்சை’ வழிநடத்தியது பெரும்பான்மையினரை - எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான, பெரும் நிலப்பரப்பு முழுதும் விரிந்து பரந்திருந்த இந்தியத் துணைக்கண்டத்தவரை. ஆயுதப் போராட்டம் என்றாலும் அஹிம்சை என்றாலும் பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய விடுதலை நிகழ்ந்திருப்பது தவிர்க்கவியலாத ஒன்று - இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நொறுங்கிப் போயிருந்த ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளின் பிடி இந்தியா தொடங்கி அதன்பின் ஒவ்வொன்றாக தென்கிழக்கு ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகளில் தளரத் தொடங்கியிருந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்து, ஹிட்லர் மேற்கு ஐரோப்பாவை தன் ‘ஆயுதங்களால்’ துவம்சம் செய்யத் தொடங்கவில்லை எனில் பிரிட்டன், பிற காலனியாதிக்க நாடுகளின் பொருளாதாரம் போருக்குத் திசைதிரும்பாமல் அப்படியே இருந்திருக்கும், காந்தி தனது ‘அஹிம்சைப் போராட்டங்களை’த் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருந்திருக்க வேண்டியதுதான் - சாகும் வரை. ‘உலகப்போர்’ நடந்தபோது கூட, வங்காளத்திலிருந்து உணவுப்பொருட்கள் திசைதிருப்பப்பட்டு லட்சக்கணக்கில் ‘இந்தியர்கள்’ செத்த வங்காளப் பஞ்சத்தைக்கூட ‘அஹிம்சைப் போராட்டம்’ தவிர்த்திருக்க முடியும்தான்!!!!!!!!!!!!!!!!!!!! உலகத்தை ஹிட்லரின் பிடியிலிருந்து “விடுவிக்கப்” போராடிய இரண்டாம் உலகப் போரின் ‘நாயகர்களான’ சர்ச்சில் போன்றவர்களுக்கு காந்தி மேல் எவ்வளவு மரியாதை இருந்தது என்பது உலகறிந்த கதை. ஜெயமோகனின் (கு)தர்க்கப்படி நாமும் பார்த்தால் ஹிட்லர் தன் ஆயுதங்களால் ஐரோப்பாவை நொறுக்கப் போய்த்தான் இந்தியாவுக்கு ‘அஹிம்சை’ வழி வெற்றி கிடைத்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெறவில்லை எனில் ஆயுதபலத்தில் பல மடங்கு மேலோங்கியிருந்த ஐரோப்பியர்களுடன் போர் தொடுத்து இந்தியா வெற்றி பெற்றிருக்கச் சாத்தியம் இல்லை - இதில் விளைந்த தற்செயல் காந்தியின் அஹிம்சை. பெர்லின் சுவரை இடித்ததால் உடனே சோவியத் யூனியன் நொறுங்கிப்போனது என்று கருதுவது போன்ற பெரும் அபத்தம்தான் காந்தியின் அஹிம்சைக் கோட்பாடுகள் மட்டுமே (அல்லது முக்கியமாக) இந்திய விடுதலைக்குக் காரணம் என்பதும்.
வருடக்கணக்கிலான ஆயுதப்பெருக்கம், தற்காப்பு யுத்திகள், திரைமறைவு அரசியல், உலக அரங்கில் அணிசேர்ப்பு என பன்முனைத் தாக்குதல்கள் மூலம் சோவியத் யூனியன் வீழ்ந்தது, கார்பசேவ் தற்போது நியூயார்க்கில் வசிக்கிறார். இந்திய விடுதலை என்பது காந்தியால் மட்டும் சாத்தியமானது என்பது போன்ற ஒரு பூசிமெழுகல் வேறேதுமிருக்க முடியாது. இது அனைத்தையும் முன்வைக்கும் ஜெயமோகனது ‘தர்க்கம்’ அசலில் வெகு சராசரியான இந்தியப் பெரும்பான்மையின் லௌகீகவாதம். ஈழத்தில் இலங்கை அரசாங்கம், புலிகள் இருவரின் ஆயுதங்களிலும் பலியான அன்றாட மக்களுக்கு இரு தரப்பு மேலும் புகார் இருக்கத்தான் செய்யும் - இதை நிறுத்தத் திராணியில்லாத இந்திய அரசாங்கம் மீதும் புகார் இருக்கத்தான் செய்யும். இதற்கும் கூட முன்கூட்டியே வாய்தா வாங்கி வைக்க வேண்டுமா.
ஹிட்லரை ஆதரித்த மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் அந்த அரசு மீது போர்தொடுத்தது ஐரோப்பிய உலகம். தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதனால் அம்மக்கள் அவ்வரசுக்கு உறுதியான ஆதரவளித்து கூடவே நின்றார்கள். உலகப்போர் அத்தனை நீண்டமைக்கும் பேரழிவுகள் இரு தரப்பிலும் உருவானமைக்கும் காரணம் அதுவே.
ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை - இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது - கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று. எனவே எனது ‘கருத்தை’ச் சொல்லுமுன் எனது கருத்து எனக்கு எவ்வளவு அவமானகரமாக இருக்கிறது என்பது வேறு விஷயம் - யாரை நோக்கிக் கூறுகிறேனோ அவர்களுக்கு எவ்வளவு அவமானகரமாக இருக்கும் என்று முதலில் யோசித்துப் பார்க்கிறேன். தான் சொல்வது சரியாக இருக்கும் என்று அபாரத் தன்னம்பிக்கையுடன் மேற்கண்ட பொன்மொழியை உதிர்த்திருக்கும் ஜெயமோகனை உலகப்போர் காலத்து யூதர்களிடம் விட்டிருந்தால் உரித்து உப்புக்கண்டம் போட்டிருப்பார்கள். வரலாறு தொடர்ந்து முன் நகர்வது. வீம்புக்காக பதில்சொல்வதை விடுத்து, விமர்சனங்களை நியாயமாக எடுத்துக்கொண்டு அந்த அமெரிக்க வாசகர் குறிப்பிட்டதுபோல அசலில் உலகை ஜெயமோகன் ‘பார்க்க வேண்டும்’. உலகை எப்படிப் பார்ப்பது என்று பிறருக்கு விளக்கிப் பக்கம் பக்கமாக எழுதுபவருக்கு தனது பார்வை குறித்துக் கேள்வி கேட்டால் சுருக்கென்று கோபம் வந்துவிடுகிறது. நரேந்திர மோடி குஜராத்தை “தொழில்மயமாக்கியது” மாதிரி ஹிட்லரும்தான் ரோடு போட்டார், குளங்களை வெட்டினார், மரங்களை நட்டார், ஃபெர்தினாந்த் போர்ஷெவைச் சந்தித்து சாமானிய ஜெர்மானியர்கள் ஓட்டும் காரான வோக்ஸ்வேகனை உருவாக்கினார். அத்துடன் சேர்த்து யூதர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், ஊனம்/உடற்குறைபாடுள்ளவர்கள், ஐரோப்பிய ஜிப்ஸிகள் அனைவரையும் கொன்று போட்டார். நாஸி டாக்டர் ஜோஸஃப் மெங்கிளெ செய்த ‘சோதனைகளை’க்கூட அஹிம்சை முறையில் மெங்கிளெவின் நோயாளிகள் எதிர்த்திருக்க வேண்டும் போல. சினிமாவுக்கு தொடர்ந்து வசனம் எழுதிக் கிழித்த பின் இப்போதாவது வெள்ளைக்காரன் ஆன்மா இல்லாம படம் எடுக்குறான் என்று நொட்டை சொல்லாமல் ஜெயமோகன் படம் பார்ப்பார் என்று நினைக்கிறேன் - இஸ்த்வான் ஸாபோவின் ‘மெஃபிஸ்டோ’ பார்க்க வேண்டும் அவர். அதன் நாயகன் போல ஜெயமோகன் நாஸி ஆட்சிக்காலத்தில் கலைஞராக இருந்திருக்க வேண்டும். ஊத்தை சிவாஜி எம்ஜியார் ரசிகர்களின் மிரட்டல்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை, ஹிட்லரின் ஆன்மாவில் பேன்பார்த்து - ஜெர்மானியர்களின் மனங்களை வென்றெடுத்து - ஜெர்மானிய மனதுகளை அசைத்து விடுதலை கிடைக்க வேண்டுமாம். திரைப்படங்களில் பார்த்தது, ஏட்டுச் சுரைக்காயாக அவர் புத்தகங்களில் படித்தது தவிர துணையின்றித் தனியாக இந்த கொலைக்கூடங்களின் காற்றைத் தன் வாழ்வின் தருணங்களிலொன்றில் அவர் சுவாசிக்க நேரும்போது எடுக்கும் பித்தவாந்தியில் வரும் சில வார்த்தைகளாவது நேர்மையானதாக இருக்கிறதா பார்க்கலாம் - வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.
இன்று இந்தப் பதிவில் படித்(திருந்தால்)ததை நினைவு வைத்து “கண்ட கண்ட நாயும் எனது கலைத்திறனைப் பற்றி குற்றம் குறை சொல்லி எழுதுகிறது, இதுகள் சொன்ன ஆஷ்விட்ஸை நேரில் பார்த்தால் எனக்கு வாந்தி வரவேண்டுமா, அங்கே லாவண்டர் மணம் வீசியது என்று எழுதுகிறேன்” என்று எழுதுவாரென்று நினைக்கிறேன்!!! காஷ்மீரில் பண்டிட்டுகளை குண்டு போட்டுக் கொல்லும் ஜிகாதிகளிடமும் போய் அவர்கள் ஆன்மாவை சுத்திகரிக்க வழி இருக்கிறதா பார்க்கவேண்டும் ஜெயமோகன் - ஓரியானா ஃபல்லாச்சி சொன்னது போல ‘சுத்திகரிக்க முடியாத குட்டையான’ இஸ்லாமுக்கு மட்டும் இந்த அஹிம்சை அப்ரோச்சிலிருந்து விதிவிலக்கு - சரியா? தமிழ் எழுத்தாளர்களின், பொதுவாக இந்தியர்களின் பிரயாண வாய்ப்புக்கள் குறைவு - அது ஒரு விஷயமே அல்ல, தவறும் அல்ல. இவற்றை அணுகுவதற்குத் திறந்த மனம் மட்டும் தேவை - பிரயாணங்கள் கூட அல்ல - எதையும் பார்த்திராதவன் கூட ஜெயமோகன் போன்றவர்களைவிடத் திறந்த மனதுடையவனாக இருக்க முடியும். கொலையுண்டு இறந்த அனைத்து யூதர்களுக்கு எதிராகக்கூட நினைத்தால், தேவைப்பட்டால், வீம்புக்காக எத்தனை தர்க்கங்களை வேண்டுமானாலும் என்னாலும் உருவாக்கிக்கொள்ள முடியும். ஜேம்ஸ் பாண்ட் டேனியல் க்ரெய்கின் சமீபத்திய திரைப்படம் ‘Defiance’ன் அசல் கதை வேறு - யூதர்களை இதில் வெறுமனே விதந்தோதுகிறார்கள், அசலில் இதுவும் நடந்தது என செய்திகளில் காட்ட முடியும். என்னைத் தவிர்த்த விஷயங்களில் ‘எனது நிரூபணம் இது’ என்னும் உறுதி பெரும் அபத்தம். யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சாமானிய ஐரோப்பியர்கள் கணக்கற்றவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் - அவர்கள் ஒரு இனக்குழு சார்ந்தவர்கள் அல்ல - அவர்களது வரலாறு நொறுங்கிச் சிதறிய ஒன்று. அவர்களுக்காவது தற்போதைய ஐரோப்பிய நாடுகள் வழி வரலாற்றை எழுத வழி கிடைக்கிறது. ஈழத்தவர்களின் வரலாறு இதைவிடக் கேவலமாகச் சிதறிக் கிடப்பது - ஐரோப்பாவின் யூதர்கள், அல்லது இஸ்லாமியப் பின்புலமுள்ள பாலஸ்தீனர் போலன்றி எதுவுமின்றிப் போயுள்ள இவர்கள் வாசிக்கும் மொழியில் இந்த எழுத்தாளப் பிரக்ருதிகள் தங்களது சிந்தனைக் கழிச்சல்களைக் கொட்டக்கூடாது என்று கூற எவருக்கும் உரிமையில்லை - ஆனால் கொட்டியுள்ளதை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உள்ளது. இந்தியத் தமிழர்கள் இவர்களைப் படித்தாகவேண்டிய காரணங்களும் ஈழத்தவர் இவர்களைப் படித்தாகவேண்டிய காரணங்களும் நிச்சயம் வேறு வேறு என்றே நினைக்கிறேன்.
~~ dystociaweblogs.us ~~
Saturday, May 30, 2009
இலக்கியப் புடுங்கிகள்
ஈழம் நமக்குள் ரணமாய்,வலியாய்,துயரயாய் இருக்கும் இந்த சூழலில் …இனி என்ன செய்வது என வலியின் ஊடே தொக்கி நிற்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் நாம் விக்கித்து நிற்கும் போது…வழக்கம் போல எதிர்வினை என்ற பெயரில் ஏதாவது வினை வைக்கவும், எகத்தாளம் செய்யவும் இலக்கிய அறங்காவலர்கள் சிலர் முளைத்து இருக்கின்றனர். ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம்..வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன அழிவாய் நம் கண் முன்னால் விரிந்து..நம் இன மக்களை நம்மால் காப்பாற்ற இயல வில்லையே என்ற குற்ற உணர்ச்சியாய் நமக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை மக்களின் அழிவைப் பற்றியோ..துயரைப் பற்றியோ.. வாய் திறக்காத இவர்கள்…யுத்தம் மக்களின் அழிவாய் ஒரு வலுக்கட்டாய முடிவிற்கு வந்திருக்கும் போது..இந்த இலக்கிய புடுங்கிகள் வழமை போலவே பிணத்தை அறுக்கும் வேலை பார்க்க வந்து விட்டனர்.
இந்த இலக்கிய இமயங்கள் இப்போது எழுத துவங்குவதற்கு பின்னால் உள்ள அரசியல் மிகவும் கவனிக்கத் தக்கது. இவர்கள் அங்கே மிஞ்சியிருக்கும் மக்களுக்காகவோ…உரிமைகளுக்காகவோ நாளைய தீர்வுகளுக்காவோ எழுதத் தலைப்பட வில்லை.மாறாக இங்கே இனப்பற்றின் விளைவாய்..
இனம் ..மொழி என்ற ஒன்று இருந்தால்தானே..நம்மால் எழுதி கிழிக்க முடியும் என்ற உண்மை உறுத்தினாலும் தீர்க்கதரிசி பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில் ஏதாவது உளற வேண்டும் என்பதற்காக கக்க வேண்டியதை காலம் கடந்தாலும் கக்கி விட வேண்டும் இவர்களுக்கு…
ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது உளறி கொட்டுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது.அது என்னவென்றால்..உளறி கொட்டியதற்கு மாற்றாக ஏதாவது நடந்து விட்டால் தீர்க்கதரிசி பட்டம் போய் விடுமே என்ற பயம்.அது தான் இட்லி ஆறிய பிறகென்ன..ஊசிப் போன பிறகு கூட இவர்கள் சாப்பிட துணிவது…பிரச்சனை மையம் கொண்டிருக்கும் போது ஏதாவது பேசுவது இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்கவிடும் என்ற பயம் இவர்களின் இதயத்தினை கூட இறுக வைத்துவிடும்.எல்லாம் முடிந்த பிறகு ….யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற துணிவில்..தேனீக்கள் அற்ற வறண்ட தேன் கூட்டில் ..நக்கிப் பார்க்கும் திட்டத்தோடு இவர்கள் எழுத துவங்கி உள்ளார்கள். இனிமேலும் எழுதுவார்கள்..வெகு ஜன பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் பக்கங்கள் கிடைத்து விட்டது என்பதற்காக வருடக் கணக்கில் பொதுத் தளத்தில் விஷத்தை மட்டும் தொடர்ந்து கக்கி வருகிறார் ஞாநி என்று தன்னை தானே அழைத்து கொள்கிற ஜிப்பா ஆசாமி. இவருக்கு என்ன வேலை என்ன வென்றால்..ஊர் முழுக்க தந்தி அனுப்பவும்,மனு போடவும் கற்றுக் கொடுக்கிற அதாரிட்டியாக அலப்பரையை கொடுப்பது..ஏதாவது சொல்லும் போது..அன்றே சொன்னனே பார்த்தாயா என்று தீர்க்கதரிசி கிரீடத்தை தானே சூட்டிக் கொள்வது.இந்த வாரத்து குமுதம் இதழில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரனை ஈழ மாநில முதலமைச்சராய் ஆக இவர் ஆசைப்படுகிறார்.
உணர்வும் ,உண்மையும்,கொள்கையும், இனப்பற்றும் நிரம்பிய தலைவர் அவர்களை இவர் பதவிக்காக அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல நினைத்து விட்டார் போலும்.பிரபாகரன் இருக்கிறாரோ,இல்லையோ என்று ஆங்காங்கு விருப்பங்களின் இடைச் செருகல்கள் வேறு.
சிங்கத்தினை சீண்டி பார்க்கும் சிறு நரிக் கூட்டமே..உங்களுக்காகவது எம் தலைவர் வருவார்..வந்தே தீருவார்.உலக வரலாற்றில் எழுத்தாளர்களின் மனமும்,எழுத்தும் சாதித்தவை மிக அதிகம்.எப்போது எல்லாம் மக்கள் இன்னலுற்று ..அவதியுற்று நிர்கதியாய் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் படைப்பு மனம்தான் போர் முரசு கொட்டி நிற்கும்..என் கண்ணால் மக்ஸீம் கார்க்கி, பாப்லோ நெரூதா,பாரதி, பாரதிதாசன்,காசி ஆனந்தன், இன்குலாப்,அறிவுமதி, என பட்டியல் நீள்கிறது.ஆனால் நம் படைப்புவாதிகளோ எதற்கும் உதவாமல்..அறைக் கூட்டம் நடத்தி அடித்துக் கொள்ள மட்டுமே எழுதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு உள்ள சமூக பொறுப்புணர்ச்சி கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது..?.கேட்டால் படைப்பு மனம் சிதைந்து விடுமாம். பாவிகளே…சமூகம் என்ற ஒன்றும்..உரிமை என்ற ஒன்றும் இருந்தால் தான் படைப்பு… வெங்காயம் இதெல்லாம்..எங்கேயோ இருக்கும் பிஜீத் தீவில் சமூகம் படும் அவலம் கண்டு கண்கலங்கி..எழுதினானே பாரதி..அவனும் படைப்பாளிதானே.. குடிப்பதையும் பற்றியும்..இல்லாத இதிகாசங்கள் பற்றியும் புனைவு மொழியில் வரிந்துக் கட்டிய இவர்களால் ஏன் ஈழம் என்று வரும் போது கைகளை இறுக்க மூடிக்கொண்டு விடுகிறார்கள்.தமிழ் சமூக வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த இன அழிவின் போது சிறு சலனத்தை கூட காட்டாத இவர்கள்..இனி எதற்கு யாருக்கு எழுதப் போகிறார்கள் ?
அய்யா…இலக்கிய இசங்களை கரைத்து குடித்து..வேதாந்த ஆராய்ச்சியில் முழ்கி திளைத்து…இதிகாச மீள் புனைவில் மீண்டெழுந்து..குடிப்பதையும்..குடிச்சாலைகளையும்… ஊற்றெடுக்கும் காமத்தினையும்…வரிசை கட்டி எழுதி வரும் கணவான்களே…
ஈழத்தினையும்..மக்களையும் விட்டு விடுங்கள்…அவர்களுக்கான விதியை அவர்களே சமைப்பார்கள்.
காரண…காரிய ஆதி மூல ஆராய்ச்சிகளை கடலுக்கு இந்த பக்கம் மட்டுமே..வைத்துக்கொண்டு… ஏற்கனவே பணத்திற்காகவும்.. சாராயத்திற்காகவும்…தங்களை தாமே விற்றுக் கொண்டு விட்ட இந்த கூட்டத்திடம் உங்கள் பம்மாத்து வேலைகளை தொடருங்கள்.
எவனும் இங்கே எதற்கும் கேட்கப் போவதில்லை. தின்னது செரிக்கவும்..பட்டங்களை பறிக்கவும்..எழுதுங்கள். கலகம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளவும்..இலக்கியம் என்ற பெயரில் குடித்துக் கொள்ளவும் எழுதுங்கள்…உங்களுக்கு பிறகான சமூகத்தினை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் ..எழுத்தாக எண்ணி பதிப்பிக்க ISDN பதிப்பகங்களும் அவற்றின் பத்திரிக்கைகளும் உள்ளன..மேலும் விளம்பரம் கொடுத்து போஷிக்க ஜவுளிக் கடையும், அல்வா கடையும் இருக்கவே இருக்கின்றன..இது போதாதா..கூட்டம் நடத்தவும்..கும்மி அடிக்கவும்…? உள் மன இருட்டுதான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது.
ஆனால் எதற்கும் உண்டு விடியல்.
விடியலின் கதிர்களில் எரிந்து போக இருப்பது.
வணக்கம் .இலக்கியப்புடுங்கிகளே..
- இணைய தமிழர் இயக்கம் -
Friday, May 29, 2009
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு
பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ்)
யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட்)
சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா)
பிரியதர்சினி சற்குணவடிவேல் (பர்சிலோனா)
தமிழீழ விடுதலைப் போராட்டம் எந்த வித மறு பேச்சிற்கும் இடம் வைக்காமல் முடிவடைந்து விட்டது அல்லது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது நீர்த்துப்போய் படிப்படியாக அந்த நிலையை அது எய்தும் என்று எதிர்வு கூறல்களாக அல்லாமல் அவை முடிவுகளாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு சூழலுக்குள் ஒரு இனத்தின் நீண்ட நெடிய போராட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.
போராட்டத்திற்கு வெளியே இத்தகைய சொற்பதங்கள் புழக்கத்திற்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் துரதிஸ்டவசமாக நாமும் இவற்றை தற்போது உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறோம். அதன்வழி அவற்றை நம்பவும் தொடங்கியிருக்கிறோம் அல்லது நம்பும்படி கட்டாயப்படுத்தபடுகிறோம். ஒரு தமிழ் உயிரியின் ஒவ்வொரு கணமும் இத்தகைய நிர்ப்பந்தத்திலேயே கழிந்து கொண்டிருக்கிறது.
உண்மையிலேயே தமிழீழ விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா? இந்த சிக்கலான கேள்விக்குள் நாங்கள் இறங்க விரும்பவில்லை. ஏனெனில் அது எமது வேலை இல்லை. அத்தோடு நாம் தீர்க்கதரிசிகளோ ஆருடக்காரர்களோ கிடையாது. படைத்துறை ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் பதில் தெரியாமல் "பேந்த பேந்த" முழித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்குள் நுழைந்து எம்மைக் காயப்படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.
ஆனால் நாம் வேறு ஒரு கோணத்தில் இந்த வரலாற்றுக் காலகட்டத்தை ஆய்வு செய்ய முனைந்திருக்கிறோம். ஒரு வேளை மேற்கண்ட கேள்விக்கான பதிலை இந்த ஆய்வினூடாக நீங்கள் தரிசிக்கலாம். அதற்கு எந்த உத்தரவாதத்தையும் நாம் முன்கூட்டியே வழங்கவிரும்பவில்லை.
"தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?" என்ற கேள்வியைத்தான் மையப்படுத்தி நாங்களும் ஆய்வு செய்யப்புகுந்துள்ளோம். இது என்ன முரண்பாடு என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இதில் எந்த முரண்பாடும் இல்லை. நாம் எல்லோரையும்போல் அந்தக் கேள்விக்குள்ளாக இறங்காமல் மேலும் கீழுமாக அதைச்சுற்றிப் பயணித்து அக் கேள்வியின் உருவாக்க நியாயங்கள் மீதும் எதன் அடிப்படையில் இது முன்மொழியப்படுகிறது என்பதனையும் ஒரு உளவியல் ஆய்வாக முன்வைக்க முனைந்துள்ளோம். இந்த ஆய்வு கூட எமக்கு முக்கியமனதல்ல. இதனூடாகக் கிடைத்திருக்கும் ஒரு உளவியல் வாசிப்பையே நாம் பிரதானப்படுத்த விரும்புகிறோம்.
இப்பரந்த பூவுலகில் ஒவ்வொரு மனித உயிரியும் தாம் எதிர்கொள்ளும் வாழ்வியல் புறநிலைக்கேற்ப பல கருத்துருவாக்கங்களினால் கட்டமைக்கப்படுகின்றன. இதன்வழி இப்பூமியில் கட்டவிழும் ஒரு நிகழ்விற்கெதிராக அல்லது அந் நிகழ்வு குறித்து ஒவ்வொரு உயிரியும் வேறுபட்ட பார்வையை அல்லது எதிர்வினையைப் பதிவு செய்கின்றன. இதை சற்று விரிவு படுத்தினால் இனம், மதம், மொழி, கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து குழுமங்களாகவும் ஒருமித்த - வேறுபட்ட கருத்துருவாக்கங்களும் உருவாகின்றன - மாற்றம் பெறுகின்றன.
பெண்ணியம், மானுடவியல், தத்துவம், சமூகவியல் சார்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட எமக்கும் உலக சமூக நிகழ்வுகள் குறித்த ஒரு வாசிப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு குறித்த பல பிதற்றல்களையும், உளறல்களையும் அதன்வழி தொடர் பதற்றத்திற்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் அரற்றல்களையும் அங்கலாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி விவாதித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு கருத்துருவாக்கத்தினைப் பெற்றிருக்கிறோம்.
இக் கருத்துருவாக்கத்துடன் யாரும் முரண்படலாம். நாம் அதை மறுக்கவில்லை. ஆனால் இதன் பெரும்பான்மை சாத்தியங்களை யாரும் மறுதலிக்க முடியாது. நாம் இந்த ஆய்வை இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இதை அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக தமிழ்ச்சூழலுக்கு உடனடியாகக் கொண்டு வருவதன் நோக்கம் சில மணித்தியாலங்களை போரின் இறுதி வெற்றிக்கான காலக்கெடுவாக அறிவித்துவிட்டு மிக மோசமான இனச்சுத்திகரிப்பில் இறங்கியிருக்கும் ஸ்ரீலங்கா அரசின் கபடத்தனத்தை நாம் புரிந்து கொள்வதுடன் எம்மிடையே தோன்றியிருக்கும் சில நம்பிக்கையீனங்களிற்கும் அடிப்படை புரிதலின்மைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கேயாகும். இவை குறித்த சரியான புரிதலில்லாவிட்டால் நாம் தொடர்ந்து உலகத்துடன் பேச முடியாது- எமது தொடர் போராட்டங்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்காது.
உண்மையிலேயே இவை குறித்து எமக்குள்ளாகப் பேசிக் கொள்ளத்தேவையில்லை. ஏன் எமது எதிரிகளான ஸ்ரீலங்கா அரசிற்குக் கூட எந்தச் செய்தியும் இதற்குள் இல்லை. மாறாக இந்தக் கருத்தியலை கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் எமது போராட்டத்தின் மீது ஆதிக்கம் nசுலுத்தும் மூன்றாவது சக்திகளான இந்தியாவும் மேற்குலகமும்தான். ஏனெனில் நாளை ஒரு இனத்தின் எதிர்வினைக்குள் சிக்கி விளைவுகளை அறுவடை செய்யப்போவது அவர்கள்தான்.
சிலவற்றை வெளியாகப் பேசிவிட வேண்டியதுதான். எந்த பூசிமெழுகல்களும் பாசாங்குகளும் இனி வேலைக்கு உதவாது. எமது ஆய்வின் முடிவு பயங்கரமானது மட்டுமல்ல பெரும் அச்சம் தருவதும் உலக ஒழுங்கை நிர்மூலமாக்கக்கூடியதும்கூட. அதாவது ஒற்றை வரியில் சொன்னால் மூன்றாவது சக்திகளின் துணையுடன் படைத்துறை ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அல்லது தோற்கடிக்கப்படுவது போன்ற பாவனைகளையும் உளறல்களையும் அனைத்துத் தரப்பும் தற்போதுள்ளதுபோல் தொடருமாயின் எந்த கணத்திலும் இந்த உலகத்தின் மீது பல வடிவங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தமிழ் இனம் தன்னையறியாமலேயே தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் வன்முறை வடிவங்களைக்கூட நாம் இனங்கண்டிருக்கிறோம்.
உடனடியாக போரை நிறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏபிரநிதித்துவத்தை ஏற்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவிடத்து தமது பிராந்திய மேற்குலக நலன்கள் சார்ந்து தமே தம்மைச்சுற்றி வரைந்து வைத்திருக்கும் உலக ஒழுங்கைக் காப்பாற்ற ஒரு சிறிய விடுதலைப்போராடத்தினதும் அதன் மக்களினதும் அழிவுக்கு எந்த மூன்றாவது சக்திகள் துணைபோனதோ அந்த உலக ஒழுங்கை அழிவுக்குள்ளான அந்த இனம் வன்முறை, பயங்கரவாத வடிவங்களினூடக சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதை இந்த உலகம் எதிர்கொள்வதைத்தவிர வேறு மாற்று விளைவுகள் கிடையாது. ஏனெனில் அந்த இனம் தனது சுய நனவு மனத்திலிருந்து விடுபட்டு - வெளியெடுக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அதாவது அது ஒரு கூட்டு மன அதிர்விற்குள் தள்ளப்பட்டிருக்கிறது.
நாம் இந்த ஆய்வை செய்ய புகுந்த கதையை சுருக்கமாவேனும் விளக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் தமிழர்களாக இருந்தபோதிலும் எமது வாழ்வை தமிழ்ச்சூழலுக்கு வெளியிலேயே கட்டமைத்துக்கொண்டவர்கள். (இதில் விதிவிலக்கு நண்பர் பரணி கிருஸ்ணரஜனி - அவர் தொடர்ந்து தமிழ்ச்சூழலில் இயங்கி வருபவர்) காரணம் எமது கல்விப்பின்புலம், தொழில் சார்ந்த நடைமுறைகளும் குறிப்பாக சுயநலன்களும் என்று கூறலாம். தமிழர்களாக இருந்தும் எமது இனத்தின் போராட்டத்தை செய்தியாகவே அறிந்து கொள்ள முற்பட்டவர்களாக இருந்தோமேயொழிய பங்குதாரர்களாக நாம் இருக்கவில்லை. இப்போது அதற்காக நாம் வெட்கப்படுகிறோம் - வேதனைப்படுகிறோம்.
திடீரென்று நாம் எம்மை தமிழர்களாக உணரத்தொடங்கியது ஒரு இனம் அழியத்தொடங்கியதிலிருந்துதான் என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கத்திற்குரியதும்கூட. நாம் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் புலிகள் பார்த்துக்கொள்வார்கள் அவர்கள் போராடி ஈழம் எடுத்த்துத்தருவார்கள்தானே என்று இருந்துவிட்டோம். இது எமது நிலைப்பாடல்ல, பலரதும் நிலைப்பாடும் இதுதான்.
இந்த மனோநிலையில்தான் இதுவரைகாலமும் இருந்திருக்கிறோம் என்பதையே எமது ஆய்வினூடகத்தான் நாம் கண்டுபிடித்தோம் என்பதே ஆச்சரியமாக மட்டுமல்ல அதிhச்சியாகவும் இருக்கிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பதாகவும், தொடர்ந்து நிலங்களை கைப்பற்றுவதாகவும் ஸ்ரீலங்காக அரசு அறிவித்ததோடு மட்டுமல்ல பல மூன்றாம் சக்திகளின் துணையுடன் உலக அளவில் அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைகளைக் குத்தி அவர்களை ஓரங்கட்டத்தொடங்கியிருந்ததும் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒரு வித வெறுமைக்குள் தள்ளி பதற்றமடையச் செய்திருந்ததை அப்போது உணராதவர்களும் இப்போது உணர்கிறார்கள். இதைத்தான் கூட்டுமன அதிர்வு என்ற உளவியல் சிக்கலாக விளக்க முற்படுகிறோம்.
விடுதலைப் போராட்டத்தோடு தம்மை தாயகத்திலும் புலத்திலும் நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் மட்டுமின்றி எம்மைப்போன்றிருந்த ஈழத்தமிழர்கள் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைத்துமே என்னவென்று அறியாமலேயே இந்த கூட்டுமன அதிர்வுக்குள்ளாகியதுதான் ஆச்சர்யம். தமிழகம் மட்டுமின்றி தென்னாபிரிக்கா, மலேசியா, மொறீசியஸ், பிஜித் தீவுகள் என்று ஒரு இனமே அதிர்ந்தது - இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் சட்ட ஒழுங்குகளையும் மீறி நாம் இன்று வீதியில் இறங்கியிருப்பதே அதற்கு சாட்சி.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் நிறைந்து கிடக்கும் எமது ஆய்வை சுருக்கமாக இங்கு விளக்குவது கடினமானது மட்டுமல்ல பல உளவியல் வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கமும் கிடையாது. அதைத் தொடர்ந்து விளக்குவது உங்களுக்கு அயர்ச்சியையும் தரும். சுருக்கமாக சிறிய விளக்கங்களையே நாம் உங்கள் முன் வைக்க விழைகிறோம்.
இந்த கூட்டுமன அதிர்வுக்கு ஓரே காரணம் எதிரி நிலத்தை விழுங்கியதோ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதோகூட அல்ல. பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவம் கைநழுவிக்கொண்டிருப்பதாகவும் தமது தலைமையை எதிரியானவன் பலருடன் கூட்டுச்சேர்ந்து அழிக்க முற்படுகிறான் என்றும் எல்லைகள் கடந்து ஒட்டுமொத்த தமிழினமும் நம்பத் தொடங்கியதுதான் இக்கூட்டுமன அதிர்வின் முதன்மையான காரணம் ஆகும். எமது ஆய்வின் மிக முக்கியமான அம்சம் இது.
தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஒரு இனம் மூன்று தசாப்பதங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப்புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம். இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிவிட்டது. திடீரென்று கொஞ்சப்பேர் வெளிக்கிட்டுவந்து ஆளாளுக்கு வன்முறை, பயங்கரவாதம், மனிதக் கேடயம் என்று அந்த இனத்திடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் மிக மோசமான வன்முறையை அந்த இனத்தின் மீது பிரயோகித்துக்கொண்டே அந்த மூன்று தசாப்த கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் மிகமோசமான வன்முறையுமாகும்.
புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.
இதைத்தான் எமது ஆய்வில் கடுமையாக முன்வைக்க விரும்புகிறோம்.
அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் "NATIONAL POST" மக்களின் போராட்டங்களை முன்வைத்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. அது தமிழர்கள் தமது போராட்டங்களில் புலிகளின் கொடியையும் அதன் தலைவரினது படங்களையும் வைத்திருப்பதைப் பார்த்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்களை நடத்துவது போல் தெரியவில்லை, மாறாக தடைசெய்யபப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளைக் காப்பாற்றவதற்கே இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக சந்தேகம் வெளியிட்டிருந்தது.
"NATIONAL POST" உட்பட எல்லோருக்கும் ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை, தமது அரசியல் தலைமைகள் என்று ஒட்டு மொத்த இனமுமே நம்புகிற புலிகளைக் காப்பதற்கும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கித் தருவதற்குமாகவே மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். இதில் நீங்கள் புதிதாக எந்தக் கண்டுபிடிப்பையும் செய்யத் தேவையில்லை.
முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெருபிம்பமாக தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தழிழனினதும் உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது. அவரையும் அவர் உருவாக்கி வளர்த்த அரசியல் கட்டமைப்பையும் அழிப்பதென்பது ஒவ்வொரு தமிழனினதும் ஆன்மாவில் கைவைப்பதற்கு ஒப்பானது. அதுதான் இப்போது ஒட்டுமொத்த இனமும் அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது.
இந்த அடிப்படையில்தான் நாம் எமது ஆய்வை வளர்த்துச் சென்று ஒரு கருத்துரலவாக்கத்தைப் பெற்றிருக்கிறோம். இனி நாம் விடயத்திற்குள் நுழைவோம்.
மேற்படி விளைவுகளின் காரணமாக கடந்த ஒரு வருடமாக ஒருவிதமான வெறுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக அலைந்து திரிந்த நாம் எமது பிரச்சினையை கண்டுபிடித்ததும் இந்த ஆய்வைச் செய்ய வேண்டும் என்று தூண்டியதும் ஒரு கருத்தரங்கு என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அண்மையில் ஸ்பெயின் பர்சிலோனா பல்கலைக்கழகத்தில் "Psychology of crime : Several psychological factors that figure into why people commit crimes" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கே அது. "பெண் உளவியல்" தொடர்பான எமது மேலதிக ஆய்வுகளின் பயன்பாட்டிற்கமையவும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பை முன்னிறுத்தி கலாநிதி பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் எமது தோழி ஒருத்தியின் நச்சரிப்பு தாங்காமாலும் நாங்கள் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டோம்.
தனிமனித குற்றங்கள் எப்படி சமூக குற்றங்களாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதிலிருந்து தொடங்கி வன்முறை, பயங்கரவாதம், உளவியல் ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பையும் தொடர்பையும் மிகத்துல்லியமாக வரையறை செய்தது மேற்படி கருத்தரங்கு.
குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் தனிமனிதன் தொடங்கி அரசு, நிறுவனங்கள் வரை இதைப் பெரும்பாலும் கணக்கிலெடுப்பதில்லை. இதை வேறொரு மொழியில் கூறினால் தமது வசிதிக்கேற்ப மறந்து விடுகிறார்கள் என்று நாம் கூறிக்கொள்ளலாம்.
குற்றம் என்ற பொது வகைமைக்குள் தனிமனித குற்றம், சமூக குற்றம், போராட்டம், ஆயுதக்கிளர்ச்சி, வன்முறை, பயங்கரவாதம் என்ற தனி அலகுகளாகப் பிரித்து அவற்றின் உளவியல் பிரதிபலிப்பையும் தாக்கங்களையும் ஆய்வாக முன்வைத்தது மேற்படி கருத்தரங்கு.
உண்மையைக் கூறப்போனால் சிக்மன்ட் பிராய்டையும் லக்கானையும் அதன் வழி சர்த்தரையும் கற்றுத் தெளிந்த ஒருவருக்கு மேற்படி ஆய்வுகள் புதிதாக எதனையும் கற்பிக்கப் போவதில்லை. இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பே தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுபகிறது என்று சர்த்தர் வரையறை செய்து விட்டார். மேற்படி கருத்தரங்கு அதை மீண்டுமொரு முறை மறுபதிப்பு செய்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.
இந்தக் கருத்தரங்கிள் முடிவில்தான் நாம் "கூட்டு மன அதிர்வு"க்குள்ளாகயிருக்கிறோம் என்பதையே கண்டுபிடித்தோம்.
அண்மைக்காலமாக மோசமடைந்து வரும் களநிலவரங்களினால் தமது அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் அதனால் தோற்றம் கொண்டிருக்கும் அரசியல் வெறுமையும் - வறுமையும் ஈழத்தமிழினத்தை எல்லையற்ற தொடர் கிலிக்கும் பீதிக்குள்ளும் அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. இதன் நிமித்தமாக ஈழத்தமிழினத்தின் உள்ளும் புறமுமாக ஒரு தொடர் வலைப்பின்னலாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு பதிலாக இல்லாவிட்டலும்கூட, அறத்தையும் நீதியையும் நழுவவிட்டு எம்மை இவ்விக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கும் அனைத்துலக சமூகத்தைத் தொடர்ந்து எதிர்கொள்வதற்கும் அதற்கு எம்மால் தொடர்ந்து
சொல்லப்படக்கூடியதுமான சில முன்முடிவுகளை - தீர்மானங்களை மேற்படி கருத்தரங்கு அடையாளம் காட்டியது. அந்த வகையில் மேற்படி கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதிலிருந்து எமது ஆய்வை நாம் மேற்கொள்ளத் தொடங்கினோம்.
நாம் இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக மேற்படி சங்கதிகளை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வகையில் இவற்றைத்தான் தேடி அங்கே போனோமோ என்ற சந்தேகம் எமக்கே இப்போது எழுகிறது. ஏனெனில் மனம் ஒரு நிலையில் இல்லை. இது எமது நிலை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினத்தின் நிலை இன்று இதுதான்.
உளவியலில் ஒரு நிலை இருக்கிறது. ஒரு மனித உயிரி தன்னளவில் தான் சக மனிதர்களாலும் தான் வாழும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுவதாக, புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக உணரும்போது அல்லது அவ்வாறு எண்ணத்தலைப்படும் போது ஒரு வகையான வெறுமைக்கும் தனிமைக்குள்ளும் தள்ளப்படும் நிலை தோன்றுகிறது. அந்த நிலையில் அந்த மனித உயிரி அடையும் உளவியல் சிக்கலை "Schizoid" என்று உளவியல் மொழியில் அழைப்பார்கள். இந்த நிலை தொடருமானால் மீளமுடியாத மனப்பிறழ்வுக்குள் அந்த மனித உயிரி தள்ளப்படுவதை நாம் தொடர்ந்து அவதானிக்கலாம். Paul Eugen Bleuler என்ற உளவியல் நிபுணர் இன்றைக்கு 100 ஆண்டுக்கு முன்பே மனித மனம் தொடர்பாக கண்டடைந்த உண்மை இது.
இந்நிலையினூடாக ஒரு உயிரிக்கு உள்ள பெரும்பான்மை சாத்தியம் மீளமுடியாத மனப்பிறழ்வு நிலை அதன்வழி தற்கொலை அல்லது குற்றம் மட்டுமே... இதன் அடிப்படையில்தான் குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. எனவே ஒரு குற்றத்திற்கு என்று அடிப்படையும் ஒரு மூலமும் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வோம். மேற்படி கருத்தரங்கு இதைத்தான் பல தலைப்புக்களில் பேச முற்பட்டது.
நாம் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பை மட்டும் இங்கு
விவாதிப்போம். (ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதிகள்"தானே.. இந்த கேடுகெட்ட உலகம் அப்படித்தானே சொல்கிறது) பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு ஏகப்பட்ட குழப்பமான விளக்கங்களை இந்த உலகம் முன்வைக்கிறது. எது பயங்கரவாதம் என்பதில் அதை உச்சரிக்கிறவர்களுக்கே குழப்பமான ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. அரசுகள்கூட பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்பது இங்கு ஏற்கனவே நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாம் இதில் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்வோம்.
பயங்கரவாதம் என்பது பல தருணங்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் அது தனிமனித நிகழ்வு அல்ல. எந்த தனி மனிதனும் இங்கு "பயங்கரவாதி"யாக அறியப்பட்டது கிடையாது. அவன் தான் சார்ந்துள்ள ஒரு அமைப்பிற்காக - ஒரு சமுதாயத்திற்காக - இனக்குழுமத்திற்காக என்று ஒரு பொதுச் சிந்தனையின் அடிப்படையிலேயே அந்த செயலை செய்ய முற்படுகிறான். அந்த நோக்கம் சரியானதா தவறானாதா என்பது இங்கு வேறு ஒரு தளத்தில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் அவனது நோக்கம் பொதுமையானது என்பதுதான் இங்கு முக்கியமானது.
இதைத்தான் சர்த்தர் தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது என்றார். எனவே ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை தொடர் வன்முறைக்குள் அமிழ்த்தி தொடர்ந்து அந்நிலைக்குள்ளிருந்து வெளியேற விடாமல் - வழி தெரியாமல் மனஅதிர்வுக்குள்ளாக்கி அந்தக் குழுமத்தை மனப்பிறழ்வடையச் செய்யும்போது அந்நிலைக்கு ஒரு எதிர்வினையை அக்குழுமம் பதிவு செய்த போது அதை இந்த கேடு கெட்ட உலகம் "பயங்கரவாதம்" என்று பெயர் சொல்லி அழைக்கிறது. இங்கு அந்த குற்றத்தின் மூலமும் அடிப்படையும் காரண காரியங்களும் அடியோடு மறைக்கப்பட்டது மட்டுமல்ல அந்தக் குற்றவாளிகளை( அரச பயங்கரவாதிகளை) காப்பாற்றும் உலக ஒழுங்கும் வேதனைக்குரியது என்பதுடன்
அச்சமூட்டக்கூடியதும்கூட...
இந்த ஒட்டு மொத்த சாராம்சத்துக்குள்ளிருந்துதான் நாம் இந்த உலகத்தோடு பேசவேண்டிய - அழுத்தமாகச் சொல்லவேண்டிய முக்கிய பேசுபொருள் வருகிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல் அக் கருத்தரங்கில் நாம் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக எதை எதையோ கண்டடைந்தோம். ஏனெனில் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தில் நாங்களும் ஒரு அங்கம். இப்போது முழுத் தமிழினமுமே அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது. ளுஉhணைழனை என்ற உளவியல் சொல்லாடல் ஒரு தனிமனித உயிரியின் மனப்பிறழ்வு நிலை குறித்துப் பேசுகிறது. இங்கே ஒட்டு மொத்த இனமுமே அத்தகைய நிலைக்குள்ளாகித் தவிக்கிறது. இதைத்தான் நாம் இப்போது கூட்டு மன அதிர்வு என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வருகிறோம்.
நாம் இந்த உலகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம், நாம் புறக்கணிக்கப்படுகிறோம், ஒதுக்கப்படுகிறோம் என்று ஒட்டு மொத்த உலகத் தமிழினமுமே அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தமது அரசியல் வாழ்வியல் எதிர்காலத்தை ஒரு சூனிய வெளியில் வைத்தே புரிந்து கொள்ளத் தலைப்படுகிறது. இதன் வழி முழுத் தமிழினமும் கூட்டு மன அதிர்வுக்குள்ளாகித் தவிக்கிறது. இப்போது சர்த்தாரை மீண்டும் ஒரு முறை அழைப்போம். அவர் சொல்கிறார்,"தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது".
உண்மையில் இந்தக் ஆய்வுக்கு "புலிகளின் அழிவுக்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு யார் பொறுப்பு?" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில் புலிகளுக்கு "பயங்கரவாதப்" பட்டத்தை சுமத்தி ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் சிங்களத்திற்கும் அதன் பின் நிற்கும் இந்தியா உட்பட மேற்குலத்திற்கும் ஒரு சிறிய செய்தி இருக்கிறது. அதாவது புலிகளின் அழிவுக்குப்பிறகும் நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி வைத்திருக்கும் "பயங்கரவாதம்" இருக்கும். அதுதான் அந்த செய்தி. எமது ஆய்வின் "பயங்கரமான" செய்தியும்கூட.
ஏனெனில் முழு இனமுமே அதிர்வுக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது. அது ஒரு கட்டற்ற வன்முறையை எந்த நேரமும் யார் மீதும் பிரயோகிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது உளவியல் வாய்ப்பாட்டிற்கமைய இந் நிலையை வரைவிலக்கணப்படுத்தினால் அது ஒரு கூட்டு "Schizoid" நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. "Schizoid" என்ற மனப்பிறழ்வின் உச்சநிலை தற்கொலை அல்லது குற்றம். தமிழினம் நாளை இரண்டில் எந்த முடிவை எடுக்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகிறவர்கள் சிங்களத்தின் அரச பயங்கரவாதத்திற்கு துணைநிற்கும் அனைத்துசக்திகளும்தான். தற்கொலைகள் தொடங்கிவிட்டது. குற்றங்கள்தான் மீதமிருக்கின்றன...
இப்போது ஒட்டுமொத்த தமிழினமும் இந்த கூட்டு மன அதிர்வு என்ற வரையறைக்குள் எப்படி வந்தது என்பதை நாம் முதலில் பார்ப்பது நல்லது. இது முக்கியமானது மட்டுமல்ல வரலாற்று ரீதியான பல உண்மைகளையும் உள்ளடக்கியது.
தமிழர்களின் போராட்ட சக்திகளான தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு சமாதான காலத்தில் "பயங்கரவாதிகள்" என்று இந்த மேற்குலகம் அறிவித்ததிலிருந்துதான் இந்த அதிர்வு தொடங்கியது. போராடும் காலத்தில்கூட இத்தகைய அறிவிப்பை வெளியிடாத மேற்குலகம் ஒரு சமாதான காலத்தில் இந்த நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றியபோது தொடங்கிய இந்த மன அதிர்வுக்கான முதற் பொறுப்பாளிகள் அவர்கள்தான். சிறீலங்கா அரசின் குருரமான கபட நாடகத்தில் மேற்குலகமும் தம்மை ஒரு பங்காளிகளாக்கிவிட்டனவோ என்ற அச்சம்தான் இக்கூட்டுமன அதிர்வின் முதற் புள்ளி.
மேற்குலகத்தின் இந்த மோசமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை சிறீலங்கா இனவாத அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு மேற்குலகம் வழங்கிய ஆசீர்வாதமாகவும் அங்கீகாரமாகவும் கருதியதில் வியப்பேதும் இருக்க முடியாது. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலுள்ள "பயங்கரவாத" கூறுகளை அடையாளங் காணத் தலைப்பட்ட மேற்குலகம் அதன் பின்னுள்ள அறத்தையும் நியாயத்தையும் சீர் தூக்கிப் பார்க்க தவறியிருந்தது. அன்றைய உலக ஒழுங்கும் அதற்கு இடமளித்தது துரதிஸ்டவசமானது.
நாம் மீண்டும் ஒரு முறை சர்த்தரை அழைப்போம். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் ளயசவசந ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றுவாயும் அவர்களின் போராட்ட வழி முறைகளில் காணப்பட்ட "பயங்கரவாத" கூறுகளும் சர்த்தரின் எந்த வியாக்கியானத்தையும் மீறியதல்ல. அவ்வளவு ஏன் இன்றுகூட அந்த கருத்தரங்கின் முன்மொழிவும் புலிகளின் போராட்டத்தின் வழி முறைகளை சமன்செய்பவையேயாகும்.
சர்த்தரின் மேலதிக கூற்றுப்படி, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் ஒரு இனத்தை அடி பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் அவர்கள் பதில் சொல்கிறார்கள். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று அவர்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது அவர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள். அவர்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறார்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் அவர்கள் அதை தமதாக்கிக் கொண்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் வன்முறையின் குழந்தைகள் - இதன் வழி தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையின் குழந்தைகள்.
இதன்வழி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறை வடிவத்தையும் அதன் வடிவ மாறுதலையும் இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ சூட்ட வேண்டியது "பயங்கரவாத" பட்டங்கள் அல்ல... தமிழினத்திற்கான அரசியல் தீர்வு. மக்களிலிருந்துதான் புலிகள் பிறப்பெடுத்தார்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்பதற்கும் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்பதற்கும் ஒரு மெல்லிய கோடு இடைவெளியேயுள்ளது.
ஏனெனில் அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் தரித்திருக்கிறார்கள். அதற்கான அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த இடைவெளியைத் தவிர வேறு எந்த இடைவெளியும் இரு தரப்பையும் பிரித்துப் பார்க்க உதவாது. அந்த மெல்லிய கோட்டைக்கூட அனைத்துத் தரப்பும் இன்று மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில் எல்லோருமே வன்முறையார்களாக மாற வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழினம்.
இன்று அனைத்துத்தரப்பும் சொல்வது போல் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்படுமாயின் புலிகளில்லாத ஒட்டு மொத்த தமிழினமும் பிரயோகிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அந்த வன்முறை வடிவங்களை எதிர்கொள்வதற்கு உலகம் தன்னை தயார் செய்வது நல்லது... இது குறித்து அடுத்த வாரம் எழுதுகிறோம்...
000000000000000000000000000000000000000000
புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை
தமிழ்ச்சூழலைச் சேர்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட சில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் செய்த சுயாதீன ஆய்விலிருந்து மேற்படி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தொடர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் காலத்தின் தேவை கருதி தமது ஆய்வின் முக்கிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.
Monday, May 18, 2009
கேக்கரவன் கேணயனா இருந்தா.....
இவங்க எல்லாம் யாரு???

thanx to : We The People
Thursday, December 11, 2008
Mandal vs Kamandal
இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.
இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.
பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.
என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.
( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.
மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.
எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.
ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா...? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்.... இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை... ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.
எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?
மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.
இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.
ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.
மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்.... கொலைகள்... கொள்ளைகள்... பாலியல் வன்கொடுமைகள்.... காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.
மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.
இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ... வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.
Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.
நன்றி ஆதவன் தீட்சண்யா டி.சே தமிழன்

